பல்லவர் காலக் கட்டிடக்கலை
மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள்
கல்லினால் கட்டிடங்களை அமைக்கும் முறையைத் தென்னகத்தில் அறிமுகப்படுத்தியது பல்லவர்களே. ஆரம்பத்தில் பாறைகளைக் குடைந்து குடைவரை கோயில்களை அமைத்தனர். அத்துடன் பாறைகளை வெளிப்புறத்தில் செதுக்கி ஒற்றைக்கல் கோயில்களையும் அமைத்தனர். பின்னர் கற்களைப் பயன்படுத்திக் கட்டுமானக் கோயில்கள் அமைக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி, திருக்கழுங்குன்றம், தளவானூர், பல்லாவரம், நாமக்கல் ஆகியவை உட்படப் பல இடங்களில் பல்லவர்களின் குடைவரை கோயில்களைக் காணலாம். மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற "பஞ்ச பாண்டவர் ரதங்கள்" என அழைக்கப்படும் கோயில்கள் ஒற்றைக் கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டவை ஆகும். காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப்பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என்பனவும் புகழ் பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலும் பல்லவர்களின் கட்டுமானக் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக