ஞாயிறு, 29 நவம்பர், 2015

செப்பனியா - கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது

கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது

   🌹 செப்பனியா 🌹

☀ மூல மொழியாகிய எபிரேயத்தில் “ட்செஃபான்யா (Tsephanyah)” என்று அழைக்கப்படுகிறது.

☀ செப்பனியா என்றால் “கர்த்தர் மறைத்தார்” அல்லது “பொக்கிஷமாக வைத்தார்” என்று அர்த்தம்.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 36-வது புத்தகமாக வருகிறது.

☀ செப்பனியா, யூத அரசனாகிய எசேக்கியாவின் சந்ததியில் வந்த அரச வம்சத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். என்றாலும் அந்தத் தேசத்தில் நிலவிய நிலைமைகளை அவர் கடுமையாய் விமர்சித்தார். (செப். 1:1, 4,)

☀ யூதாவில் திரும்பிய திக்கெல்லாம் மக்கள் பாகாலை வழிபடுகிறார்கள். தம் தீர்க்கதரிசி செப்பனியா மூலமாக கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டுவேன்.’ “கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது” என செப்பனியா எச்சரிக்கிறார். (செப்பனியா 1:4, 7, 14) கடவுளின் சொல்படி நடப்பவர்கள் மட்டுமே அந்நாளில் ‘மறைக்கப்படுவார்கள்.’ (செப்பனியா 2:3)

☀ யூதா அரசன் யோசியாவுடைய ஆட்சியின் ஆரம்ப காலத்தில் (கி.மு. 659-629) பாகால் வழிப்பாடு தலைவிரித்தாடியது.

☀ இந்த அசுத்தமான வழிப்பாட்டை “அந்நிய தெய்வங்களின் பூசாரிகள்” தலைமைதாங்கி நடத்தினர்.

☀ அப்போது தீர்க்கதரிசி செப்பனியா அறிவித்த இந்தச் செய்தி எருசலேமின் ஜனங்களைத் திடுக்கிட செய்திருக்கும்.

☀ அழிவு பற்றிய ஓர் அறிவிப்புடன் இந்தப் புத்தகம் தொடங்குகிறது. “தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (செப். 1:2)

☀ செப்பனியாவின் முயற்சியால் நல்ல பலன்கள் கிடைத்தன.

☀ எட்டு வயதில் சிங்காசனத்தில் அமர்ந்த அரசன் யோசியா, தன் ஆட்சியின் 12-வது ஆண்டில் ‘யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்க’ தொடங்கினார். பொய் வழிபாட்டை அடியோடு அழித்து, ‘கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்த்து,’ பஸ்கா ஆசரிப்பை திரும்ப தொடங்கி வைத்தார். (2 நா. அதி. 34, 35)

☀ எனினும், அரசன் யோசியாவின் சீர்திருத்தங்கள் தற்காலிகமாகவே இருந்தன. ஏனெனில் அவருக்கு பிறகு அவருடைய மூன்று குமாரரும் பேரன்களில் ஒருவனும் ஒருவர்பின் ஒருவராக ஆட்சி செய்தனர். இவர்கள் எல்லாருமே கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தனர்.

☀ “செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்” யோசியாவின் 12-ம் ஆண்டாகிய கி.மு. 648-க்கு முன்பே ஏற்பட்டது என்றே தோன்றுகிறது.

☀ அவர் யூதாவிலிருந்து பேசுவதாக முதலாம் வசனம் குறிப்பிடுகிறது.

☀ அதுமட்டுமல்ல, எருசலேமின் சுற்று வட்டாரங்களையும் பழக்கவழக்கங்களையும் பற்றி விவரமாக அறிந்திருந்ததும் அவர் யூதாவில்தான் இருந்தார் என தெரிவிக்கின்றன.

☀ இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள செய்தி திகிலூட்டுவதாகவும் அதேசமயம் ஆறுதலளிப்பதாகவும் உள்ளது.

☀ இதன் பெரும்பகுதி, வெகு சீக்கிரத்தில் வரவிருக்கிற அச்சமேற்படுத்தும் நாளாகிய கர்த்தருடைய நாளிலேயே கவனத்தை ஊன்றவைக்கிறது.

☀ ஆனால் அதேசமயம், “கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிரு”க்கும் மனத்தாழ்மையுள்ள ஒரு ஜனத்தை கர்த்தர் திரும்ப நிலைநாட்டுவார் என்றும் அது முன்னறிவிக்கிறது.

☀ இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் நம்பகத் தன்மையை சந்தேகிக்கவே முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...