எங்கள் சிறகுகள்
சுதந்திர வானத்தின் காற்றில் பரவி மிதக்கும்
எங்கள் மகிழ்ச்சிச் சிறகுகளைத் தடுக்க
பூமியின் புற்றீசல்கள் எம்மாத்திரம் . . ?
எங்கள் விசுவாசத் துணிச்சலின் முன்
ஆமானின் அதிகாரத் திட்டங்கள்
வால் மடக்கி ஓடும்
எங்கள் எஸ்தர்களின்
முழங்கால்களின் முன்
பாதாளப் பெரும்படைகள்
மூட்டு விறைக்கும்
இந்த சிறகுகளைக் கொய்ய
கோடாரிகளைத் தூக்குவோரே
நீங்களும் வாருங்கள்
எங்களைப்போல சிறகுகள் பெற . . . .
----- எஸ்தர் கதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக