கணினி, மொபைல் தூக்கத்தை குறைக்கிறதா ?
மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மனிதன் தூங்கியதை விட தற்போது மிகக் குறைந்த அளவிற்கே தூங்குகிறான். இதற்குக் காரணம் மின்சாரம்தான் என்றால் அது மிகவும் தவறு. மனிதன் தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டதுதான் குறைவான தூக்கத்திற்கு காரணமாகிறது.
அதேப்போல, கணினியில் அதிக நேரம் வேலை செய்வதாலும், செல்பேசியாலும் மனிதனின் தூக்கம் குறைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் மனிதனின் தூக்கத்தை எந்த வகையிலும் கணினியோ, செல்போனோ குறைக்கவில்லை என்கிறது பல்வேறு ஆய்வு முடிவுகள்.
அதிக நேரம் கணினி முன்பு அமர்ந்து இணையத்தில் உலா வரும் மனிதன், அதன் மீதான ஆர்வத்தினால், நேரம் கழிவது தெரியாமல் இருந்து விடுவதுண்டு. அதுபோலவே, செல்பேசியில் பேசுவதாலும், இணையத்தைப் பயன்படுத்துவதாலும் அதிக நேரம் கண் விழித்திருப்பது நேரிடுகிறதேத் தவிர, அறிவியல் ரீதியாக செல்போனோ, கணினியோ மனிதனின் தூக்கத்தை விழுங்க வில்லை என்பதுதான் உண்மை என்கிறது ஆய்வுகள்.
குறிப்பிட்ட நேரம் வரை கணினியில் பணியாற்றிவிட்டு அல்லது இணையத்தில் உலாவிவிட்டு குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்திற்கு உறங்க சென்று விடும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அதேப்போலத்தான் செல்பேசியிலும், அதிக நேரம் பேசிக் கொண்டிராமல், அரட்டை அடிக்காமல் எப்போதும் நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் சென்றுவிட்டால் தானாகவே அந்த நேரத்தில் தூக்கம் வந்து விடும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி, குறித்த நேரத்தில் எழுந்து பழகிவிட்டால், உறக்கத்திற்கு எந்த பாதிப்பும் வராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக