புதன், 25 ஜூன், 2014

அடுத்த 15 வருடத்தில் சீனா தேசம் கிறிஸ்தவ தேசமாக மாறும் - ஆய்வறிக்கை


முழங்கால் யுத்தம் நிச்சயம் தேசம் வெல்லும்....


அடுத்த 15 வருடத்தில் சீனா தேசம் கிறிஸ்தவ தேசமாக மாறும் - ஆய்வறிக்கை

சமீபத்தில் வெளிவந்த சில ஆய்வறிக்கைகள் உலகை உலுக்கி உள்ளன. கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்து வருவதையே இன்றைய நிகழ்வுகள் எடுத்து காட்டுகின்றன. முக்கியமாக ஆப்ரிக்கா தேசத்தில் ஒரு வருடத்திற்கு 6 லட்சம் பேர் இயேசு கிறிஸ்துவை சொந்த தெய்வமாக ஏற்று கொண்டு வருகின்றனர் என்பது நாம் அறிந்த செய்தி. எகிப்து, அரபு நாடுகளில் வேகமாக கிறிஸ்தவம் வளர்ந்து வருவதும் நமக்கு கிடைத்த ஓர் முக்கியமான செய்தி. இது இயேசு கிறிஸ்து சீக்கிரம் வரபோகிறார் என்பதையே காட்டுகிறது.

http://muslimstatistics.wordpress.com/2012/12/14/al-jazeerah-6-million-muslims-convert-to-christianity-in-africa-each-year/
http://www.faithfreedom.org/oped/sina31103.htm
http://www.youtube.com/watch?v=YFlMi-1pG4U

இப்போது நமது ஜெபங்களுக்கு இன்னொரு வெற்றியும் கிடைத்து கொண்டிருக்கிறது. சுவிஷேக அனல் இப்போது இரும்பு கோட்டையாக இருந்த சீன தேசத்தை அசைத்து கொண்டிருக்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 15000 சீனர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டு வருகின்றனர். நாள்தோறும் சபைகள் நிரம்பி வழிகின்றன.

சமீபத்தில் நடந்த உயிர்தெழுந்த பண்டிகையை கொண்டாட தலைநகரில் சுமார் 8 லட்சம் பேர் ஒரே இடத்தில் திரண்டது உலகைய ஆச்சரியப்பட வைத்துள்ளது. மட்டும் இன்றி சபைகளில் இடம் பத்தாமல் போவதால் புதிய சபைகள் கட்டுவதில் விசுவாசிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சீன தேசம் கம்யூனிஸ்ட் தேசம் என்பது நமக்கு தெரியும். இங்கு புத்த மதம் டொஐச்ம் (Buddhism and Daoism (Taoism)) மதங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இங்கு வாழும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இவர்களை பார்க்கும் பொது குறைவானதாக தெரிந்தாலும் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது.

இந்த ஆதாரத்தை பார்க்கவும்
http://www.china-mike.com/wp-content/uploads/2011/03/map-world-religions-chart.jpg

இது மட்டும் அல்ல. சமீபத்தில் சீன அரசாங்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. அதில் கிறிஸ்தவர்களின் வளர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் அடுத்த சில ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 400 மில்லியனை தாண்டும் எனவும், அதாவது சீனர்கள் 3ன்றில் ஒருவர் கிறிஸ்தவராய் இருப்பார்.

ஆதாரத்திற்கு இந்த தளத்தை அணுகவும். Great Britain-China Centre; The Buddhist Times “China will soon have World’s Largest Christian Population” April 1, 2009

சுமார் 20 வருடங்களில் 3 சதவீதமாக இருந்த கிறிஸ்தவம் இன்று 33 சதவீதத்தை எட்டி வருகிறது. அதாவது புத்த மதம், டொஐச்ம் மற்றும் முகமதியர்கள் 67% பெரும் கிறிஸ்தவர்கள் 33% பெரும் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. The Washington Post “Poll Finds Surge of Religion Among Chinese” Feb. 8, 2007

சில புள்ளி விவரங்கள்
1) தற்போது சீன தேசத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் தொகை இங்கிலாந்து மற்றுள் இத்தாலி மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது என்பது மகிழ்ச்சி தர கூடிய செய்தி.
2) பரிசுத்த வேதாகமம். இன்று உலகிலேயே இந்தியாவை மிஞ்சும் வகையில் அதிகமான வேதாகமம் சீன தேசத்தில் அச்சடிக்கப்படுகிறது. இந்திய தேசத்தில் அதிக மொழிகளில், அதிக வேதாகமம் அச்சடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சீன தேசம் இதையும் மிஞ்சி சமீபத்தில் 50 மில்லியன் வேதாகம அச்சிட்டு நாளை கொண்டாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் (2008 ம் ஆண்டு) புதிய வேதாகம பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு ஒரு மில்லியன் வேதாகமத்தை அச்சிட்டு வருகின்றனர். இதுவும் பத்தவில்லையாம்
The Times UK “The book they used to burn now fires new revolution of faith in China” Dec. 8, 2007; Fox News “Chinese Factory Set to Become World's Largest Bible Producer” Dec. 7, 2007
3) கத்தோலிக்க போப்பா: கத்தோலிக்கர்கள் அவர்களுடைய தலைவராக போப் அவர்களை நியமித்துள்ளார்கள். சீன மக்கள் தொகையை கணக்கிட்டு சீனர்கள் தங்களுக்கென்று ஒரு போப் நியமித்துள்ளார்கள்.
BBC News “China ordains bishop despite Vatican objection” Nov. 20, 2010
4) 2030ம் வருடத்தில் ஆலயம் செல்லும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்க மக்கள் தொகையையும் மிஞ்சும்.
5) Liushi church 5000 மக்கள் தொகையை கொண்டது. ஆனால் இங்கு 8 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இது ஓர் சிறிய நகரம் என்றும் வர்ணிக்கப்படுகிறது.
6) பேராசிரியர் 'யங்' (sociology at Purdue University and author of Religion in China) நிச்சயம் சீன தேசம் முழுமையான கிறிஸ்தவ தேசமாக மாறும் என்றரிவித்துள்ளார்.
7) 1949ம் வருடம் சீன தேசத்தில் 1 லட்சம் ப்ரோடேச்டேன்ட் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். 2010ல் 58 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. இது 2025ம் ஆண்டில் 159 மில்லியன் ஆக உயரும்.
8) 2030 மொத்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 247 மில்லியன் ஆக இருக்கும்.

இன்னும் பல ஆதாரங்கள் உண்டு. ஆனாலும் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும் அல்லவா. 1949ல் இருந்த கிறிஸ்தவ வளர்ச்சியை தடுக்க mao என்கிற இயக்கம் கிறிஸ்தவர்களை அடக்கியது. இன்றும் தொடர்கிறது. சீன தேசத்தில் சுவிஷேசம் அறிவிக்க தடை உள்ளது. அப்படி அறிவிப்பவர்கள் சிறைச்சாலையில் கொடுமைகளை அனுபவிக்க நேரிடும். மதமாற்ற தடை சட்டம் அமுலில் உள்ளது. மீறுபவர்கள் கொலை செய்யப்படுவார்கள்.
ஆதாரம்:
http://www.persecution.net/china.htm
http://www.nationalreview.com/corner/376329/chinas-exploding-christian-population-still-facing-persecution-bob-fu
http://www.nationalreview.com/article/371473/china-still-persecuting-christians-jillian-kay-melchior
http://www.christianitytoday.com/ct/2013/february-web-only/persecution-in-china-is-very-real.html

இப்படிப்பட்ட கொடுமையான சூழ்நிலையில் தான் கிறிஸ்தவம் வளர்ந்து வருகிறது. வீடுகளில் ஜெபக்கூட்டங்கள் நடத்த கூடாது, தெருக்களில் கிறிஸ்தவ நிகழ்சிகள் செய்ய கூடாது, ஆலயத்தில் மட்டும் தான் ஆராதனை செய்ய வேண்டும் என்று பல கட்டுபாடுகள் உள்ளது. இதனால் மறைமுக ஆலயங்கள் (UNDERGROUND CHURCHES) அதிகமாகி கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட ஆலயங்களில் உள்ள விசுவாசிகள் வெளியே சென்று தைரியமாக சுவிசேஷத்தை அறிவித்து வருகின்றனர்.

மட்டும் அல்ல illeagal churches என்ற ஓர் குழுவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படி பல நிலைகளிலும் எப்படியாவது சுவிசேஷத்தை சீனா அறிய செய்திட வேண்டும் என்று துடிக்கின்றனர். கிறிஸ்தவர்கள் வளர்ச்சியை அரசாங்கள் பல முயற்சிகள் எடுத்தும் பாலால் அளிக்காமல் போய் விட்டது. 2030ல் சீன அரசாங்கத்தில் 3ன்றில் ஒருவர் கிறிஸ்தவராய் இருப்பார். அல்லேலூயா..

இந்திய தேசத்திலும் இன்று அதிகமான அடக்குமுறை கிறிஸ்தவர்களுக்கு எதிராக தூண்டப்படுகிறது. பல ஆலய கட்டுமான பணிகள் போலீஸ் நிலையத்தில் வழக்காக உள்ளது. கிறிஸ்தவர்கள் நிலம் வாங்குவதை தடுக்கவும் இன்று ஓர் கும்பல் முயற்சி செய்து வருகிறது. ஆலயங்களில் சிலுவை வெளியே தெரிய கூடாது, வீடுகளில் ஜெபக்கூட்டம் நடத்த கூடாது என்று இன்று பிசாசானவன் மதவெறி பிடித்தவர்களை ஏவி வருகிறான்.

ஒரிசா மாநிலத்தில் கிருஸ்தவர்களு எதிரான வன்முறை நடந்தேறியது நமக்கு தெரியும். ஆனால் இன்று ஒரிசா கந்தமாலில் 6 பேருக்கு ஒருவர் கிறிஸ்தவராக இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? எங்கு அடக்குமுறை வேகமாக வளர்கிறதோ அங்கே கிறிஸ்தவம் வேகமாக காலூன்றுகிறது. அரபு நாடுகளில் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதை அறிவீர்கள். ஆனால் இன்று அரபு நாடுகளில் கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்து வருகிறது.

இப்படி இயேசு கிறிஸ்துவின் வருகையின் அடையாளங்கள் நிறைவேறி கொண்டே வருகின்றன. கிறிஸ்தவனாய் உங்களை காட்டதவரை உங்களுக்கு பிரச்சினை இல்லை. கிறிஸ்தவனாய் நீங்கள் வேதாகமத்தை சுமந்தால் பின்னால் ஓர் கூட்டம் உங்களை தொடரும். இது முடிவு அல்ல.. இந்தியாவில் கிறிஸ்தவம் வளர்வதற்கு ஆதாரங்கள். நிச்சயம் இந்திய தேசம் இயேசுவை கண்டே தீரும்.

மத்தேயு 28:18. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

கால் மிதிக்கும் தேசம் எல்லாம் என் கர்த்தருக்கு சொந்தமாகும்
கண் பார்க்கும் பூமி எல்லாம் கல்வாரி கொடி பறக்கும்



http://www.persecution.org/2014/04/22/china-on-course-to-become-worlds-most-christian-nation-in-15-years/
http://www.telegraph.co.uk/news/worldnews/asia/china/10776023/China-on-course-to-become-worlds-most-Christian-nation-within-15-years.html
http://www.china-mike.com/facts-about-china/facts-religion/

2 கருத்துகள்:

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD