ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ஆதியாகமம் - சிறு குறிப்பு

   🌹ஆதியாகமம்🌹

☀பஞ்சாகமங்களிலும், முழு வேதாகமத்திலும் முதல் புத்தகமாக வருவது இந்த ஆதியாகமமே.
☀ ஆதியாகமத்தில் 50 அதிகாரங்கள், 1533 வசனங்கள் உள்ளன.
☀ பிரப்பஞ்சத்தின் ஆரம்பம், மனிதனின் ஆரம்பம், இஸ்ரவேலரின் ஆரம்பம் என்று
அநேக சரித்திர ஆரம்பங்களை இப்புத்தகத்திலே காணலாம்.
☀ சாத்தான் அதிகமாய் வெறுக்கக்கூடிய புத்தகங்களில் மிகவும் முக்கியமானதாக வேதபண்டிதர்கள் கருதுவது ஆதியாகமமும், வெளிப்படுத்தின விசேஷமும் தான். காரணம், இவை இரண்டிலும் சாத்தானுடைய முடிவு எப்படி இருக்கும் என்று தீர்க்கதரிசனமாக முன்றுரைக்கப்பட்டுள்ளது.
☀ ஆதியாகமம் ஆதாம் முதல் யோசேப்பு வரை 2000 ஆண்டுகால சரித்திரத்தை உள்ளடக்கியது.
☀ ஆதியாகமத்தின் ஆசிரியர் மோசே என்று வேதப்பண்டிதர்கள் கருதுகின்றனர்.
☀ நாம் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் ஆதாம், ஏவாள், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள்,
ஈசாக்கு ரெபேக்காள், இஸ்மவேல், யாக்கோபு, யோசேப்பு , மற்றும் பார்வோன்.
☀ நாம் அவசியமாக அறிந்துகொள்ளவேண்டிய இடங்கள் ஏதேன் தோட்டம், அராத்மலை, பாபேல், வளர், ஆரான், சீகேம், சோதோம், கொமொரா, எப்ரோன், பெயர்செபா, பெத்தேல் மற்றும் எகிப்து.
☀ஆதியாகமம் எழுதப்பட்ட மொழி எபிரேய மொழியாகும்.
☀ ஆதியாகமத்தில் 71 வாக்குத்தத்தங்களும் 106 கட்டளைகளும் உள்ளன.
☀ ஆதியாகமத்தில் நிகழ்வுகளை
நிரூபிக்கக்ககூடிய அநேக தொல்பொருள்
ஆராய்ச்சியின் ஆதாரங்கள் இன்றும் வெளிதாட்டின் கிறிஸ்தவ அருங்காட்சியகங்களில் காணலாம்.
☀ சர் ஐசக் நியூட்டன் உள்பட பல விஞ்ஞானிகள் தேவனுடைய படைப்பை பார்த்து அதிசயத்து ஆதியாகமத்தை போற்றியுள்ளனர்.
☀ ஆதியாகமத்திலே சிறுவர்களை அதிகமாக கவர்ந்த பகுதி நோவா தாத்தா பேழையும், 6- நாள் சிருஷ்டிப்புமாகும்.
☀ ஆதியாகமத்தில் மொத்தம் சம்பவங்கள் தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கப்பட்டுள்ளன.
☀ ஆதியாகமத்தில் மிக சிறிய அதிகாரம் 16, பெரிய அதிகாரம் 24.
☀ஆதியாகமத்தில் உள்ள 1533 வசனங்களில் 1385 வசனங்கள் முழுக்க முழுக்க சரித்திரத்தை சொல்லுகிறது.
☀ தேவனிடமிருந்து மனிதனுக்கு அருளப்பட்ட செய்திகள் மொத்தம் 35
ஆகும்.
☀ ஆதியாகமம் எழுதப்பட்ட காலம் கி.மு.
1688-ஆக இருக்கும் என்று கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...