இரண்டாம் வருகையும் இரகசிய வருகையும் ஒன்றா?
இரகசிய வருகை என்பதற்கு ரேப்சர் என்ற ஆங்கிலச் சொல்லை பயன்படுத்துவர்.
வேதாகமத்தில் மூல மொழியில் இத்தகையதான நேரடிபொருள் தரும் சொல் இல்லை.
1தெச 4:17ல் வரும் "எடுத்துக்கொள்ளப்பட்டு" என்பதற்கான கிரேக்க சொல் ஹார்பசோ (harpazo) என்பதாகும்.
இதன் பொருள் எடுத்துச் செல்லுதல், வேகமாகப் பிடித்துக்கொள்ளல், தட்டிப்பறித்தல், பறித்துக்கொள்ளுதல், பிடுங்குதல், பலாத்காரமாக எடுத்துச் செல்லல் என்பதெல்லாம் ஆகும்.
இலத்தீன் வால்கேட் மொழிபெயர்ப்பில் இதற்கு ரேப்பியா என்றச் சொல்லைப் பயன்படுத்தினர். இதிலிருந்து தான் ரேப்சர் எனற சொல்லை இரகசிய வருகைக்காக ஆங்கில மொழியார் பயன்படுத்தத் தொடங்கினர். இது ஒரு இரகசியம் என வேதத்தில் காண்கிறோம் (1கொரி 15:51) எனவேதான் தமிழில் இரகசிய வருகை என்றனரோ? தெரியவில்லை.
இவ்வருகையில் சபை எடுக்கப்பட்டு கிறிஸ்துவுடன் உன்னதத்தில் கொண்டு செல்லப்படும். அப்போது பூமியில் உபத்திரவ காலம் தொடங்கும். இந்த காலமே இஸ்ரவேலரின் தொடர்பில் கர்த்தரின் நாள் எனப்படுகிறது. இக்காலம் அவர்களைப் பிடித்துக்கொள்ளும் நாட்களைக் கொண்டது. அதன் பின்புதான் வெளிப்படையாக கிறிஸ்து வருவார். தொடர்ந்து ஆயிரமாண்டு அரசாட்சி தொடங்கும்.
Matthew 24:27 "மின்னல் கிழக்கிலிருந்து மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்."
கிறிஸ்துவின் வருகை சபையின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆகும். அவர் வருகை இரண்டு கட்டங்களாக நிகழும். சபைக்காக அவர் வருவதை நடுவான வருகை என்பர். இந்த வருகை எப்போது நிகழும் எனச் சொல்ல முடியாது. எந்தச் சிறப்பான அடையாளங்களும் அதற்கு முன் அடையாளமாக நடக்கும் எனக் கூறமுடியாத படி நினையாத வேளையில் அது நிகழும்.
இரகசிய வருகையின் போது
1. மரித்தோர் உயிர்ப்பர் (1தெச 4:16)
2. உயிரோடிருக்கும் பரிசுத்தவான்கள் மருரூபமாகி அவருக்கு எதிர்கொண்டு போக மேகங்கள் மீது எடுக்கப்படுவர் (1தெச 4:16)
3. சபை சேர்த்துக் கொள்ளப்பட்டவுடன் தடை செய்கிறவர் (ஆவியானவர்) மாற்றப்படுவார். (2தெச 2:6-8)
4. விசுவாசிகள் வானில் பிரதிபலன்களைப் பெறுவர் (2கொரி 5:10, 1கொரி 3:12-15)
5.கிறிஸ்துவும் சபையும் திருமண நாளில் மகிழ்வர் (வெளி 19;7)
6. பூமியில் தேவ கோபம் (உபத்திரவகாலம்) தொடங்கும் (வெளி 6- 19 அதிகாரங்கள்)
------ இதுவே இரகசிய வருகை
கிறிஸ்து நடுவானில் வெளிப்படும்போது (அதாவது) இரண்டாம் வருகையின் போது
1. கர்த்தர் ஆரவாரத்துடன் இறங்கிவருவார்.
2. பிரதான தூதனுடைய சத்தம் முழங்கும்.
3. தேவ எக்காளம் முழங்கப்படும்.
கிறிஸ்து ஆரவார சத்தமுடன் பரலோகத்திலிருந்து நடுவானுக்கு இறங்கி வரும்போது , அவரது சத்தத்தை மரித்தோர் கேட்டு உயிரடைவர் (யோவா 5:25,28,29)
அப்பொழுது பிரதான தூதனாகிய மிகாவேலின் சத்தம் முழங்கும் அது ஆர்பரிப்புடன் கூடியதாக இருக்கும்.
www.daisansam.blogspot.com