புதன், 23 மே, 2018

கலங்கி நின்ற வேளையில் கைவிடாமல் காத்தீரே


கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே
தகப்பனே தகப்பனே

நீர் போதும் என் வாழ்வில் (4)

உடைந்த நொந்த உள்ளத்தோடு
அருகில் நீர் இருக்கின்றீர் (2)
தாங்கிடும் பெலன் தந்து
தப்பிச் செல்ல வழி செய்யும்
தகப்பனே (2)
தகப்பனே

நீர் போதும் என் வாழ்வில் (2)

துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
திருவசனம் தேற்றுதைய்யா (2)
தீமைகளை நன்மையாக்கி
தினம் தினம் நடத்திச் செல்லும்
தகப்பனே (2)
தகப்பனே

நீர் போதும் என் வாழ்வில் (2)

நித்திய அன்பினால் அன்புகூர்ந்து
உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர் (2)
காருண்யம் தயவால்
காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
தகப்பனே (2)
தகப்பனே

நீர் போதும் என் வாழ்வில் (2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD