கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம்
நித்தம் நித்தம் வாஞ்சிக்கும் சந்தோஷம்//
நான் தேடும் அந்த நல்ல தேசம் //
தொட்டால் இன்றும் என்றும் சுக வாசம்//
1 தங்கமயமான எந்தன் தேவன் முகத்தை
உற்று உற்றுப் பார்த்து நானும் பூரிப்படைவேன்//
அங்கமெல்லாம் சொக்க வைக்கும் அந்த அழகே
ஆவலோடு தொட்டு நானும் முத்தமிடுவேன்
2 பன்னிரெண்டு வாசல்களின் முத்தை எடுத்து
என் மன்னவனின் கழுத்திலே மாலை போவேன்
இன்னும் அந்த நட்சத்திரம் அங்கே போகிறேன் //
நேசர் முகம் மட்டும் அங்கே பிரகாசிக்குமே
3 கண்ணீர் இல்லா அந்த தேசம் நானும் ஏகுவேன்
என் கண்ணாளனை கண்டு கண்டு அக மகிழ்வேன்//
கோடாகோடி தூதரோடு வானவீதியில்//
பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக