வியாழன், 21 ஆகஸ்ட், 2014

கலை வரலாறு


மைக்கலாஞ்சலோவின் ஆதாமின் உருவாக்கம் (1508-1512) (வத்திக்கான் நகர்) சிறு தேவாலயத்தில்.
கலை வரலாற்றுத் தொடர்
வரலாற்றுக்கு முந்திய கலை
பண்டையக் கலை வரலாறு
மேலைநாட்டுக் கலை வரலாறு
கிழக்கத்தியக் கலை வரலாறு
இஸ்லாமியக் கலை வரலாறு
சமகாலக் கலை
கலை என்பது பொதுவாக காட்சிக் (visual) கலைகளின் வரலாற்றையே குறிக்கின்றது. எண்ணங்களையும், உணர்வுகளையும் பிறருக்கு விளக்கும் நோக்குடனோ; அழகியல் நோக்கங்களுக்காகவோ; காட்சிக்குரிய வடிவத்தில் மனிதர்களால் உருவாக்கப்படும் ஒரு செய்பொருளே காட்சிக்கலை எனலாம். நீண்ட காலமாகவே கலையைப் பல்வேறு விதமாக வகைப்படுத்தி வந்துள்ளனர். மத்திய காலத்தில் தாராண்மக் கலை (liberal arts), இயந்திரம்சார் கலை (mechanical arts) என்ற வகைப்பாடு இருந்தது. எனினும் அக்காலத்தில் கலை என்பதில், இன்று அறிவியல், வேளாண்மை, பொறியியல் போன்ற துறைகளைச் சார்ந்த விடயங்களும் அடங்கியிருந்தன. தற்காலத்தில் நுண் கலைகள், பயன்படு கலைகள் என்ற வகைப்பாடு உள்ளது. தற்காலத்தில் மனித ஆக்கத்திறனின் வெளிப்பாடே கலை என்று வரைவிலக்கணம் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் கலைகளை ஒன்பதாக வகுத்தனர். கட்டிடக்கலை, நடனம், சிற்பம், இசை, ஓவியம், கவிதை, திரைப்படம், ஒளிப்படவியல், வரைகதை என்பன இவை.

பெரும்பாலோர், சிறப்பாக மேலை நாட்டினர், கலை வரலாறு, ஐரோப்பியக் கலை வரலாற்றையே குறிப்பதாகக் கருதி வந்தனர். எனினும் கலை வரலாறு என்பது கற்கால மனிதர்களின் கலைகள் தொடக்கம், உலகின் பல நாகரீகங்களின் கலை வரலாற்றையும் உள்ளடக்குகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...