புதன், 4 டிசம்பர், 2019

என் இயேசு பாலன் பிறந்தாரே

என் இயேசு பாலன் பிறந்தாரே 
எழிலோடு கண்கள் திறந்தாரே
பனி தூவும் நள்ளிரவுக் குளிரில் 
மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே - 2

இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல் 
அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் - 2
உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில் 
உன்னதரும் துள்ளி அசைந்தாரே - 2

முன்னணையில் வைகோலே பஞ்சனையோ !
குளிர்வாடை பாடியது தாலேலோ ! - 2
மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே 
சிசுவாக மேய்ப்பன் வந்தாரே - 2

கண் மின்னி பொன் வெள்ளி திசை காட்ட 
மூவரசர் தேடிவந்து பதம் நாட - 2
ஆட்டிடையர் சிறுகூட்டம் ஆவலுடன் துதிபாட 
ஆனந்த அற்புதர் வந்தாரே  - 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD