வியாழன், 24 செப்டம்பர், 2015

எழுப்புதல் என்றால் என்ன..?

எழுப்புதல் என்றால் என்ன..?


எழுப்புதல் என்பதை புதுப்பித்தல், உணர்வடைதல், மிக அதிகமாக செயல்பாடுகளுடன் இருத்தல், மறுமலர்ச்சி, வெதுவெதுப்பான நிலையில் இருந்து அனலாகும்படி திரும்புதல், உலகத்திலிருந்தும் பாவங்களிலிருந்தும் மனந்திரும்புதல், தேவனிடத்திற்கு திரும்புதல் அல்லது திருப்புதல் மற்றும் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படுதல் அல்லது ஆயத்தப்படுத்துதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்..!
•••இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்புங்கள்... 2 நாளாகமம் 30 :6
அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார். யோபு 36 :10
எழுப்புதல் அடைந்த மனிதனின் ஆத்துமா கீழ்கண்ட விதமாக கதறும்:
••• திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும், உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும். சங்கீதம் 6 :4
எழுப்புதல் கூட்டங்களில் கீழ்கண்ட விதமாக பிரசங்கிக்கப்படும்:
••• நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு, எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும். எரேமியா 4 :14
•••ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். அப்போஸ்தலர் 2 :36
••• நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2 :38
எழுப்புதல் அடைந்த சமூகமானது கீழ்கண்ட விதமாக கிரியைகள் நடப்பிக்கும்:
••• பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். சங்கீதம் 22 :27
ஜனங்களின் மத்தியில் எழுப்புதல் உண்டாக வேண்டுமென கர்த்தரும் விரும்புகிறார்:
°°° 7 நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் ‪#‎திரும்புவார்கள்‬ என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 24 :7
∆∆மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது. மத்தேயு 3 :2
∆∆மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். மத்தேயு 3 :8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...