🌹முதல் முதல் 🌹
தேவன் முதலாவது நாள் சிருஷ்டித்தது “வெளிச்சம்”. – ஆதி 1:3.
முதலாவது சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் “ஆதாம்”. - ஆதி 2:19
முதலாவது சிருஷ்டிக்கப்பட்ட மனுஷி “ஏவாள்”. – ஆதி 3:20.
முதலாவது கப்பல் கட்டியவன் “நோவா”. – ஆதி 6:14-22.
முதலாவது பிறந்த மனிதன் “காயீன்”. – ஆதி 4:1.
முதலாவது கொலைக்காரன் “காயீன்”. – ஆதி 4:8.
முதலாவது கர்த்தருக்கு காணிக்கை கொண்டு வந்தவன் “காயீன்”. – ஆதி 4:3.
முதலாவதும் கடைசியுமான ஜலபிரளயம் நோவா காலத்தில் வந்தது. – ஆதி 7:11,12.
முதலாவது தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளம் “வானவில்” – ஆதி 9:12-17.
முதலாவது திராட்சத்தோட்டத்தை உண்காக்கின மனிதன் “நோவா”. – ஆதி 9:20
முதலாவது எழுதப்பட்டுள்ள பறவை “காகம்”. – ஆதி 8:7.
முதலாவது எழுதப்பட்டுள்ள மிருகம் “பசுமாடு”(கிடாரி). – ஆதி 15:9.
முதலாவது இரட்டை பிள்ளைகள் பெற்றவள் “ரெபேக்காள்”. – ஆதி 25:21-27.
முதலாவது தசமபாகம் கொடுத்தவன் “ஆபிரகாம்”. – ஆதி 14:18-20, எபி 7:1-4.
தேவனால் முதலாவது பெயர் மாற்றப்பட்டவன் “ஆபிராம்”(ஆபிரகாம்) – ஆதி 17:5.
முதலாவது தீர்க்கதரிசி “ஏனோக்” ஆகும். – யூதா 14,15.
முதலாவது இஸ்ரவேலின் இராஜா “சவுல்”. – 1 சாமு 10:1.
முதலாவது “அல்லேலூயா” என்ற வார்த்தை சங் 104:35-ல் வருகிறது.
இந்தியாவிற்கு முதலாவது சுவிசேஷம் கொண்டு வந்தவர்கள் இயேசுவின் சீடர்களான தோமாவும், பர்தெலெமேயுவுமே.
முதலாவது இயேசு செய்த அற்புதம் கானா ஊர் கலியாண வீட்டில் நடந்தது – யோவா 2:1-11.
இயேசு சிலுவையில் பேசின முதலாவது வார்த்தை “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்பதே – லூக் 23:24.
உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது பார்த்தது “மகதலேனா மரியாளே”. – மாற் 16:9,10.
நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.
தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.
இஸ்ரவேலரின் முதல் மாதத்தின் பெயர் “ஆபிப்” (நிசான்). யாத் 12:12, 13:4, உபா 16:1, எஸ்தர் 3:7.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக