கிறிஸ்தவ சபைகளுடைய ஆராதனையில் கலந்துவிட்ட இவைகள் துரத்தப்பட வேண்டும்.
1.அதிர வைக்கும் ராக் இசைகள்.
2.புகை போடுவது
3.பெண்களை முன் நிறுத்தி நடனமாட வைப்பது.
4.ஊளையிடுவது. அலறி கத்துவது
5.அநாகரீகமான ஆடை அணிந்து ஆராதனை நடத்துவது குறிப்பாக,
6.ஜீன்ஸ், ஷூ, தாடி அலங்காரம், பரட்டை முடி,
7.கலர் அடிக்கப்பட்ட முடியோடு ஆடுவது.
8.சினிமா பாணியில் கலர் லைட் போடுவது.
9.அருவருப்பான செய்கைகள், மற்றும்
10. நடன அசைவுகள் மட்டுமல்ல..,
பக்தி விருத்தியை தூண்டாத குத்துபாடல்கள் டப்பாங்குத்து பாடல்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்காது என்பதை கிறிஸ்தவா்கள் அறியனும்.
ஆராதனை என்ற பெயரில் இசைக்கும் பாடலுக்கும் நீண்ட நேரம் ஒதுக்கிவிட்டு, தேவ செய்தியை குறைத்துக் கொள்வது ஆவிக்குரிய வளா்ச்சியை முற்றிலுமாக தடுத்துவிடும் எச்சரிக்கை. அத்துடன்,
இவை கிறிஸ்தவா்களுடைய ஆவிக்குரிய குருட்டாட்டத்திற்கு காரணமாகிவிடும். எனவே ஆவிக்குரிய ஆராதனை மீது அக்கறையுள்ள விசுவாசிகள் இவைகளை நம்முடைய சபைகளை விட்டே விரட்டிவி்ட வேண்டும்.
நாம் செய்கிறதான ஆராதனையில் இருக்க வேண்டிய முக்கியமானவைகள்.
1. பயபக்தி
2.நன்றி பலிகள் (கொலோ 3:15)
3.ஸ்தோத்திர பலிகள்(சங் 50: 3)
4.துதி கனம் மகிமை(வெளி 4: 9)
5.வணக்கமாய் பணிந்து தொழுது கொள்ளுதல் (வெளி4:10) இவைகளுக்கு ஏற்ற பாடல்கள்
6.சாட்சி பகுதிகள் (யோவான் 15:26)
7.காணிக்கை (லூக்கா 21:1)
8.தேவ செய்தி (மத் 5:2) போன்றவைகளே..!
.இயேசு சீக்கிரம் வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக