மூல மொழியாகிய எபிரேயத்தில் “ஸெக்ஹர்யா (Zekharyah)” என்று அழைக்கப்படுகிறது.
சகரியா என்றால் “கர்த்தர் நினைவுகூர்ந்தார்” எனறு அர்த்தம்.
நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 38-வது புத்தகமாக வருகிறது.
சகரியா என்ற பெயர் கொண்ட ஏறக்குறைய 30 ஆட்களைப் பற்றி வேதாகமம் குறிப்பிடுகிறது.எனினும் இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர், தீர்க்கதரிசியாகிய “இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியா” என்று அழைக்கப்படுகிறார். (சக. 1:1).
சகரியா யூதாவின் தீர்க்கதரிசியாக அவர்கள் அடிமைத் தனத்தில் இருந்து மீண்ட பிறகு கி.மு.520ல் வழ்ந்தவர்.
ஆகாய் முதன் முறையாக தீர்க்க தரிசனம் உரைத்த இரண்டு மாதக் காலக் கட்டத்தில் சகரியாவும் தன் முதல் தீர்க்கதரிசனத்தை உரைத்தார்.
அடிமைத்தன காலக் கட்டத்திற்குப் பிந்திய மூன்று சிறிய தீர்க்கதரிசிகளில் ஒருவராக சகரியா திகழ்கிறார். ஆகாயும் மல்கியாவும் மற்ற இருவர் ஆவர்.
சகரியா, தங்கள் தேவாலயத்தை மீளக் கட்டுவதற்காக யூதேயா தேசத்திற்குத் திரும்பிய சொற்ப யூதர்களுக்கு மத்தியில் ஊழியம் செய்தார்.
ஆகாயைப் போல், சகரியாவும் தேவாலய மறு கட்டுமானத்திற்காக ஜனங்களை ஊக்கப்படுத்தினார். ஆனால், அவருடைய ஊக்கவுரை கற்சுவர்களையும் தற்காலத் தேவைகளையும் கடந்து சென்றது. மிடுக்கும் தெளிவும் நிறைந்த வெளிப்பாடுகளோடு, சகரியா, தேவ ஜனங்களை இரட்சித்து, உலகம் முழுவதும் வியாபிக்கப் போகும் இரட்சகரைக் குறித்து அறிவித்தார்.
இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கப் போகிற இரட்சிப்பைக் குறித்து தெள்ளந் தெளிவான ஆதாரங்களோடு எடுத்துக் கூறியதில் சகரியாவின் தீர்க்கதரிசன புத்தகம் முக்கிய ஸ்தானத்தைப் பிடிக்கிறது.
மேசியாவின் வருகைக்கான கடைசி காலக் கட்டத்தின் ஆரம்ப நிகழ்வாகவே இந்த தேவாலயத்தின் மீளக் கட்டும் பணி அமைகிறது, என்று சகரியா கூறினார்
இது அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெற்ற தனது ஜனங்களுக்கு உணர்ச்சிப் பூர்வமான செய்தியாகும்.
சகரியாவின் தீர்க்கதரிசனைத்தை ஆராயும் போது, இயேசு கிறிஸ்துவின் காலத்துக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தெள்ளந் தெளிவாக எழுதப்பட்ட, நிறைவேறவிருக்கும் வாக்குத் தத்தங்களைக் காணலாம்.
இன்னும் நிறைவேறாத வாக்குத்தத்தங்களும் உள்ளன – கடைசி காலத்தில் கிறிஸ்துவின் வருகையே அது. நம் ராஜா வருகிறார். அவர் நித்திய காலமும் ஆளுகை செய்வார்.
மொத்தம் 14 அதிகாரங்களும், 211 வசனங்களையும் கொண்டுள்ளது.
8-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 13-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
இந்தப் புத்தகத்தின் 6-ம் அதிகாரம் 8-ம் வசனம் வரை தொடர்ச்சியான எட்டு தரிசனங்கள் அடங்கியுள்ளன. ஆலயம் திரும்ப கட்டப்படுவதுடன் சம்பந்தப்பட்ட இவை தானியேலுக்கும் எசேக்கியேலுக்கும் உண்டான தரிசனங்களை ஒத்திருக்கின்றன.
▶ முதலாம் தரிசனம்: நான்கு குதிரைவீரர் (1:1-17).
▶ இரண்டாம் தரிசனம்: கொம்புகளும் தொழிலாளிகளும் (1:18-21).
▶ மூன்றாம் தரிசனம்: எருசலேமின் செழுமை (2:1-13).
▶ நான்காம் தரிசனம்: யோசுவாவின் விடுவிப்பு (3:1-10).
▶ ஐந்தாம் தரிசனம்: குத்துவிளக்கு தண்டும் ஒலிவ மரங்களும் (4:1-14).
▶ ஆறாம் தரிசனம்: பறக்கும் புஸ்தகச்சுருள் (5:1-4).
▶ ஏழாவது தரிசனம்: அளவிடும் மரக்கால் (5:5-11).
▶ எட்டாம் தரிசனம்: நான்கு இரதங்கள் (6:1-8).
சகரியா புத்தகத்தை ஆராய்கிறவர்கள் அதன் நம்பகத் தன்மைக்கு ஏராளமான அத்தாட்சிகளைக் காண்பர். தீருவை உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார், 13 ஆண்டுகள் முற்றுகையிட்ட பிறகே தீருவைப் பாழாக்கினான். இருந்தாலும், அப்போது தீரு முழுமையாக அழிக்கப்படவில்லை. சகரியா பல ஆண்டுகளுக்கு பிறகு, தீரு முழுமையாக அழிக்கப்படும் என முன்னறிவித்தார். மகா அலெக்ஸாந்தடர், தீருவின் தீவு நகரத்தைத் தரைமட்டம் ஆக்குவதற்காகவே கடலினூடே புகழ்பெற்ற ஒரு பாதையை அமைத்தான். அவன் அதை இரக்கமின்றி சுட்டெரித்துப்போட்டு இவ்வாறு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு உரைக்கப்பட்ட சகரியாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினான். (சக. 9:2-4).
சகரியா புத்தகத்திலிருந்து சில எடுத்துக்காட்டுகள் :
✍ சகரியா 9:9 - மத்தேயு 21:4,5 ; யோவான் 12:14-16
✍ சகரியா 12:10 - யோவான் 19:34-37
✍ சகரியா 13:7 - மத்தேயு 26:31 ; மாற்கு 14:27
✍ சகரியா 8:16 - எபேசியர் 4:25
✍ சகரியா 3:2 - யூதா 9
✍ சகரியா 14:5 - யூதா 15
சிறப்பான கட்டுரை
பதிலளிநீக்குஅருமை நன்றி
பதிலளிநீக்கு