"நம் ஆண்டவருடைய நாமங்கள்"
ஏசாயா 43:21 இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.
சங்கீதம் 50:23 ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்.
யாத்திராகமம் 20:24 நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.
"ஆண்டவரே ஆயிரம் நாவுகள் இருந்தாலும் உம்மைத் துதிக்க போதாது"
1.பிதாவாகிய தேவனே,
2.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே,
3.பரிசுத்த ஆவியானவரே,
4.திரியேக தேவனே,
5.சர்வ வல்லமையுள்ளவரே,
6.ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரே,
7.ஒருவரும் காணக்கூடாதவரே,
8.ஒருவராய்ப் பெரிய காரியங்களைச் செய்பவரே,
9.தாம் ஒருவரே ஞானமுள்ளவரே,
10.ஏகச்சக்ராதிபதியே,
11.தேவாதி தேவனே,
12.கர்த்தாதி கர்த்தரே,
13.இராஜாதி ராஜாவே,
14.சாவாமையுள்ளவரே,
15.ஆதியும் அந்தமுமானவரே,
16.அல்பாவும் ஓமெகாவுமானவரே,
17.முந்தினவரும் பிந்தினவருமானவரே,
18.மகா உன்னதமானவரே,
19.மகா பெலனுள்ளவரே,
20.மகா பராக்கிரமமுள்ளவரே,
21.மகத்துவமானவரே,
22.வல்லமையின் தேவனே,
23.சேனைகளின் கர்த்தாவே,
24.வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே,
25.சர்வலோகத்துக்கும் ஆண்டவரே,
26.பரிசுத்தர்,பரிசுத்தர்,பரிசுத்தரே,
27.பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரே,
28.தூயாதி தூயவரே,
29.இஸ்ரவேலின் பரிசுத்தரே,
30.பாவத்தைப் பாராத சுத்தக்கண்ணரே,
31.பட்சிக்கும் அக்கினியே,
32.பட்சபாதம் இல்லாதவரே,
33.மிகுந்த கிருபையுள்ளவரே,
34.இரக்கம் உள்ளவரே,
35.மனதுருக்கமுள்ளவரே,
36.எல்லார் மேலும் தயையுள்ளவரே,
37.அன்பாகவே இருக்கிறவரே,
38.அன்பில் பூரணரே,
39.பூரண சற்குணரே,
40.நீதியுள்ளவரே,
41.மகா நீதிபரரே,
42.நீதியின் சூரியனே,
43.நீதியுள்ள நியாயாதிபதியே,
44.சமாதானக் கர்த்தரே,
45.சமாதானப் பிரபுவே,
46.சமாதானக் காரணரே,
47.ஆலோசனைக் கர்த்தரே,
48.ஆலோசனையில் ஆச்சரியமானவரே,
49.செயலில் மகத்துவமானவரே,
50.இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைக்கிறவரே,
51.குறைவுகளை நிறைவாக்கும் தேவனே,
52.ஐசுவரிய சம்பன்னரே,
53.எரிச்சலின் தேவனே,
54.மன்னிக்கிற தேவனே,
55.வாக்கு மாறாதவரே,
56.தம் வார்த்தையில் உண்மையுள்ளவரே,
57.பொய்யுரையாத தேவனே,
58.ஒப்பற்றவரே,
59.மாசற்றவரே,
60.குற்றமற்றவரே,
61.ஒளியாய் இருப்பவரே,
62.எவ்வளவேனும் இருள் இல்லாதவரே,
63.உத்தமனுக்கு உத்தமரே,
64.புனிதனுக்குப் புனிதரே,
65.மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராகத் தோன்றுகிறவரே,
66.தயவுள்ளவனுக்குத் தயவுள்ளவரே,
67.இஸரவேலின் ஆறுதலே,
68.இஸ்ரவேலனுக்குப் பனியாய் இருப்பவரே,
69.இஸ்வேலின் ஜெயபலமானவரே,
70.இஸ்ரவேலின் மேய்பபரே,
71.இஸ்ரவேலின் நம்பிக்கையே,
72.இஸ்ரவேலின் இராஜாவே,
73.இஸ்ரவேலை ஆளும் பிரபுவே,
74.இஸரவேலின் பரிசுத்தரே,
75.நியாயாப்பிரமாணிகரே,
76.எங்கள் இரட்சகரே,
77.எங்கள் கேடகமே,
78.எங்கள் துருகமே,
79.எங்கள் உயர்ந்த அடைக்கலமே,
80.எங்கள் கோட்டையும் அரணுமாய் இருப்பவரே,
81.அநூகூலமான துணையே,
82.இரட்சண்யக்கொம்பே,
83.பிளவுண்ட மலையே,
84.சாரோனின் ரோஜாவே,
85.பள்ளத்தாக்கின் லீலியே,
86.வெண்மையும் சிவப்புமானவரே,
87.ஆத்துமா நேசரே,
88.கிக்சிலி மரமே,
89.மருதோன்றிப் பூங்கொத்தே,
90.கன்னியர்களால் நேசிக்கப்படுபவரே,
91.வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிக்கிறவரே,
92.என்னுடைய நேசரே,
93.என் இளவதின் நாயகரே,
94.என ஆத்துமா மணவாளனே,
95. பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே,
96.தலை தங்கமயமாயிருக்கிறவரே,
97.பாலில் கழுவப்பட்டவைகள் போல் இருக்கிற கண்களையுடையவரே,
98. முற்றிலும் அழகானவரே,
99.தேனிலும் உம் வாய் மதுரமானதே,
100. மிகவும் நல்லவரே,
101.யேகோவா தேவனே,
102.யேகோவாயீரே-எல்லாம் பார்த்துக் கொள்பவரே,
103.யேகோவா ஷாலோம்-சமாதானம் அளிக்கும் கர்த்தரே,
104.யேகோவா ஷம்மா-தம் சமுகமளிக்கும் கர்த்தரே,
105.யேகோவா நிசி-என் ஜெயக்கொடியானவரே,
106.யேகோவா ஈலியோன்-உன்னதமான கர்த்தரே,
107.யேகோவா ரோஹி- என் மேய்ப்பரானவரே,
108.யேகோவா ஸிட்கேனு-நீதியாயிருக்கிற கர்த்தாவே,
109.யேகோவா சபயோத்-சேனைகளின் கர்த்தரே,
110.யேகோவா மெக்காதீஸ்-பரிசுத்தமாக்கும் கர்த்தரே,
111.யேகோவா ரஃபா-குணமாக்கும் கர்த்தரே,
112.யேகோவா ஒசேனு-உருவாக்கும் கர்த்தரே!,
113.யேகோவா ஏலோஹீன்-எங்களுடைய தேவனே,
114.யேகோவா ஏலோகா-உம்முடைய தேவனே,
115.யேகோவா ஏலோஹே-என் தேவனே,
116.ஏலோஹிம்-எங்கும் நிறைந்தவரே,
117.எல்ஷடாய்-சர்வ வல்லமையுள்ளவரே,
118.இயேசு என்னும் நாமத்திற்கு,
119.இம்மானுவேல் என்ற நாமத்திற்கு,
120.தேவனுடைய வார்த்தை என்ற நாமத்திற்கு,
121.உயர்ந்த உம் நாமத்திற்கு,
122.ஊற்றுண்ட பரிமளதைலம் போலிருக்கும் உமது நாமத்திற்கு,
123.எல்லா நாமத்திற்கு மேலான உமர் நாமத்திற்கு,
124.பலத்த துருகமான உம் நாமத்திற்கு,
125.வல்லமையில் பெரிய உம் நாமத்திற்கு,
126.மகத்துவமான உம் நாமத்திற்கு,
127.உம் இன்பமான நாமத்திற்கு,
128.உம் நாமம் சமீபமாயிருப்பதற்காக,
129.என்னைக் காண்கிறவரே,
130.நித்தய பிதாவே,
131.அதிசயமானவரே,
132.ஆலோசனைக் கர்த்தாவே,
133.இருக்கிறவராக இருக்கிறவரே,
134.மேசியாவே,
135.எங்கள் குருவே,
136.எங்கள் போதகரே,
137.எங்கள் சிநேகிதரே,
138.தாயும் தகப்பனுமானவரே,
139.நல்ல போதகரே,
140.நானே உன் பரிகாரி என்றவரே,
141.தகப்பன் சுமப்பதுபோல் எங்களைச் சுமக்கிறவரே,
142.இயேசுவே மகாராஜாவே,
143.ஜெய கிறிஸ்துவே,
144.தேவனுடைய ஓரே பேறான குமாரனே,
145.தேவனுக்குச் சமமாய் இருப்பவரே,
146.பிதாவின் சித்த்தை நிறைவேற்றுப் பூமிக்கு வந்தவரே,
147.உலகின் ஒளியே,
148.மெய்யான திராட்சைச் செடியே,
149.ஜீவ அப்பமே,
150.வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருப்பவரே,
151.உலக்கத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கச் செய்யும் மெய்யான ஒளியே,
152.நல்ல மேய்ப்பரே,
153.மேய்ப்பனும் கண்காணியுமாய் இருப்பவரே,
154.ஆடுகளுக்காய் ஜீவனைக் கொடுத்தவரே,
155.நானே வாசல் என்றவரே,
156.இளங்கிளையைப் போலவும் வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கின்றவேரைப் போலவும் எழும்பினவரே,
157.எங்களுக்காய் அசட்டைபண்ணப்பட்டவரே,
158.மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரே,
159.துக்கம் நிறைந்து பாடு அனுபவித்தவரே,
160.எங்களுடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு எங்கள் துக்கங்களைச் சுமந்தவரே,
161.எங்களுக்காய் அடிப்பட்டு வாதிக்கப்பட்டவரே,
162.எங்களுடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டவரே,
163.எங்களுடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டவரே,
164.உம்முடைய தழும்புகளால் நாங்கள் இன்றும் குணாமாகிறோம் ஆகவே,
165.பரத்திற்கு ஏறி இன்றும் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறவரே,
166.ஒருவன் பாவம் செய்தால் அவனுக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுபவரே,
167.எங்களை விட்டு எடுபடாத நல்ல பங்கே,
168.ஜெபிக்க எங்களுக்குப் போதிப்பவரே,
169.உவமைகளால் எங்களோடு பேசுபவரே,
170.பரலோக இராஜ்ஜியத்திற்கு அடுத்தவைகளை விளக்கிக் கூறியவரே,
171.உம்முடைய அடிச்சுவடுகளைத் தொடந்து வரும்படி மாதிரியை வைத்துப் போனவரே,
172.சாலொமோனிலும் பெரியவரே,
173.சமாதானக் காரணரே,
174.சர்ப்பத்தின் தலையை நசுக்கினவரே,
175.சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடம் கொடுங்கள் என்றவரே,
176.பிதாவின் வீடாகிய தேவாலயத்தைக் குறித்து வைராக்கியமாக இருப்பவரே,
177.மரணத்திற்கு அதிகாரியாக இருந்த சாத்தானை உம் மரணத்தால் வென்றவரே,
178.மகா பிரதான ஆசாரியரே,
179.நித்தியப் பிரதான ஆசாரியரே,
180.உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் எங்களோடு இருக்கிறவரே,
181.உலகம் தரக்கூடாத சமாதானத்தைத் தருகிறவரே,
182.என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப் போகிறேன் என்றவரே,
183.எங்களுடைய இதயத்தில் வாழ்பவரே,
184.எங்கள் நேசரே,
185.எங்கள் பிரியமே,
186.எங்கள் உயிரினும் மேலானவரே,
187.தேவனுடைய ஆவியானவரே,
188. கிறிஸ்துவின் ஆவியானவரே,
189.கிருபையின் ஆவியே,
190.ஆதியிலே ஜலத்தின் மேல் அசைவாடினவரே,
191.தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரே,
192.சத்திய ஆவியானவரே,
193.பிதாவின் ஆவியானவரே,
194.உயிர்ப்பிக்கிற ஆவியே,
195.ஞானத்தின் ஆவியே,
196.பெலனுள்ள ஆவியே,
197.பலமும் அன்பும் தெளிந்த புத்தியையும் அருளும் ஆவியானவரே,
198.நித்திய ஆவியே,
199.புத்திர சுவிகாரத்தின் ஆவியே,
200.விண்ணப்பங்களின் ஆவியே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
கர்த்தர் தாமே நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக