துதி துதி இயேசுவை துதி துதி
துதிகளின் தேவனைத் துதி துதி
துதி துதி இயேசுவை துதி துதி
தூயாதி தூயனை துதி துதி
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் வல்லமீட்பர்
சேனைகளின் கர்த்தர் மகாராஜா – அந்த
ராஜவுக்குப் பிள்ளை நீ துதி துதி – துதி துதி
பாவங்களை மன்னித்தாரே துதி துதி – தீய
சாபங்களை தள்ளினாரே துதி துதி
ரோகங்களை தீர்த்தவரை துதி துதி – இனிய
ராகங்களை தந்தார் பாடி துதி துதி
– சேனைகளின் கர்த்தர்
சோதனையில் தாங்கினாரே துதி துதி
வேதனையில் தேற்றினாரே துதி துதி
வியாதியிலே வைத்தியராம் துதி துதி
வியாகுலத்தை தீர்த்தவரை துதி துதி
ஜீவனைக் கொடுத்தவரைத் துதி துதி ஏன்றும்
ஜீவனோடிருப்பரைத் துதி துதி
சீயோன் மணவாளனை நீ துதி துதி
ஜெயக் கிறிஸ்யேசுவை நீ துதி துதி
காலை மாலை எப்பொழுதும் துதி துதி
காலத்திலும் நேரத்திலும் துதி துதி
துன்பத்திலும் துக்கத்திலும் துதி துதி
துதியில் வாசம் பண்ணும் இயேசுவை நீ துதி துதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக