ரகசிய வருகை என்று வேதத்தில் இல்லாவிடினும்
★திருடனைப்போல வருகிற
வசனங்கள் மற்றும்
★மறுபடியும் வருகிறேன்
★கடைசி நாளில் அவனை
எழுப்புவேன்
★கர்த்தருக்கு
எதிர்கொண்டுபோக
★அவரிடத்தில்
சேர்க்கப்படுவோம்
★இமைப்பொழுதிலே,
நாமெல்லாரும்
மறுரூபமாக்கப்படுவோம்
★அவர் வெளிப்படும்போது
★மகிமையின் பிரசன்னமாகுதல்
★ஒருவன் ஏற்றுக்
கொள்ளப்படுவான்,
மற்றவன்
கைவிடப்படுவான்
★ விழித்து
எழுந்திருப்பார்கள்.
இப்படி இவை எல்லாம்
இயேசு கிறிஸ்துவின்
ரகசிய வருகையே குறிக்கிறது. ரகசிய வருகையில் நாம் அவரை காண முடியாது.
அதேபோல "இயேசு கிறிஸ்து பூமியின் மேல் நிற்பார்" என்பதும் ரகசிய வருகையே.
யோபு 19:25
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
என்றும், அவர்
கடைசிநாளில்
"பூமியின்மேல் நிற்பார்' என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
பகீரங்க வருகையில் வருவதை - வருகிறதை காண்பீர்கள் - வருகிறார் என்றே உள்ளது. வந்துக்கொண்டேதான் இருப்பார். நிற்க மாட்டார்.
ஆகையால் நிற்பார் என்பது ரகசிய வருகை. (இதில் சிலர் கருத்து மாறுபடலாம்.)
★பகீரங்க வருகை :
★மத்தேயு 19:28; 23:39 ;
24:3—25:46 ;
★மாற்கு 13:24-37; 17:22-37 ;
18:8 ; 21:25-28 ;
★அப்போஸ்தலர் 1:10-11;
15:16-18 ;
★ ரோமர் 11:25-27;
★1 கொரி 11:26;
★2 தெச1:7-10; 2:8 ;
★2 பேதுரு 3:3-4;
★யூதா 1:14-15;
★வெ. வி 1:7-8; 2:25-28 ; 16:15. 19:11-21 ; 22:20 ).
பகீரங்க வருகையின் முக்கிய வசனங்கள் :
மாற்கு 13
26 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
மத்தேயு 24
30 அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
லூக்கா 21
27 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
வெளி. விசேஷம் 1: 7
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென
யூதா 1: 15
தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
★ரகசிய வருகையின் வசனங்கள் :
யோவான் 14: 3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்.
★ஸ்தலம் என்ற வார்த்தை எபிரேய மொழியில் அதன் அளவுகளையும் சொல்லுகிறது.
யோவான் 6:44
என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
1 தெசலோனிக்கேயர் 4: 17
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
2 தெசலோனிக்கேயர் 2: 1
அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
1 கொரிந்தியர் 15: 51
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
1 யோவான் 2: 28
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.
1 யோவான் 3: 2
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாய் இருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
தீத்து 2: 13
நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
ரோமர் 8: 18-19
ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
பிலிப்பியர் 3: 20- 21
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
லூக்கா 17
34 அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
35 திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
36 வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
தானியேல் 12
1 உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.
2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
லூக்கா 12
39 திருடன் இன்ன நேரத்தில் வருவானென்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
40 அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.
இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகையை யாரும் தெரிந்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவர் யாரும் அறியாத நிமிடத்திலே வரப்போகிறார். அதேபோல் ரகசிய வருகை எப்போது? உபத்திரவ காலத்திற்க்கு முன்பா இல்லை பின்பா இல்லை மத்தியிலியா என்ற கருத்துகள் நிலவி வருகிறது. அது வேதத்தில் சொல்லப்படவில்லை.
ஆகவே எதற்க்கும் ஆயத்தம் முக்கியம். ஆயத்தமாய் இருப்போம்.