செவ்வாய், 10 நவம்பர், 2015

எஸ்தர் - யூத மக்களை அழிவிலிருந்து காப்பாற்றிய

யூத மக்களை
அழிவிலிருந்து காப்பாற்றிய

            🌹 எஸ்தர் 🌹

☀ எபிரேய
மொழியில் எஸ்தர் பெயர் “ אסתר ” என்றும்,
கிரேக்கத்தில் “Εσθήρ” என்றும் வழங்குகிறது.
அவருடைய இயற்பெயர் அதசா (Hadassah).

☀ எஸ்தர்,
எபிரேய மொழியில் இதன் பொருள் “நட்சத்திரம்”
என்பதாகும்.

☀ வேதத்திலே 2 புத்தகங்கள்
பெண்களின் பெயரை கொண்டுள்ளது. ஒன்று
ரூத் மற்றொன்று எஸ்தர்.

☀ நம்முடைய பரிசுத்த
வேதாகமத்திலே 17-வது புத்தகமாக வருகிறது.

☀ இப் புத்தகத்தை எழுதியவர் மொர்தெகாய்
எனும் பெயருடைய வயதான ஒரு யூதர்.
இவருடைய வளர்ப்பு மகளே எஸ்தர். அத்தோடு இப்
புத்தகத்தில் வரும் பிரதான
கதாப்பாத்திரத்திலும் ஒருவராவார்.

☀ பெர்சிய
ராஜாவான அகாஸ்வேருவுடைய, அதாவது
முதலாம் சஷ்டாவுடைய (Xerxes I)
ஆட்சிக்காலத்தில் சுமார் 18வருட
காலப்பகுதியை இது உள்ளடக்குகிறது.

வேதாகமத்தில் எஸ்தர் வரலாறு
நெகேமியாவிற்குப் பின் தோன்றினாலும்,
உண்மையில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக
எஸ்தரின் காலம் அமைந்துள்ளது.

☀ எஸ்தர்,
காண்பவர்களிடமெல்லாம் தயவை பெற்றாள்.
அவ்வாறே அரசனுக்கும் பிரியமான
மனைவியானதோடு தன் இன மக்களை
அழிவிலிருந்து காப்பாற்றுகிறாள்.

அரசனிடம் செல்வதற்கு முன்பு எஸ்தரும் மற்ற
யூதர்களும் மூன்று நாட்கள் உபவாசமிருந்தது,
கடவுளில் நம்பிக்கை வைத்ததைக் காட்டுகிறது.
(எஸ்தர் 4:16)

☀ எஸ்தர் புத்தகத்தில் அடங்கிய
சம்பவங்கள் அனைத்தும் சூசான் அரண்மனையில்
நிகழ்ந்தன.

☀ எஸ்தர் புத்தகம் கிரேக்க மொழியில்
சில பகுதிகள் அதிகமாகச் சேர்க்கப்பட்டதால்,
எபிரேய மொழியில் இப் புத்தகத்திலிருக்கும்
மொத்தம் 167 வசனங்கள் கிரேக்க மொழியில் 270
வசனங்களாக விரிந்துள்ளன.

☀ கிரேக்க
மொழியில் சேர்க்கப்பட்ட பகுதிகளில் கடவுளின்
பெயர் குறைந்தது ஐம்பது முறையாவது
வருகிறது. எபிரேய மொழியில் கடவுள் பெயர்
நேரடியாக ஓரிடத்திலும் வரவில்லை.

☀ எபிரேய
மொழியில் அந்த டெட்ராகிரமாட்டன்
(நான்கெழுத்துக்கள்) நான்கு இடங்களில்
அக்ராஸ்டிக் (acrostic) முறையில்
காணப்படுகிறது. அதாவது ஒன்றன் பின் ஒன்றாக
வரும் நான்கு சொற்களின் முதல்
எழுத்துக்களைக் கூட்டினால் அது ய்ஹ்வ்ஹ்
(YHWH, எபிரேயத்தில், יהוה) அல்லது
“யாவே” (Yahweh) என்று வாசிக்கிறது. இந்தப்
பெயர் கர்த்தருடைய நாமங்களில் ஒன்று.
குறைந்த பட்சம் மூன்று பூர்வ
எபிரேயகையெழுத்து பிரதிகளில் இந்த
முதலெழுத்துக்கள் முக்கியப்படுத்திக்
காட்டப்பட்டுள்ளன.

☀ மேலும் மசோராவில் இவை
சிவப்பு எழுத்துக்களால்
குறிப்பிட்டுக்காட்டப்பட்டுள்ளன.

☀ மேலும் எஸ்தர்
7:5-ல், “நான் அவ்வாறே நிரூபிப்பேன்” என்ற
கடவுளுடைய அறிவிப்பு அக்ராஸ்டிக்
முறையில் வருவதாக தோன்றுகிறது.

கடவுளுடைய பெயர் இதில் காணப்படவில்லை
என்பதையே இதற்கு ஆதாரமாக காட்டி இந்த
புத்தகத்தில் பரிசுத்த ஆவியானவரால்
ஏவப்பட்டதல்ல, அதனால் எந்தப்பயனுமில்லை, அது
ஓர் அருமையான கற்பனை கதையே என்று
சொல்லும் பலருக்கு இப் புத்தகம் பரிசுத்த
ஆவியானவரின் ஏவுதளுக்குற்பட்டது தான்
என்பதை தெளிவாக விளக்குகின்றது.

   எபிரேய வேதாகமத்தோடு எஸ்தர்
புத்தகத்தையும் சேர்த்து தொகுத்த எஸ்றா, இப்
புத்தகம் கட்டுக்கதையாக இருந்திருந்தால்
நிச்சயமாகவே தவிர்த்திருப்பார்.

☀ “எஸ்தர்”
என்கிற வார்த்தை இப் புத்தகத்திலே 31 தடவை
வருகிறது.

☀ மொத்தம் 10 அதிகாரங்களும், 167
வசனங்களும் கொண்டுள்ளது.

☀ 9-வது
அதிகாரம் பெரிய அதிகாரமாகவும் 10-வது
அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

  முக்கியமான கதாபாத்திரங்கள் - எஸ்தர்,
மொர்தெகாய், அகாஸ்வேரு, ஆமான், வஸ்தி. »
சுருக்கம் : பெர்சிய அரசனான அகாஸ்வேருவின்
மனைவியான அரசி வஸ்தி அவனுக்கு கீழ்ப்படிய
மறுக்கிறாள். அதனால் மொர்தெகாயின்
உறவினளான யூதப்பெண் எஸ்தர் அவளுக்கு
பதிலாக அரசியாகிறாள். மொர்தெகாயையும்
எல்லா யூதர்களையும் கொலை செய்ய
ஆகாகியனான ஆமான் சதித்திட்டம் தீட்டுகிறான்.
ஆனால் அவன் உண்டாக்கின கழுமரத்தில் அவனே
தூக்கிலிடப்படுகிறான். இதில் எஸ்தரின்
சாதூர்யமான அநுகள், தனது யூத மக்களை அந்த
அழிவிலிருந்து காப்பாற்றப்படுகிறது.
மொர்தெகாயோ பிரதம மந்திரியாக
உயர்த்தப்படுகிறார், யூதர்களும்
விடுவிக்கப்படுகின்றனர்.

☀ யூதர்கள் இந்த
விடுதலையின் வெற்றியை “பூரிம்” பண்டிகை
என இந்நாள் வரை கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள பெர்சிய
பழக்க வழக்கங்கள் மிகவும் நுட்பமாகவும்
தொல்பொருள் கண்டுபிடிப்புகளுக்கும்
சரித்திரப்பூர்வ உண்மைகளுக்கும்
இசைவாகவும் உள்ளன.

☀ உதாரணமாக,
பெர்சியர்கள் ஒரு மனிதனை எவ்வாறெல்லாம்
கௌரவிப்பார்கள் என்பதை எஸ்தர் புத்தகம்
நுட்பமாக விவரிக்கிறது. (எஸ்தர் 6:8)

☀ அரசனின்
அரண்மனை பற்றி எஸ்தர் புத்தகத்தில் காணப்படும்
விவரிப்புகள் அனைத்தும் மிகவும் சிறிய
விஷயத்திலும் கூட துல்லியமாக இருப்பதைத்
தொல்பொருள் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக