சனி, 28 நவம்பர், 2015

ஆபகூக் - நீதிமான் பிழைப்பான்

நீதிமான் பிழைப்பான்

         🌹ஆபகூக் 🌹

💥மூல மொழியாகிய எபிரேயத்தில் “காவக்கூக் (Chavaqquq)” என்று அழைக்கப்படுகிறது.

💥ஆபகூக் என்றால் “மல்யுத்த வீரன்” அல்லது “அனைப்பவன்” என்று அர்த்தம்.

💥நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 35-வது புத்தகமாக வருகிறது.

💥ஆபகூக்கைப் பற்றி பின்னனியோ குணாதிசயங்களோ அவ்வளவோ தெரியவில்லை. ஆபகூக் அசீரியாவைக் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், கல்தேயர்களைப் பற்றியும் அவர்களுடைய பெருகுகிற இராணுவ பெலன்களைக் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

💥ஆகவே, அவர் நேபுகாத்நேச்சார் (1:6, 2:3) யூதேயாவை, தாக்கும் நாட்களுக்கு முன்பாக அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார் என்று தெரிகிறது.

💥அக்காலக் கட்டத்தில் யோயாக்கீம் யூதேயாவை அரசாண்ட காலக்கட்டம் என்று உணரலாம்.

💥ஆபகூக், ஆலயத்தில் இருந்த லேவிய இசைப்பாடகரில் ஒருவரா என்பதை உறுதியாக கூறமுடியாது. ஆனால், “இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்” என இந்தப் புத்தகத்தின்முடிவில் காணப்படும் குறிப்பிலிருந்து ஒருவேளை அவர் பாடகராக இருந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

💥ஆபகூக்கும் எரேமியாவும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகின்றனர்.

💥மொத்தம் 3 அதிகாரங்களும், 56 வசனங்களையும் கொண்டுள்ளது.

💥2-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 1-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

💥ஆபகூக் புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்களில் தீர்க்கதரிசிக்கும் கர்த்தருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

💥மூன்றாவது அதிகாரம் “அர்மகெதோன்” போரின் நாளில் கர்த்தரின் மகத்துவத்தைப் பற்றி கூறுகிறது. அதன் விலாவாரியான எழுத்துநடையின் வல்லமையிலும் உணர்ச்சித் துடிப்பிலும் இதற்கு நிகரே இல்லை.

💥மேலும் இது, “எபிரேய செய்யுட்களிலேயே மிகவும் நேர்த்தியான, சிறப்பான ஒன்று” என அழைக்கப்படுகிறது.

💥இரக்கம் காட்டும்படியான ஜெபத்தை ‘விண்ணப்பப் பாடலாக’ அதாவது புலம்பலாக ஆபகூக்பாடுகிறார். உதாரணமாக, கடந்த காலத்தில் சிவந்த சமுத்திரத்திலும் வனாந்தரத்திலும் எரிகோவிலும் கர்த்தர் செய்த வல்லமை மிக்க செயல்களை அதில் அவர் குறிப்பிடுகிறார்.

💥அர்மகெதோனில் கர்த்தர் கோபத்தோடே வரும்போது துஷ்டர் அழிக்கப்படுவார்கள் என்பதையும் தீர்க்கதரிசி முன்னறிவிக்கிறார்.

💥அந்த ஜெபம் பின்வரும் வார்த்தைகளோடு முடிவடைகிறது: “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான் கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.” (ஆபகூக் 3:1,19).

💥“நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்.” ஆனால், “துரோகிகளை” பயன்படுத்தி கர்த்தர் யூதாவுக்குத் தண்டனை வழங்கப் போகிறார் என்பதை அறிந்து ஆபகூக் அதிர்ச்சி அடைகிறார். (ஆபகூக் 1:3,6,13).

💥எருசலேமுக்கு விரோதமாய் கல்தேயர் எழும்புவது யூதர்களுக்கு நம்ப முடியாததாய் இருந்திருக்கலாம்.

💥ஆபகூக் தீர்க்கதரிசனம் உரைக்கத் துவங்கிய சமயத்தில், யூதாவை எகிப்து ஆட்டிப்படைத்து வந்தது. (2 இராஜாக்கள் 23:29,30,34).

💥அப்போது, பாபிலோனியர்களின் ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்திருந்த போதிலும், அவர்களுடைய படைவீரர்கள் பார்வோன் நேகோவை இன்னும் முறியடித்திருக்கவில்லை. (எரேமியா 46:2).

💥அதுமட்டுமல்ல, கர்த்தருடைய ஆலயம் எருசலேமில் இருந்தது; தாவீதின் பரம்பரையில் வந்த ராஜாக்கள் அங்கே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தார்கள்.

💥அப்போதிருந்த யூதர்களால் கடவுளின் ‘கிரியையை’ அதாவது, கல்தேயர்களைக்கொண்டு எருசலேமை அவர் அழிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாதிருந்தது.

💥ஆபகூக் சொன்ன விஷயங்கள் அவர்களுக்கு நம்ப முடியாததாக இருந்த போதிலும், எருசலேமை பாபிலோனியர் அழிப்பதைப் பற்றிய தரிசனம் கி.மு. 607-ல் ‘நிறைவேறியது.’

💥நீதிமான்கள் தொடர்ந்து வாழ்வார்கள் என்றும் விரோதிகளோ தண்டனையிலிருந்து தப்பிக்கமாட்டார்கள் என்றும் ஆபகூக்கிற்கு உறுதி அளிக்கப்படுகிறது.

💥“அவன்” என இங்குச் சொல்லப்பட்டிருப்பது ஒரு தொகுதியாக பாபிலோனியரைக் குறிக்கிறது.

💥பகைவரான கல்தேயருக்கு வரவிருக்கும் ஐந்து (ஐயோக்கள்) இன்னல்களையும் ஆபகூக் பதிவு செய்கிறார். (ஆபகூக் 2:2-20).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...