என் வாழ்விலே… ஒளியேற்றவே
பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்…
பரிகாரி..இயேசுவே...(JESUS THE HEALER)-(எந்தன்/உந்தன்)2
பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட
குருதி சொறிந்தாரே
மண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திட
தன் ஜீவன் துறந்தாரே
1. நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ - நீ
பலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோ
நடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ - அட
நீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோ
கல்வாரி இயேசு இரத்தம் - உன்
பாவக்கறை நீக்கும் - என்
இயேசு குருதி மட்டும் - உன்
சாப வினை தீர்க்கும்
2. மாராவின் தண்ணீரை மாற்றினவர் - உன்
தீராத கண்ணீரை தேற்றிடுவார்
ஆராய்ந்து முடியாத செயலாற்றுவார் - உன்
போராடும் வாழ்க்கைக்கு ஜெயமீகுவார் - உன்
தேவன் சத்தம்கேளு - அவர்
வார்த்தைக் கைக்கொண்டிரு - சம்
பூரண கர்த்தர் அவர் - உன்
சகலமும் நிறைவாக்குவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக