புதன், 23 மே, 2018

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்

ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்
இணைந்து துதித்திடுவோம்
அவர் நாமம் உயர்த்திடுவோம்

துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்

ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்

நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன்
அவமானம் அடைய விடவில்லை
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD