திங்கள், 7 செப்டம்பர், 2015

தேவனுடைய பெயர்கள்

தேவனுடைய பெயர்கள்

"ஏல்" என்ற பொருளுடன் இணைந்த பெயர்கள்:-

ஏல் என்ற எபிரெய சொல்லிற்கு
"வல்லமையுடையவர்" என்று பொருள். தமிழ்
வேதாகமத்தில் இந்த சொல் "தேவன்" என்று
எழுதப்பட்டுள்ளது. இந்த சொல்லுடன் இணைந்த
தேவனுடைய பெயர்களை காண்போம்.

1. El Elyon - உன்னத தேவன். ஆதி 14:18

2. El Shaddai - சர்வ வல்லமையுள்ள தேவன் (ஆதி
17:1) எல்லாம் செய்யவல்ல தேவன்,
போதுமானவரான தேவன் (Almighty GOD, All sufficient
GOD), வல்லமை அளிக்கிறவர், தமது ஜனத்தின் சகல
தேவைகளை சந்திக்கிறவர், பாதுகாக்கிறவர்
என்ற பல கருத்துகள் அடங்கிய பெயர்.

3. El Olam - சதாகாலமுமுள்ள தேவன் (Everlasting
GOD) ஆதி 21:33)

4. El Gadol - மகா தேவன் (சங் 95:3)

5. El Chai - ஜீவனுள்ள தேவன் யோவா 3:10

6. El Qanna, El Qanno - எரிச்சலுள்ள தேவன் மாத்
20:5;34:14

7. El Aman இரக்கமுள்ள தேவன் உபா 4:31

8. El Rachum -
உண்மையுள்ள தேவன் உபா 7:9

9. El Roi -0- எள்னை காண்கின்ற தேவன் ஆதி 16:13

10. El Gibbor - வல்லமையுள்ள தேவன் ஏசா 9:6

யேகோவா என்ற பெயருடன் இணைந்தவை:-

யேகோவா என்றால் மாறாதவர்,
நிலைத்திருக்கிறவர் என்றும், தாமாக
உயிருடனிருந்து (Self existing one) தம்மை
வெளிப்படுத்துகிறவர் என்றும் பொருள்.
எபிரெய மொழியில் உயிரெழுத்துக்கள்
கிடையாது. YHWH என்ற இப்பெயர் மிகவும்
புனிதமானது என்று கருதிய யூதர்கள் அதை
கூறாமல் விட்டுவிட்டனர். எனவே அதன் சரியான
உச்சரிப்பு இப்பொழுது தெரியாது.
யேகோவா என்றும் யாவே என்றும் உச்சரிக்கப்பட்ட
து. இப்பெயர் "இருக்கிறவராகவே
இருக்கிறேன்" (Yeheye Asher Yeheye) என்ற பெயருடன்
தொடர்புடையது. தமிழ் வேதாகமத்தில் இச்சொல்
"கர்த்தர்" என்று பல இடங்களில் எழுதப்பட்டுள்ளது.

1. யேகோவா ஏலோஹீம் (YHWH ELOHIM) -
தேவனாகிய கர்த்தர்.
*. யேகோவா ஏலோஹே தா - உன் தேவனாகிய
கர்த்தர்.

1. யேகோவா ஏலோஹீனு - நம்முடைய
தேவனாகிய கர்த்தர்.

* யேகோவா ஏலோஹே - என் தேவனாகிய கர்த்தர்.
- ஆதி 2:4; யாத் 20:5; சங் 99:5; சகரி 14:5

2. அதோனை (ADONAI YHWH) - கர்த்தராகிய ஆண்டவர்
ஆதி 15:2,8

3. யேகோவா ஏலியோன் (YHWH ELYON) -
உன்னதமான கர்த்தர் சங் 7:17

4. யேகோவா ஹோசீனு (YHWH HOSEENU) - நம்மை
உண்டாக்கின கர்த்தர் சங் 95:6

5. யேகோவா சாபோத் (YHWH SABOATH) -
சேனைகளின் கர்த்தர் 1சாமு 1:3

6. யேகோவா நிசி (YHWH NISSI) - நமது
கொடியாகிய கர்த்தர் யாத் 17:15

7. யேகோவா யீரே (YHWH YEREH) -
பார்த்துக்கொள்கிற கர்த்தர், தேவைகளை
நிறைவாக்குகிற கர்த்தர் ஆதி 22:8-14

8. யேகோவா சிட்கீனு (YHWH TSIDKEENU) - நமது
நீதியாக இருக்கிற கர்த்தர் எரே 23:6

9. யேகோவா மெக்கடிஷ்கெம் (YHWH
MEKKADISHKEM) - தூய்மையாக்குகிற கர்த்தர்,
பரிசுத்தமாக்குகிற கர்த்தர் யாத் 31:13

10. யேகோவா ராய், யேகோவா ராஹீ (YHWH ROHI)
- மேய்பராகிய கர்த்தர் சங் 23:1

11. யேகோவா ரஃப்பெக்கா, யேகோவா ரஃப்பா
(YHWH RAPHEKA) - பரிகாரியாகிய கர்த்தர்,
சுகமாக்குகிற கர்த்தர் யாத் 15:26

12. யேகோவா ஷாலோம் (YHWH SHALOM) - (நமது)
சமாதானமாகிய கர்த்தர் நியா 6:24

13. யேகோவா ஷம்மா (YHWH SHAMMAH) -
நம்மோடிருக்கிற கர்த்தர் (The LORD is present) எசே
48:35

14. யேகோவா ஷமர் (YHWH SHAMAR) - (உன்னை)
காப்பாற்றுகிற கர்த்தர் சங் 121:5

15. யேகோவா யாஷா (YHWH YASHA) -
இரட்சகராகிய கர்த்தர் ஏசா 60:16

இதை போன்ற இன்னும் பல பெயர்கள் உண்டு.

கட்டு கதைகளுக்கு விலகி தினமும் வேதத்தை தியானியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...