வியாழன், 26 ஜூன், 2014
நினையாத நாழிகையிலே மனுஷ குமாரன் வருவார்
இயேசுவின் கிருபை நமக்கு போதும
கர்த்தரின் வல்லமை
ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசினமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. - ஆதி 17:1
இந்த உலகத்தில் நீங்கள் எத்தனையோ விதமான வல்லமைகளை குறித்து கேட்டிருப்பீர்கள், எத்தனையோ வல்லமைகளை கண்டிருப்பீர்கள். சில நேரங்களில் பிசாசின் வல்லமையினால் பாதிக்கப்பட்ட சிலரை கண்டிருப்பீர்கள். நீங்களும் பிசாசின் தந்திரமான கிரியைகளையும் வல்லமைகளையும் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் இவைகள் எல்லாவற்றைக்காட்டிலும் பெரிய வல்லமை கர்த்தருடைய வல்லமை. இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார். அவரைப்போல் போதிக்கிறவர் யார்? (யோபு 36:22). சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? (சங் 89:8). பிரியமானவர்களே, தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவர் சர்வவல்லவர். இன்றைக்கு உன் கண்களுக்கு முன்பாக உன் வேதனைகள், பிரச்சனைகள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் உன் தேவனாகிய கர்த்தர் அதைவிடப்பெரியவராய் இருக்கிறார், அதை தீர்த்துவைக்க வல்லவர். தேவனுடைய வல்லமைக்கு முன்பாக அனைத்தும் உருகிப்போகும். மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். (எபி 7:25). தேவன் இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்தில் மோசேயின் மூலம் வழிநடத்தினார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கும், தேவனுக்கும் விரோதமாய் முறுமுறுத்தார்கள். நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள். (யாத் 14:12). ஆனால் தேவன் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. தன் தாசனாகிய மோசேயின் மூலம் அற்புதங்களை செய்தார். அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள். நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். (யாத் 14:13-14). இஸ்ரவேல் ஜனங்கள் தொடர்ந்து முறுமுறுத்தார்கள். தேவன் அவர்களை கானான் தேசத்திற்கு அழைத்து செல்வேன் என்ற வாக்குத்தத்தை நிறைவேற்றினார். தேவன் அவர்களை தண்டிக்காமல் தம்முடைய கிருபையால் அவர்களை நடத்தினார். அவர்களுக்கு தடையாய் காணப்பட்ட செங்கடலை பிளந்து வழியை அவர்களுக்கு உண்டுபண்ணினார். அவர்களை நடத்தின தேவன் உன்னையும் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவர். நீங்களும் பல முறை பாவத்திற்கும், ஜென்ம சுபாவத்திற்கும் அடிமைப்பட்டு காணப்படுகிறீர்களா? விடுதலையின்றி தவிக்கிறீர்களா? தேவனையே சார்ந்துகொள்ளுங்கள், தேவன் உங்களை விடுவிடுத்து முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். (யோபு 42:2)
தம்முடைய பிள்ளைகளுக்கு தேவன் எப்போதும் வாக்குத்தத்தங்களை கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். அந்த வாக்குத்தத்தங்கள் பல மாதங்கள் அகியும் இன்னும் நிறைவேறாமல் இருக்கலாம் ஆனால் தேவன் வாக்குத்தத்தம் செய்ததை நிச்சயமாய் நிறைவேற்றுவார். அவருடைய வாக்குத்தத்தங்கள் ஆம் என்றும் ஆமேன் என்றும் இருக்கிறது. தேவன் உனக்கு செய்த வாக்குத்தத்தை நிறைவேற்ற ஒருபோதும் தாமதிப்பதில்லை. உங்களிடம் காணப்படுகிற கீழ்படியாமையின் நிமித்தம் வாக்குத்தத்தம் நிறைவேற தாமதிக்கிறது. தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்@ ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். (2பேதுரு 3:9). உனக்கு தேவன் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றுவார் என்று நம்பி விசுவாசத்தோடு காத்திருக்க வேண்டும். விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். (எபி 11:11). தாவீதைக் குறித்து அவன் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடந்தான் என்று வேதம் சொல்லுகிறது. செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால், (1இராஜா 9:4). தேவன் சவுலை இஸ்ரவேலின் மேல் இராஜாவாக ஏற்படுத்தினார். ஆனால் சவுல் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் ராஜ்யத்தை இழந்தான். தாவீது தேவனுக்கு கீழ்படிந்து இராஜ்யத்தை பெற்றுக்கொண்டான். அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைப் பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார். - (1சாமு 15:28). அதை போலவே வஸ்தி ராஜாவாகிய அகாஸ்வேருக்கு கீழ்படியாதபடியினால் ராஜமேன்மையை இழந்தாள், அவளைக்காட்டிலும் உத்தமியாகிய எஸ்தருக்கு ராஜமேன்மை கிடைத்தது. ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப் பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்தது, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும். - (எஸ்தர் 1:19). தாவீதையும் எஸ்தரையும் போல தேவனுக்கு கீழ்படியுங்கள் சர்வவல்வமையுள்ள தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதை காண்பீர்கள்.
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். - யூதா 1:24-25
நீ இன்னும் வீடு வந்து சேரவில்லை
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. - (வெளிப்படுத்தின விசேஷம். 22:12).
ஒரு வயதான மிஷனெரி தம்பதிகள் ஆப்பிரிக்காவில் தங்கள் ஊழியத்தை பல வருடங்கள் செய்து முடித்து விட்டு, தங்கள் சொந்த தேசமாகிய அமெரிக்காவிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் சுகத்தை இழந்து, எந்த வித சொத்தோ, பென்ஷனோ எதுவும்இன்றி, சோர்வோடு ஒருக் கப்பலில் வந்துக் கொண்டிருந்தனர். அதே கப்பலில், அமெரிக்க அதிபர் டெட்டி ரூசிவெல்ட், (Teddy Roosevelt) தனது விடுமுறை நாளில், ஆப்பிரிக்கா சென்று வேட்டையாடி, முடித்து விட்டு, தனது சொந்த தேசத்திற்கு திரும்புவதற்காக, பிரயாணம் செய்ததை அப்போது தான் கண்டனர்.
இந்த தம்பதிகளை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் அதே சமயம் அமெரிக்க அதிபரைக காண சகப்பிரயாணிகள் மிகவும் பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருப்பதையும், அவருக்கு அளிக்கப்படும் மரியாதைகளையும் இந்த தம்பதியினர் கண்டபோது, அந்த மிஷனெரி தம் மனையிடம், ‘நாம் ஏன் இப்படி நமது வாழ்வை ஆப்பிரிக்காவில் கஷ்டப்பட்டு ஊழியம் செய்திருக்கவேண்டும்? யாரும் நம்மை கண்டுக் கொள்வில்லை. இதோ இந்த மனிதர், ஏதோ வேட்டையாடிவிட்டு திரும்பி போய்க் கொண்டிருக்கிறார்; அவருக்கு கொடுக்கப்படும் மரியாதையும் கனமும் எத்தனை!’ என்று மனம் கசந்துக் கொண்டார். அப்போது மனைவி ‘இல்லை, நீங்கள் இப்படி சொல்லக் கூடாது’ என்றுக் கூறினார். அதற்கு மிஷனெரி, ‘இல்லை என் மனது பொறுத்துக் கொள்ள மறுக்கிறது’ என்றுக் கூறினார்.
கப்பல் கரையை சேர்ந்தவுடன், அதிபரை வரவேற்க பெரும் கூட்டம் காத்திருந்தது. மக்கள் திரள் கூட்டமாய், கொடிகளை உயர்த்தியபடி, அவரை வரவேற்க கூடி வந்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களும், பெரிய பதவியிலிருப்பவர்களும் அவருக்கு கைகொடுத்து, வரவேற்றனர். ஆனால் இந்த தம்பதியினரை வரவேற்க ஒரு ஈ காக்கைகூட இல்லை. அவர்கள் அந்த கப்பலிலிருந்து, இறங்கி, வெளியே வந்து, பக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அடுத்த நாள் முதல் சாப்பிடுவதற்கு என்னச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அன்று இரவு அந்த மிஷனெரி இருதயம் உடைந்தவராய், மனைவியிடம், ‘கர்த்தர் பட்சபாதம் உள்ளவர், ஏன் நமக்கு இப்படி’ என்று புலம்ப ஆரம்பித்தார். அப்போது மனைவி, ‘நீர் ஏன் உள்ளேப் போய் கர்த்தரிடமே இதைக் கேட்கக்கூடாது’ என்றுக் கூற, அவர் போய் ஜெபிக்க உள்ளேச் சென்றார்.
சற்று நேரம் கழித்து. அவர் வெளியே வந்தபோது அவர் முகம் தெளிவாக இருப்பதைக் கண்ட அவர் மனைவி, ‘என்னப்பா? என்ன நடந்தது?’ என்றுக் கேட்டார். அதற்கு அவர், ‘நான் கர்த்தரிடம், நான் எவ்வளவு கசந்துப் போனேன், அமெரிக்க அதிபர் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு கிடைத்த வரவேற்பிற்கும், எனக்கு கிடைத்த வரவேற்பிற்கும் உள்ள வித்தியாசத்தை அவரிடம் சொல்லி, முறையிட்டேன். அப்போது கர்த்தர் என்தோளைச் சுற்றி தம் கரத்தை வைத்து அணைத்தவராக, ‘இன்னும் நீ வீடு வந்துச் சேரவில்லையே’ என்று கூறினார், என் துக்கம் கசப்பு எல்லாம் பறந்து போய் விட்டது என்று குதூகலத்தோடுக் கூறினார்.
அன்பு ஊழியர்களே, மற்றவர்கள் உங்களை பாராட்டவில்லை, உங்களை கண்டுக் கொள்ளவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறீர்களா? உங்கள் மனம் சோர்ந்துப் போயிருக்கிறதா? நான் கர்த்தருடைய ஊழியத்தை தானே செய்கிறேன் ஏன் என்னை யாரும் கண்டுக் கொள்ளவில்லை, என்று மனம் நொந்துப போயிருக்கிறீர்களா? Don’t Worry! நாம் இன்னும் வீடுப் போய் சேரவில்லை! நம்மை மெச்சிக் கொள்ளும் தேவன் ஒருவர் உண்டு. நல்லது உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக் காரனே! என்று அனைவர் முன்பும் நம்மை கனப்படுத்தும் சர்வ வல்லமையுள்ள தேவன் நமக்கு உண்டு. ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியுஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே (எபிரேயர் 6:10) என்று வேதம் கூறுகிறது. இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று கூறின இயேசுகிறிஸ்து மெய்யாகவே சீக்கிரமாய் வருகிறார்.
புதன், 25 ஜூன், 2014
பரிசுத்த வேதாகமம் இறைவனின் வார்த்தையே என்று நிருபிக்கும் பதிவு
சுமார் 39 வருடங்கலுக்கு முன்பதாக பழங்கால புதையல் ஒன்று சில அகழ்வாராய்ச்சி குழுவால் கண்டெடுக்கப்பட்டது. சிரியா தேசம், Aleppo தமஸ்க்கு பட்டணம் வழியில் சரித்திரத்தால் மறைந்து போன ஓர் கிராமமே கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கண்டெடுக்கப்பட்ட களிமண் உருண்டைகள் கிறிஸ்தவ உலகையே ஆச்சரியப்படுத்தி விட்டது. இப்போது உங்களையும் ஆச்சரியப்படுத்த போகிறது.... தொடர்ந்து படியுங்கள்...
இந்த புதையல் Professor Paolo Matthiae (ரோம பல்கலைக்கழகம்) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் 1964ல் ஆராய்ச்சியை ஆரம்பித்து பின் 1974-75ல் இந்த புதையலை கண்டுபிடித்தார். இது கிறிஸ்துவுக்கு முன் 2500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த எல்பா சாம்ராஜ்யத்தின் சரித்திர பதிவுகள் ஆகும். இங்கு எஸ்தர் அரசியின் (வேதாகமத்தின் கூறப்பட்டுள்ள எஸ்தரின் புஸ்தகம்) சிலை ஒன்று காணப்படுகிறது. அதின் கீழ் Ibbit-Lim என்று எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்பாவின் அடையாளம் நமக்கு தெரிய வருகிறது.
இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தகடுகளை சுமேரிய (Sumerian script) மொழியில் எழுதியிருக்கிறார்கள். இது எபிரேய மொழியுடன் ஒத்து போகிறது.
1975ம் ஆண்டு இரண்டு முக்கிய அறைகளில் சுமார் 15000 களிமண் சிறிய தகடுகள் கிடைத்தது. பின் 1976ம் ஆண்டு 1600 சிறிய தகடுகள் கிடைத்தது. ஒரு களிமண் தகட்டில் அப்போதைய மக்கள் தொகை 260,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓர் சிறிய தகட்டில் 260 புவி சார்ந்த பெயர்கள் உள்ளன. மற்றொரு தகட்டில் மிருகங்கள், பறவைகள், மீன்கள், வேலைகள், அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த களிமண் தட்டிற்க்கும் வேதாகமத்திற்கும் என்ன சமந்தம்? இதோ பதில்.....
இந்த எல்பா ராஜாங்கம் மோசே காலத்திற்கு 1000 வருடங்களுக்கு முன் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. வேதாகமத்தில் உள்ள முதல் 5 புத்தகங்களை மோசே எழுதினார் என்று நமக்கு தெரியும். இந்த புத்தகம் சரித்திரத்தை உள்ளடக்கியது. ஆதிகால சட்டங்கள், வாழ்க்கையை உள்ளடக்கியது. மோசே எழுதின முதல் 5 ஆகமங்களுக்கு முன் அதாவது 800 ஆண்டுகளுக்கு முன் இந்த களிமண் தகடுகள் எழுதப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த களிமண் தகடுகள் அக்காலத்தில் கொண்டிருந்த வாணிப முறைகள், சட்ட திட்டங்கள் என்று பலவற்றையும் உள்ளடக்கி உள்ளது. நம் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பழைய ஏற்பாட்டில் உள்ள வசனங்களை நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளது மிகப்பெரிய ஆச்சரியம். சில வசனங்கள் உங்கள் முன்...
1. உபாகமம் 22: 22-30 - கற்பழிப்பின் சட்டம்
இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது போல ஓர் பெண் கற்பழிக்கப்பட்டால் அவளை கற்பழித்தவன் கொல்லப்பட வேண்டும். அல்லது அவள் திருமணம் ஆகும் பருவத்தில் இருந்தால் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஓர் சட்டம் இருந்ததாக களிமண் தட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே மோசேயும் உபாகமம் 22ம் அதிகாரத்தில் முழுமையாக குறிப்பிட்டுள்ளார். இந்த களிமண் தட்டில் மூலம் மோசே எழுதியது ஓர் கதை அல்ல. அக்காலத்தில் நடந்து வந்த ஓர் உண்மை சம்பவம் என்று நிரூபணம் ஆகி உள்ளது.
2. வேதாகமத்தின் பெயர்கள்
பழைய ஏற்பாட்டில் உள்ள பல பெயர்கள் இந்த களிமண் தகட்டில் இடம் பெற்றுள்ளன.
1. Michael (mi-ka-ilu) இதற்க்கு அர்த்தம் "Who is like El?". எல்பா வார்த்தையில் mi-ka-ya என்று வரும் இந்த வார்த்தை நம் பரிசுத்த வேதாகமத்தில் பல முறை இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
2. மற்ற வார்த்தைகள் e-sa-um (Esau), da-'u-dum (David), sha-'u'-lum (Saul), and Ish-ma-ll (Ishmael). இந்த வார்த்தைகளையும் நீங்கள் வேதாகமத்த்தில் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக...
3. இதில் முக்கியமாக கடைசி வார்த்தையை பார்க்க வேண்டும். "II (El -- God) has heard me." என்று பொருள் படுகிறது.
4. சில முக்கியமான வார்த்தைகளை இங்கே உங்கள் முன் கொடுக்க கடமை பட்டுள்ளேன். கவனமாக படிக்கவும்...
En-na-ni-ll which gave over to En-na-ni-Ya (II/Ya has mercy on me என் மேல் கிருபையாய் இரும்);
A-dam-Malik (man of Milik);
'il-ha-il, II என்றால் strength / வலிமை ;
Eb-du-Ra-sa-ap, Servant of Rasaph அடிமை ;
Ish-a-bu, A man is the father தந்தை போன்றவர் ;
Ish-i-lum, A man is the god கடவுளை போன்றவர் ;
I-sa-Ya, Ya has gone forth முன்னே போகிறவர் ;
I-ad-Damu, The hand of Damu;
Ib-na-Malik, Milik has created
இந்த பெயர்களை குறித்து இதை கண்டுபிடித்த அகல்வராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியர் Pettinato அவர்கள் கூறுகையில் "இந்த பெயர்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள (எபிரேய மொழியில்) பெயர்களோடு ஒத்துபோகின்றன. எல்பா நாகரீகத்திற்கும் பழைய ஏற்பாட்டிற்கும் தொடர்பு இருப்பதை இதன் மூலம் அறியலாம்" என்று தன்னுடைய ஆய்வில் கூறி இருக்கிறார்.
"Many of these names occur in the same form in the Old Testament, so that a certain interdependence between the culture of Ebla and that of the Old Testament must be granted."
3. சங்கீதம் 23
எல்பாவின் காலத்தில் ஆன்மீகத்தின் அடையாளமாக சில களிமண் தகடுகள் எழுதப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக
"En-na-ni-Ya" அர்த்தம், "என் மேல் கிருபையாய் இரும்." Re-i-na-Adad," என்ற வார்த்தையில் உள்ள கடைசி வார்த்தை தேவனை ஓர் ஆட்டு மந்தையின் தலைவராக குறிப்பிடுகிறது. "Adad (a god) is our shepherd,
அடட் - கடவுள் என் மேய்ப்பராய் இருக்கிறார். இப்படிப்பட்ட வார்த்தைகள் பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவனை குறித்த வெளிபாட்டை விளக்குவதாக உள்ளது. அது நம் வேதாகமத்தொடு ஒத்து போகிறது.
3. பரிசுத்தராம் பிதா மற்றும் இயேசுவை குறித்த வெளிப்பாடுகள்
நாம் முன்னர் பார்த்தது போல ஆட்டு மந்தையை மேய்ப்பவராக கடவுளை நேசித்துள்ளனர். அதை போல இயேசுவும் ஆட்டுகுட்டியானவராக நமக்காக அடிக்கப்பட்டார்.
நம்முடைய பிதாவாகிய தேவனின் பெயரை பழைய ஏற்பாட்டின் காலத்தில் "YAWEH" யாவெஹ் என்று அழைக்கிறோம்.
ஏசாயா அதிகாரத்தில் "I am the LORD; that is my name!" அதாவது நான் யாவே என்று எபிரேய பாஷையில் எழுதப்பட்டுள்ளது. இந்த யாவே என்ற பெயருக்கும் எல்பாவின் களிமண் தகடுகளுக்கும் தொடர்பு உண்டு..
எல்பா காலத்தில் கடவுளை II/El என்று குறிப்பிட்டு வந்துள்ளனர் "II " என்ற வார்த்தை இல்லாத இடத்தில் "YA" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை நீங்கள் எபிரேய மொழியில் பார்ப்பீர்கள் என்றால் "YAWEH" யாவெஹ் என்று வரும். இதன் மூலம் நம் தேவனின் பெயர் மோசே காலத்திற்கு முன்பாகவே வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
4. கானான் தேசம்
பழைய ஏற்பாட்டில் குற்றம் கண்டு பிடிப்பவர்கள் கானான் தேசம் Genesis 11:31 ல் குறிப்பிட்டுள்ளது போல அக்காலத்தில் கிடையாது. கானான் தேசமே மோசேவின் காலத்தில் இல்லை என்று வாதிடுவர். ஆனால் எல்பாவின் இந்த களிமண் தகடுகள் கானான் தேசம் என்று ஒன்றிருந்ததை பல முறை விளக்கி உள்ளது. அதாவது மோசேக்கு முன் 1000 வருடங்களுக்கு முன்பே கானான் தேசமானது இருந்து வந்ததை அறிந்து கொள்ளலாம்.
5. வேதாகமத்தில் உள்ள இடப்பெயர்கள்
Salilm (the city of Mechizedec மேல்கிஷடேக் ), Hazor, Lachich, Megiddo, Gaza காசா, Dor, Sinai சினாய், Ashtaroth, Joppa, and Damascus தமச்க்கு பட்டணம் என்ற பல பெயர்கள் நம் வேதாகமத்தில் இடம் பெற்றுள்ளது.
Isaiah 10:9 கல்னோ பட்டணம் கர்கேமிசைப்போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?
மேற்கூறி உள்ள வசனத்தில் உள்ள அனைத்து ஊர் பெயர்களும் இந்த களிமண் தகட்டில் இருப்பது நமக்கு கிடைத்த அறிய பொக்கிஷம். ஆமென்
மிகமுக்கியமாக எருசலேம் என்ற பெயரை இந்த களிமண் தகடுகள் தாங்கி உள்ளது. Urusalima (Jerusalem) என்ற பெயரில் இந்த தகடுகள் காட்சி அளிக்கின்றன. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
6. சோதம் கொமாரா
ஆதியாகமம் 14:2 ல் உள்ள சோதோம் கொமாரா ( Sodom and Gomorrah) பட்டணம் இந்த களிமண் தகட்டில் உள்ளது. வேதாகமத்தில் உள்ளது போல அனைத்து பக்க நகரங்களும் குறிக்கப்பட்டுள்ளன.. ஆமென்.
“And the king of Sodom and the king of Gomorrah and the king of Admah and the king of Zeboiim and the king of Bela (that is, Zoar) came out; and they arrayed for battle against them in the valley of Siddim, against Chedorlaomer king of Elam and Tidal king of Goiim and Amraphel king of Shinar and Arioch king of Ellasar--four kings against five.” (Genesis 14:8-9)
These five “cities of the plain” recorded in the Bible are precisely those mentioned in the Ebla tablet: Sodom, Gomorrah, Admah, Zeboiim, and Bela
மிக முக்கியமாக விஷயம் என்னவென்றால் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது போலவே இந்த களிமண் தகட்டிலும் இந்த ஐந்து நகரமும் வரிசையாக குறிக்கப்பட்டுள்ளது.
7. வேதாகம மிக முக்கிய பெயர்கள்
மோசேக்கு முன் வாழ்ந்த ஆபிரஹாமின் சரித்திர குறிப்புகள், இஸ்மவேலின் குறிப்புகள், சவுல், இஸ்ரேல், தாவீது என்ற பெயர்கள் இந்த களிமண் தகட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
8. சாலொமோனும் எல்பா தகடுகளும்
மரி என்ற நாட்டில் தலைவன் தோற்றவுடன் எல்பா அரசாங்கத்திற்கு 11,000 டன் வெள்ளியும், 880 பவுண்டு தங்கமும் கொடுத்ததாக இந்த களிமண் தகட்டில் கூறப்பட்டுள்ளது. இது சாலமன் கப்பல்களில் கொடுத்த வெள்ளலி மற்றும் தங்கத்தை விட பெரிய பகுதியாகும். இதன் மூலம் சாலமன் 10 டன் கொடுத்தது ஓர் சாதாரண விஷயம், அக்கால நடைமுறையில் இருந்த ஒன்று தான் என்று புரிகிறது.
படியுங்கள் 1 ராஜாக்கள் 10:14 மற்றும் 2 நாளாகமம் 9:13
9. ஆதிகாமம் 1 - கடவுளின் உலக படைப்பும் எல்பா தகடுகளும்
இறுதியாக உங்களுக்கு மிகவும் ஆச்சரியப்படுத்தும் ஒன்றை அறிமுகப்படுத்துகிறேன்... அது நம் தேவன் உலகத்தை படைத்த விதம். பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஆதியாகமம் 1ம் அதிகாரமும் இந்த களிமண் தகடுகளும் ஒத்து போகின்றன.
இப்படி பல விஷயங்கள் நமக்கு ஆச்சரியமாய் இருந்தாலும் நாம் வைத்திருக்கும் வேதாகமம் உலக சரித்திரத்தையே அடக்கி உள்ளது. உண்மையான தெய்வத்தின் பெயரையும் கொண்டுள்ளது. இதை வைத்திருக்கும் நாம் மிகவும் பாக்கியவான்கள்.
நாம் வணங்கும் தெய்வம் எதோ ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த தெய்வம் அல்ல. அவர் இந்த உலகத்தை உண்டாக்கியவர். பல ஆயிரங்களுக்கு முன் வாழ்ந்த பலரும் இந்த உண்மையை தங்கள் சரித்திரத்தில் பதித்துள்ளனர்.. மீண்டும் மற்றொரு உண்மையோடு உங்களை சந்திக்கிறேன்..
நாம் வணங்கும் இந்த இயேசு கிறிஸ்து உண்மையானவர். அவர் முதலும் முடிவுமாய் இருக்கிறார். ஆமென்...
சங்கீதம் 119: 72. அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.
Mitchell Dahood, "The God Yā at Ebla?", Journal of Biblical Literature
Moorey, Peter Roger Stuart (1991), A century of biblical archaeology, Westminster John Knox Press, ISBN 978-0-664-25392-9.
Dumper, Michael; Stanley, Bruce E. (2007), Cities of the Middle East and North Africa: A Historical Encyclopedia, ABC-CLIO, ISBN 978-1-57607-919-5.
Chavalas, Mark W. (2003), Mesopotamia and the Bible, Continuum International Publishing Group, ISBN 978-0-567-08231-2.
இயேசு பிறந்து, மரித்து பின் உயிர்த்தெழுந்தாரா? என்ற கேள்விகளுக்கு பதில்
இயேசு பிறந்து, மரித்து பின் உயிர்த்தெழுந்தாரா? என்ற கேள்விகளுக்கு பதில்
இது ஓர் சரித்திர உண்மை
இயேசு கிறிஸ்து என்ற ஓர் தெய்வம் உலகில் இருந்ததுண்டா? அவரை சிலுவையில் அறைந்தார்களா? அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தாரா? என்ற பல கேள்விகள் இன்றும் பலருக்கு முளைத்து கொண்டே இருக்கிறது. இதற்கு சரித்திர பூர்வமாகவும், வேதாகமத்தின் அடிப்படையிலும் நாம் பல ஆதாரங்களை எடுத்து வைத்தும் சிலர் வேண்டும் என்றே முரண்டு பிடிப்பது நமக்கு தெரிந்த உண்மை.
சரி.. 2011 ல் நமக்கு ஓர் ஆச்சரியமூட்டும் வகையில் ஓர் அதிசய புதைபொருள் கிடைத்துள்ளது. அதை பற்றி இங்கே பார்ப்போம்.
பரிசுத்த வேதாகமத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சவக்கடலில் தோல் கையெழுத்து பிரதிகள் வேதாகமத்திற்கு மிகப்பெரிய பொக்கிஷமாக திகழ்ந்து வருகிறது. அதைப்போல தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த 70 உலோக புத்தகங்கள் சவக்கடல் கண்டுபிடிப்புக்கு பின் கிடைக்கப்பெற்ற அரியதொரு விலையேறப்பெற்ற பொக்கிஷமாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்த உலோக புத்தகத்தின் பக்கங்கள் கிரெடிட் கார்டை காட்டிலும் பெரிதாக காணப்படவில்லை, அது முழுவதும் படிமப்படங்கள், குறியீடுகள்(symbols) மற்றும் வார்த்தைகளால் நிறைந்துள்ளது. அவை எல்லாமே மேசியாவை உலகுக்கு வெளிப்படுத்தும் மையக்கருவாகவே அமைந்துள்ளது. இன்னமும் சொல்லப்போனால் கிறிஸ்து இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
எப்படியெனில் இந்த உலோகங்களில்
"‘That struck me as so obviously a Christian image. There is a cross in the foreground, and behind it is what has to be the tomb [of Jesus], a small building with an opening, and behind that the walls of the city.
Read more: http://www.dailymail.co.uk/sciencetech/article-1371290/70-metal-books-Jordan-cave-change-view-Biblical-history.html#இக்ஷ்ழ்ழ்2க்ஷ்Kகா4வஆ
அந்த படத்தில் ஓர் கல்லறை தெரிவதாகவும், அதன் பின்பு கல்லறை திறந்திருப்பதாகவும், அதன் பின்பு ஓர் நகரத்தின் சுவர் இருப்பதாகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கண்டு பிடிப்பு கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த ஓர் அறிய பொக்கிஷம். இயேசு கிறிஸ்து வாழ்ந்தது உண்மை, அவர் மரித்தது உண்மை, பின்பு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தது உண்மை. இதை நிருபிக்கும்வன்னமாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
இந்த உலோக புத்தகங்கள் ஜோர்டானிலுள்ள தொலைதூர பின் தங்கிய பகுதியை சேர்ந்த ஒரு குகையில் 5 ஆண்டுகளுக்கு முன்னதாக கண்டெடுக்கப்பட்டுள்ளது, கி.பி 70ல் எருசலேம் ரோமர்களால் அழிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பிய கிறிஸ்தவ அகதிகள் ஜோர்டானின் இந்த குகை பகுதிகளில் மறைந்து வாழ்ந்துள்ளனர். அவர்கள் இந்த குகையில் விட்டுச்சென்ற புத்தகங்க்ளே இந்த 70 உலோக புத்தகங்கள், இந்த 70 புத்தகங்களை துவக்க உலோகவியல் சோதனைக்கு உட்படுத்தியபோது அவைகளில் சில கி.பி முதலாம் நூற்றாண்டை சேர்ந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த பழங்கால புத்தகங்கள் மற்றும் வரலாற்று ரீதியிலான அகழ்வாராய்ச்சி நிபுணர் டேவிட் எல்கிங்க்ஸ்டன் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட புத்தக்ங்களில் சில் கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை பற்றி ஓர் முகமதிய பேராசியர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஜைத் அல்-சாத் கூறும் போது இந்த புத்தகம் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்பு அவரின் விசுவாசிகளால் எழுதப்பட்டிருக்கலாம் என்று கூறி இருக்கிறார். The director of the Jordan's Department of Antiquities, Ziad al-Saad, says" the books might have been made by followers of Jesus in the few decades immediately following his crucifixion."
மேலும் இதை பற்றி அறிந்து கொள்ள
http://www.bbc.co.uk/news/world-middle-east-12888421
http://www.dailymail.co.uk/sciencetech/article-1371290/70-metal-books-Jordan-cave-change-view-Biblical-history.html
இன்னும் பல சரித்திர கண்டு பிடிப்புகள் இயேசுவே தெய்வம் எனவும், அவர் உயிர்தெழுந்தது உண்மை எனவும் கூறி உள்ளன. அதை நாம் பின் ஆராய்வோம்.
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Could this be the biggest find since the Dead Sea Scrolls? Seventy metal books found in cave in Jordan could change our view of Biblical history
For scholars of faith and history, it is a treasure trove too precious for price.
This ancient collection of 70 tiny books, their lead pages bound with wire, could unlock some of the secrets of the earliest days of Christianity.
Academics are divided as to their authenticity but say that if verified, they could prove as pivotal as the discovery of the Dead Sea Scrolls in 1947.
Adding to the intrigue, many of the books are sealed, prompting academics to speculate they are actually the lost collection of codices mentioned in the Bible’s Book Of Revelation.
More...
- Mind-boggling discovery: Perfectly preserved brain of Iron Age man unearthed in York
- Why haven't you called? Mars rover fails to phone Earth in over a year and now Nasa fears it is lost for ever
- End of the road for Discovery as Nasa turns an engineering miracle into a museum piece
- Explore faith and religion with Mail Shop
Initial metallurgical tests indicate that some of the books could date from the first century AD.
SHEPHERD'S DISCOVERY THAT UNEARTHED A TREASURE TROVE
The Dead Sea Scrolls, counted among the most important archaeological finds of the modern era, were discovered in a cave (pictured) by a Bedouin shepherd in the West Bank.
The scrolls consist of 30,000 separate fragments making up 900 manuscripts of biblical texts and religious writings from the time of Jesus.
The fragile parchment and papyrus fragments have been the subject of intense study for more than half a century by an international team of scholars who are still trying to understand the significance of some 30 per cent of the texts which are not included in the Bible or any other previously known religious writings.
The scrolls include the earliest known copy of the Ten Commandments, an almost complete Book of Isaiah and many of the Psalms.
Some of the texts were damaged by well-intentioned restoration attempts since the 1950s that included the use of Sellotape, rice paper and perspex glue.
If the dating is verified, the books would be among the earliest Christian documents, predating the writings of St Paul.
The prospect that they could contain contemporary accounts of the final years of Jesus’s life has excited scholars – although their enthusiasm is tempered by the fact that experts have previously been fooled by sophisticated fakes.
David Elkington, a British scholar of ancient religious history and archeology, and one of the few to have examined the books, says they could be ‘the major discovery of Christian history’.
‘It is a breathtaking thought that we have held these objects that might have been held by the early saints of the Church,’ he said.
But the mysteries between their ancient pages are not the books’ only riddle. Today, their whereabouts are also something of a mystery. After their discovery by a Jordanian Bedouin, the hoard was subsequently acquired by an Israeli Bedouin, who is said to have illegally smuggled them across the border into Israel, where they remain.
However, the Jordanian Government is now working at the highest levels to repatriate and safeguard the collection. Philip Davies, emeritus professor of biblical studies at Sheffield University, said there was powerful evidence that the books have a Christian origin in plates cast into a picture map of the holy city of Jerusalem.
‘There are walls depicted on other pages of these books too and they almost certainly refer to Jerusalem. It is a Christian crucifixion taking place outside the city walls.’
The British team leading the work on the discovery fears that the present Israeli ‘keeper’ may be looking to sell some of the books on to the black market, or worse – destroy them.
But the man who holds the books denies the charge and claims they have been in his family for 100 years.
Dr Margaret Barker, a former president of the Society for Old Testament Study, said: ‘The Book of Revelation tells of a sealed book that was opened only by the Messiah.
‘Other texts from the period tell of sealed books of wisdom and of a secret tradition passed on by Jesus to his closest disciples. That is the context for this discovery.’
Mr Elkington, who is leading British efforts to have the books returned to Jordan, said: ‘It is vital that the collection can be recovered intact and secured in the best possible circumstances, both for the benefit of its owners and for a potentially fascinated international audience.’
*British scientists have uncovered up to eight million mummified dogs, thought to have been sacrificed to Anubis, the god of the dead, 2500 years ago after excavating tunnels in the ancient Eygptian city of Saqqara.
பயணங்கள் பலவகை 7th கட்டுரை
பயணங்கள் பலவகை DOWNLOAD
-
கோத்திரங்கள் 12 கானானுக்கு வேவு பார்க்க சென்றவர்கள்..... 1. ரூபன் -கோத்திரத்தில் சம்முவா 2. சிமியோன் -கோத்திரத்தில் சாப்பாத் 3. யூதா -கோ...
-
வேதாகம தீர்க்கதரிசிகள் வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள் என குறிப்பாக பலர் குறிக்கப்பட்டுள்ளனர். சிலர் குறிக்கப்படவில்லை, ஆனால் தீர்க்கதரிசனம் ...
-
பைபிளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்ற இக்கட்டுரையில் வேதாகமத்தின் பகுப்பு வேதாகமத்தை எப்படி உருவாக்கினார்கள் எழுதியது யார் என்பதைப் ப...