திங்கள், 4 ஜூலை, 2016

ஏன் தானியேல் ஜெபத்திற்கு பதில் கிடைக்க 21நாள் ஆனது?

தானியேல் 10:11-21

   "அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்."
"அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்."
பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.
இப்போதும் கடைசி நாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்.
"அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்."
"அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என்வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்."
"ஆகையால் என் ஆண்டவனுடைய அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன்."
"அப்பொழுது மனுஷரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி,"
"பிரியமான புருஷனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்."
"அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்."
சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை.

          இவ்வேத பகுதியில் உலகப் பேரரசுகளுக்கான, கண்ணுக்கு புலனாகாத பிரபுக்களின் போராட்டாங்களைப் பற்றி வாசிக்கிறோம். சாத்தானின் படையானது தீய வல்லமையுள்ள அதிபதிகளை வல்லரசுகளின் சார்பில் வானமண்டலங்களில் நிறுத்தி வைத்திருப்பதாக வாசிக்கிறோம். தானியேலின் காலத்தில்

*பெர்சியாவின் பிரபு இருந்தான் (10:13,20)*

*கிரேக்க அதிபதி வர இருந்தான் (10:20)*

தானியேலுக்காக செய்தி கொண்டு வந்த தூதனை பெர்சிய எல்லைக்குள் நுழைய விடாதபடி பெர்சிய பிரபு 21 நாட்கள் தடுத்து நிறுத்தியிருந்தான்.
அதன்பின் அந்த தூதனுக்கு உதவியாக இஸ்ரவேலின் அதிபதியாக தேவனால் நிறுத்தப்பட்டிருந்த மிகாவேல் வந்த பின்புதான் பெர்சியப் பிரபு வழிவிலகி இடங்கொடுத்தான் (10:21, 12:1) .
ஏனெனில் மிகாவேல் மிகவும் வலிமை படைத்த தூத தளபதியாவர். இவர் பெரிய அதிபதி என்று தானியேல் 12:1லும், பிரதான தூதன் என யூதா 9லும் வாசிக்கலாம். தூதர்கள் நடுவில் இத்தகைய அதிகார வட்ட அமைப்பு உண்டென்பதை பல வேதபகுதிகளும் குறிப்பிடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...