புதன், 26 ஆகஸ்ட், 2015

பிபிலியா

பைபிள்- பிபிலியா

"பைபிள்" இது கடந்த 7 நூற்றாண்டுகளாக அதிகம் அச்சடிக்கப்படும் நூல். 14-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் "காக்ஸ்டன்" என்பவர் அச்சு இயந்திரம் கண்டு பிடித்ததும் முதன் முதலில் அச்சு ஏறிய புத்தகம் தான் "பைபிள்". சுமார் 1500 ஆண்டுகளாக வேதம் எழுதப்பட்டது.

கடந்த காலத்தில் தேவன், தீர்க்கதரிசிகள் மூலம் நமது மக்களிடம் பேசியிருக்கிறார். அவர், பல வேறுபட்ட வழிகளிலும் பல சமயங்களிலும் பேசினார் (.எபிரேயர் 1:1)

இந்த உலகத்தில் உள்ள கணக்கிலடங்காத புத்தகங்களில், ஒரு புத்தகத்தை மட்டும் ஈடு இணையற்ற புத்தகம் என்று சொல்ல முடியும் என்றால் அந்தப் புத்தகம் பரிசுத்த வேதாகமம் ஆகும். இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருமே படித்துப் பின்பற்ற வேண்டிய புனித நூல் பைபிள்.

பைபிள் என்ற வார்த்தை Bibilia (பிபிலியா) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தையாகும். இதன் பொருள் "புத்தகங்கள்" என்பதாகும். உலகில் இன்றைக்கு பேசப்படும் ஏறத்தாழ 6800 மொழிகளில் 2000 மொழிகளில் பரிசுத்த வேதாகமத்தின் ஒரு புத்தகமாவது மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. ஆதாரப்பூர்வமான ஒர் அறிக்கையின்படி 2 வாரங்களுக்கு ஒரு முறை மொழிபெயர்ப்பாளர்கள் அடங்கிய ஒரு குழு புதியதொரு மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்க்கிறார்கள்.

இலங்கையில் தமிழ் விவிலியப் பதிப்பு (தமிழ் விகிபிடியா கூறுகிறது)

தரங்கம்பாடியில் வெளியான இரண்டாம் பதிப்பு 1741-1743 ஆண்டுகளில் இலங்கையில் கொழும்பு நகரில் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது. இலங்கைத் தமிழரின் மொழி வழக்கத்திற்கு ஏற்ப அதில் சில மாற்ற ங்கள் செய்யப்பட்டன. இலங்கையில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக இருந்த ஐ.பி. இம்ஹோஃப் (I.B. Imhoff) என்பவரின் ஆதரவின் கீழ் அது  வெளியானது.இலங்கையில் 1743இல் புதிய ஏற்பாடு வெளியிட ப்பட்டது. பழைய ஏற்பாட்டின் முதல் பகுதியாகிய ஐந்நூல்களை (Pentateuch) இலங்கைத் தமிழராகிய பிலிப்பு தெ மெல்லோ (Philip de Mello) மொழிபெயர்த்தார். அது 1790இல் டச்சு ஆளுநரின் பெயரால் அச்சிடப்பட்டது.

அநேக மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு முன்பாகவே தமிழ் மொழியில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது. இது கர்த்தர் நமக்கு கொடுத்த கிருபை. அதை தினம் வாசித்து தியானம் பண்ணி ஆவிக்குரிய வாழ்கையில் ஆசீர்வாதம் பெறுவோம்.

ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான்.
அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான்.
அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப் போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான்.தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான்.உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான். அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான்.(சங்கீதம் 1:2-3)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...