நல்ல குணசாலியான பெண்
🌹ரூத் 🌹
☀ இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் “Meghilath Ruth” (מגילת רות) அதாவது “ரூத் பற்றிய சுருளேடு” என்பதாகும்.
☀ இந்த புத்தகத்தின் ஆசிரியர் யாரென்று சரியாக தெரியவில்லை ஒருவேளை சாமுவேல் தீர்க்கதரிசி எழுதியிருக்க வாய்ப்பு இருக்கிறது.
☀ சுமார் கி. மு. பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பின் பகுதியில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது. இக்காலங்கள் நியாயாதிபதிகளின் காலம் ஆகும்.
☀ வேதாகமமத்திலே 8-வது புத்தகமாக வருகிறது.
☀ உறுதியற்ற விசுவாச வாழ்வை காண்பித்த காலங்களில் உறுதியான விசுவாச வாழ்வுக்குரிய எடுத்துக்காட்டாக ரூத்தின் புத்தகம் அமைந்துள்ளது. தேவ பக்தி இல்லாத காலங்களில் பக்தியாய் வாழ்ந்த பெண்ணின் கதை.
☀ மோவாபிய பெண்ணான ரூத் என்றும் பெண்மனியிள் வரலாறை விவரிக்கிறது.
☀ வேதத்திலே 2 புத்தகங்கள் பெண்களின் பெயரை கொண்டுள்ளது. ஒன்று ரூத் மற்றொன்று எஸ்தர்.
☀ இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் ஒரு மோவாபிய ஸ்திரி வருவது ஆச்சரியமாக உள்ளது போவாஸ் ரூத் இவர்களின் மகன் ஓபேத், தாவீதின் தகப்பனாகிய ஈசாயிக்கு தகப்பன்.
☀ இப்புத்தகம் அறுப்பின் பண்டிகையாகிய பெந்தேகொஸ்தே பண்டிகையின் சமயத்தில் வாசிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
☀ முக்கிய கதாபாத்திரங்கள் எலிமெலேக்கு, நகோமி, ஒர்பாள், ரூத், போவாஸ், மக்லோன், கிலியோன் மற்றும், ஒபேத்.
☀ முக்கிய இடங்கள் பெத்லகேம் மற்றும் மோவாப் தேசம்.
☀ தமிழ் வேதாகமத்தில் இந்தப் புத்தகம் 5 பக்கங்களில் அடங்கியுள்ளது. ஒருவர் 20 நிமிடங்களில் ஒரு முறை வாய்விட்டு வாசித்துவிடலாம்.
☀ இந்தப்புத்தகம் 4 அதிகாரங்களையும் 85 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ இப்புத்தகத்தில் 16 கேள்விகள் உள்ளன.
☀ மொத்தம் 30 கட்டளைகளை கொண்டுள்ளது.
☀ இந்த புத்தகத்தில் 2 வாக்குதத்தங்கள் உள்ளன.
☀ ரூத் என்றால் “நட்பு” அல்லது “தோழி” என்று பொருள்படும்.
☀ ரூத் “குணசாலி” என்றும் பட்டபெயரை பெற்றவளாய் வாழ்ந்தாள்.
☀ நகோமி என்ற பெயரின் அர்த்தம் “என் இனிமை” என்பதாகும். இருப்பினும், தான் விதவையாகவும் பிள்ளையற்றவளாகவும் இருப்பதால் “கசப்பு” என்பதை அர்த்தப்படுத்தும் மாராள் என்ற பெயரால் தன்னை அழைக்கும்படி கூறுகிறாள்.
☀ ரூத் என்ற பெயர் இந்த புத்தகத்தில் மட்டும் 12 முறை. இது தவிர மத் 1:5-ல் ஒரு முறை வருகிறது.
☀ முழு வேதாகமத்திலும் வருவது பற்றிய செய்திகள், 3 இடங்களில் மட்டுமே இருக்கிறது. அவற்றில் முதலாவது ரூத் ஆகமத்தில் தான் வருகிறது. ரூத் 1:19, 1 சாமு 16:4 மற்றும் லூக் 2:4.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக