அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். வாரிகொடுத்த வள்ளல்கள் பலர் வாழ்ந்து வந்த புண்ணிய பூமி இது. அறத்தின் உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று தான் திருவள்ளுவர் அறத்துப்பால் என்ற அதிகாரத்தையே இயற்றியுள்ளார்.
அறத்தின் முக்கியத்துவம்:
அறம் என்பது பசி என்று கையேந்தி வருபவருக்கு உணவளித்தல், நேர்மையாக இருப்பது, பொய் பேசாமல் உண்மையை மட்டும் பேசுவதே ஆகும். மற்றவர்களுக்கு எப்போதும் கெடுதல் நினைக்காமல், நல்ல எண்ணங்களுடன் வாழ்வதே நல்லது.
ஒளவையார் கருத்து:
அறத்தின் நெறி தவறியவர்கள் மறு ஜென்மத்தில் வாழ்வதற்கான தகுதியை இழந்தவர்கள். வறுமையிலும் நாம் சிறப்பான நிலையில் வாழ வேண்டும் என்றால் அறநெறியை பின்பற்றி வாழ வேண்டும் என்று ஒளவையார் உரைக்கிறார்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
எனும் குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் பொறாமை, தீயசொல், வெகுளி போன்றவற்றை தகர்த்து அறத்துடன் வாழ வேண்டும் என்று உரைக்கிறார்.
முடிவுரை:
அறம் செய்வதால் உண்டாகும் மகிழ்ச்சி நீங்கள் வேறு எது செய்தாலும் கிடைக்காது.
இன்றைய சூழலில் அறத்தின் வழியில் நடப்பவர்களை பார்ப்பதே மிகவும் அரிதாக உள்ளது. நேர்மையின்மையும், அநியாமமும் இப்போது அதிகமாக உள்ளது. இதனை தவிர்த்து நாம் அறத்துடன் வாழ வேண்டும், மற்றவர்களுக்கும் அறத்தின் சிறப்பை எடுத்துரைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக