திங்கள், 7 செப்டம்பர், 2015

இயேசு கடவுள் என்று பரிசுத்த வேதம் சொல்லுகின்றதா ?

இயேசு கடவுள் என்று பரிசுத்த வேதம் சொல்லுகின்றதா ?

நிச்சயமாக அப்படியே சொல்கின்றது .

1. பாவத்தை மன்னிக்க தகுதி ஏக இறைவனுக்கே உண்டு ; தனக்கு அந்த அதிகாரம் இருப்பதாக இயேசு சொல்கின்றார்..
மத்தேயு 9:6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் ..
2. இந்த உலகத்தை நியாம் தீர்க்க ஒன்றான மேய்தேவனுக்கே தகுதி உண்டு ; அந்த தகுதி தனக்கு இருப்பதாக இயேசு சொல்கின்றார் ..
யோவான் 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையு.ம் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்...
.
3. இந்த உலகத்தை சிருஷ்டிக்க எல்லாம் வல்ல கடவுளால் மட்டுமே முடியும் ; இந்த உலகத்தை சிருஷ்டித்தவர் இயேசு தான் என்று வேதம் சொல்கின்றது .
.
யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை..
.
.
4. மரணத்தை எந்த தீர்க்க தரிசியும் ஜெயித்ததாக சரித்திரமே இல்லை ; மரணத்தை ஜெயிக்க கடவுளால் மட்டுமே முடியும் . இயேசு , மரணத்தை ஜெயித்ததன் மூலம் தான் தான் கடவுள் என்பதை நிருபித்துள்ளார் ..
.
.ரோமர் 1:5. மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்....
.
5.எதையும் செய்ய வல்லவர் மட்டுமே கடவுளாக இருக்க முடியும் ; கீழே பூமியில் அவர் நடமாடிய பொழுது மேலே பிதாவாக இருப்பதும் நானே என்றார் ; இது எந்த மனித மூளைக்கும் எட்டாத கடவுளுடைய தகுதியாகும் .
.
யோவான் 3:13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை..
.
6.இந்த மனிதர்கள் இப்படி தான் வாழ வேண்டும் என்று கட்டளைகள் கொடுப்பதற்கும் , அதை மாற்றி அமைப்பதற்கும் கடவுள் ஒருவருக்கே தகுதி உண்டு ; அந்த தகுதி தனக்கு இருப்பதாக மத்தேயு 5 முதல் 7 அதிகாரத்தில் அனேக முறை சொல்லி உள்ளார் ; அவர் பேசும் பொழுது கடவுள் தீர்க்கதரிசியாகிய என் மூலம் சொல்கின்றார் என்று சொல்லாமல் நான் சொல்கின்றேன் என்று சொல்லி கட்டளைகளை கூறுகின்றார் .
.
மத்தேயு 5:27. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று..
.மத்தேயு 5 22. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்;.
மத்தேயு 5:32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்....
.
7.ஒரு சிறு தவறும் செய்யாதவர் தான் கடவுளாக இருக்க முடியும் ; இயேசு , தான் ஒரு சிறு பாவம் கூட செய்யாதவர் என்று சொல்கின்றார் ..
.
யோவான் 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை...
.
8.பரலோகத்திற்கு செல்ல எந்த மனிதனும் வழியாக இருக்க முடியாது .
.இயேசு தான் மட்டுமே பரலோகம் செல்ல வழி என்று சொல்கின்றார் ..
.
யோவான் 3 :13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை..
.
.இவரை மட்டுமே நான் பணிந்து கொள்கின்றேன் ..
.****************************************************************************.
இயேசு , நான் தான் கடவுள் , என்னை வணங்குங்கள் என்று நேரடியாக சொன்னாரா ?.
.
அவர் இப்படிதான் தன்னை வெளிப்படுத்த வேண்டும் ; அப்படி வெளிபடுத்தினால் தான் நான் அவரை வணங்குவேன் என்று அவருக்கு நிபந்தனை போட நீயும் நானும் யார் ? ; அவர் எப்படி தன்னை வெளிப்படுத்தினாரோ அப்படியே அவரை ஏற்று கொள்ள வேண்டும் அது தான் எல்லாம் வல்ல ஒரே இறைவனுக்கு கொடுக்கும் மரியாதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...