இஸ்ரவேலரை நியாயம் விசாரித்த
🌹 நியாயாதிபதிகள்🌹
☀ எபிரேய வேதாகமத்தில் நியாயாதிபதிகள், “ஷோஃபெட்டிம்” (Sho·phetim) எனப்படுகிறது.
☀ நியாயாதிபதிகள் ஆகமத்தின் ஆசிரியர் யாரென்று குறிப்பாக தெரியவில்லை. சாமுவேலாக இருக்கக்கூடும் என்று வேதப்பண்டிதர்களால் யூகிக்கப்படுகிறது.
☀ வேதாகமத்தில் 7வதாக வரும் புத்தகம் இதுவே.
☀ இஸ்ரவேலரை நியாயம் விசாரித்த நீதிபதிகளிள் வாழ்க்கை வரலாறு இந்த நூலில் உள்ளமையால் இதற்கு “நியாயாதிபதிகள்” எனும் பெயர் உண்டாயிற்று.
☀ இது ஏறக்குறைய 450 வருட சரித்திரத்தை உள்ளடக்கியது.
☀ இந்த 450 வருடங்களில் ஏறக்குறைய 350 வருடங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கு கீழ்படிந்து நடந்தது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
☀ "கர்த்தரை நோக்கி" என்ற வார்த்தை 12 முறையும், "ஒப்புக்கொடுத்தார்" என்ற வார்த்தை 23 முறையும், "இரட்சிப்பு" என்ற வார்த்தை 7 முறையும் இப்புத்தகத்தில் உண்டு.
☀ உலகிலேயே மிக பழமையான உவமைக்கதை இந்த ஆகமத்தில் தான் வருகிறது – நியா 9:8-15).
☀ இந்நூலில் ஒரு யுத்தப்பாடலும் இடம் பெற்றுள்ளது (அதி 5).
உலகசரித்திரத்திலேயே ஒரு பெண் மாபெரும் தலைவியாக தேசத்தின் காரியங்களை தலைமை தாங்கி வெற்றிக் கண்ட வரலாறும் இந்த ஆகமத்திலேயே வருகிறது. அந்த பெண் தீர்க்கதரிசியும் நியாயாதிபதியுமான “தெபொராளே”!.
☀ இந்த ஆகமத்தில் உள்ள ஒரு சில காரியங்களும் கால வரிசை ஒழுங்கில் எழுதப்படவில்லை என்பது கவனுக்கபடவேண்டிய காரியம்.
☀ ஆவியானவர் ஒத்னியேல் மீதும், கீதியோன் மீதும் யெப்தா மீதும், பலமுறை சிம்சோன் மீதும் இறக்கினார் (3:10, 6:34, 11:29, 13:25, 14:6,19, 15:14,15).
☀ இந்த ஆகமத்தில் வரும் சிலப் பெயர்கள் எபி11-ல் வரும் விசுவாச வீரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
☀ மொத்தம் 21 அதிகாரங்களும், 618 வசனங்களும் கொண்டுள்ளது.
☀ எழுதப்பட்ட இடம் பாலல்தீனாவாகும். 16.585 வசனங்கள் சரித்திரத்தை கூறுகிறது.
☀ 33 வசனங்கள் நிறைவேறின தீர்க்கதரிசனங்களை கூறிக்கின்றன.
☀ 92 கேள்விகளும், 71 கட்டளைகளும், 5 வாக்குத்தத்தங்களும் இந்நூலில் உள்ளன.
☀ ஏறக்குறைய 26 காரியங்களை முன்னறிவிக்கிறது.
☀ முக்கிய நபர்கள் தெபொராள், கிதியோன், அபிமலேக்கு, யெப்தா, சிம்சோன் மற்றும் தெலீலாள்.
☀ முக்கிய இடங்கள் எரிகோ, காசோர், மோரே மலை, சீகேம், அம்மோள் நிலம் திம்னா, காசா, மிஷ்பா, கிபியா.
☀ தெபொராள், ஏலி, சாமுவேல் உட்பட மொத்தம் 15 நியாயாதிபதிகளின், சரித்திரத்தை உள்ளடக்கியது இந்த புத்தகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக