ஞாயிறு, 1 நவம்பர், 2015

1 சாமுவேல் - இஸ்ரவேலரின் அரசர்கள் ஆரம்பமும் நியாயாதிபதிகளின் ஆட்சி முடிவும்

இஸ்ரவேலரின் அரசர்கள் ஆரம்பமும் நியாயாதிபதிகளின் ஆட்சி முடிவும்

🌹 1 சாமுவேல் 🌹

 ☀ தற்கால எபிரேய வேதாகமத்தில் “ஷ்மூஏல் – ஆலேப்”, “ஷ்மூஏல் பேத்” என்று முறையே 1 சாமுவேல், 2 சாமுவேல் புத்தகங்களை அழைக்கின்றனர்.

☀ மூல பாஷையான எபிரேயுவில் 1 சாமுவேல் மற்றும் 2 சாமுவேல் ஆகிய இரண்டு ஆகமங்களும் “மூர்க்கால தீர்க்கதரிசிகள்” என்னும் ஒரே தலைப்பில் கீழ் வருகிறது.

☀ இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் சாமுவேல். நாத்தான் மற்றும் காத் ஆகும். இவர்களுல், சாமுவேல் அதிகமான அதிகாரங்களை எழுதியுள்ளார்.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 9-வது புத்தகமாக வருகிறது.

☀ சரித்திரத்திலேயே முதல் முதலாக இஸ்ரவேலர்களுக்கு இராஜாவாய் ஏற்படுத்தப்பட்ட சவுலின் சரித்திரம் இந்த புத்தகத்தில் தான் வருகிறது.

☀ அநேக நூறு வருடங்கலாக நடந்து வந்த நியாயாதிபதிகளின் ஆட்சி இந்த புத்தகத்தோடு முடிவடைகிறது.

☀ சாமுவேல் தீர்க்கதரிசிதான் கடைசியாக வந்த நியாயாதிபதியாகும்.

☀ சாமுவேல் பிறப்பு முதல் சவுலின் இறப்பு வரையிலான சரித்திர சம்பவங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

☀ இந்நூலை 3 பிரிவுகளாக பிரிக்களாம் a. 1-7 அதி சாமுவேலும் ஏலியும், b. 8-15 அதி சவுலும் சாமுவேலும். c. 16-31 அதி தாவீதும், சவுலும்.

☀ அன்னாளின் ஜெபம்(1அதி), சிறுவனாகிய சாமுவேல் (3அதி), தாவீதும் கோலியாத்தும் (17அதி), தாவீது – யோனத்தானின் நட்பு (18அதி) என்று சிறுவர்கள் மனதில் இடம் பிடித்த சம்பவங்கள் இப்புத்தகத்தில் உண்டு.

☀ சாமுவேலை குறித்து அதிகமாய் வருவதால் இந்நூலுக்கு அவருடைய பெயரே வைக்கப்பட்டுள்ளது.

☀ இந்நூலில் முக்கிய கதாபாத்திரங்களாக அன்னாள், சாமுவேல், சவுல் மற்றும் தாவீது வருகின்றனர்.

☀ இந்த நூலில் “எபனேசர்”, என்றும் “சேனைகளின் கர்த்தர்” என்றும் “மேசியா” என்றும், “ராஜா வாழ்க” என்றும் முதல் முதலாக வருகிறது. (1:3, 2:10, 7:12, 10:24).

☀ சாமுவேல் தான் முதல் முதல் தீர்க்கதரிசனத்தை கையால் எழுதி வைத்த தீர்க்கதரிசி ஆவார்.

☀ இந்நூலில் பரிசுத்த ஆவியானவரை குறித்து அநேக காரியங்களை அறிந்துக்கொள்ளலாம் 10:69; 11:6; 14:13,18; 16:14.

☀ இந்நூலில் “ஜெபம்”, “விண்ணப்பம்”, “வேண்டுதல்”, போன்ற வார்த்தைகள் அடிக்கடி வருகின்றன. ஏறக்குறைய 11 இடங்களில் ஜெபத்தை பற்றி வருகிறது.

☀ தாவீது சவுலுக்கு தப்பி ஒடி தங்கியிருந்த 15 இடங்களை பற்றி இப்புத்தகத்தில் படிக்கலாம்.

☀ இந்நூலில் மொத்தம் 31 அதிகாரங்கள் உள்ளன, இவைகளில் 17-ம் அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 29-ம் அதிகாரம் சிறிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ சாமுவேல், நாத்தான் மற்றும் காத் எழுதின சம்பவங்களை ஏசாயா தீர்க்கதரிசி ஒன்று சேர்த்திருப்பார் என்று கருதப்படுகிறது.

☀ ஆங்கில வேதாகமத்தில் 810 வசனங்களாகவும் தமிழ் வேதாகமத்தில் 811 வசனங்களாகவும் வருகிறது.

☀ இந்த ஆகமத்தில் 50 வசனங்கள் நிறைவேறின தீர்க்கதரிசனங்களையும் 2 வசனங்கள் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களையும் கொண்டுள்ளது.

☀ இந்நூலில் 4 வாக்குத்தத்தங்களையும் 117 கட்டளைகளையும், 157 கேள்விகளையும் கொண்டுள்ளது.

☀ ஏறக்குறைய 57 காரியங்களை முன்னறிவிக்கிறது.

சாமுவேல் புத்தகமும் ஜெபமும்...,

1. அன்னாளின் ஜெபத்தால் சாமுவேல் பிறக்கிறார் – 1 சாமு 1:10-28.

2. சாமுவேலின் ஜெபத்தால் இஸ்ரவேல் ஜனங்கள் ஜெயம் பெறுதல் – 1 சாமு 7:5-10.

3. ராஜாவை தெரிந்தெடுக்க சாமுவேல் கர்த்தரை நாடுதல் – 1 சாமு 8:5,6.

4. ஜெபிப்பதால். தேவனிடம் இரகசிய ஆலோசனைகளை கற்றுக் கொள்ளலாம் – 1 சாமு 9:15.

5. தனக்கு கொடுக்கப்பட்ட ஜனங்களுக்காக ஜெபிக்காமல் இருப்பது பாவம் – 1 சாமு 12:23.

6. சவுலின் ஜெபத்தை தேவன் நிராகரித்தல் – 1 சாமு 18:6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD