ஞாயிறு, 1 நவம்பர், 2015

வேதாகம அளவுகள்

☀ வேதாகம அளவு

[ஏறக்குறைய சமமான அமெரிக்க எடை - ஏறக்குறைய சமமான மெட்ரிக் அளவை]

1. தாலந்து (60 மினா) - 75 பவுண்டு - 34 கிலோ கிராம்

2. மினா (50 சேக்கல்) - (1 1/4) ஒண்ணே கால் பவுண்டு - 0.6 கிலோ கிராம்

3. சேக்கல் (2 பெக்கா) - 2/5 அவுன்ஸ் - 11.5 கிராம்

4. பிம் ( சேக்கல்) - 1/3 அவுன்ஸ் - 7.6 கிராம்

5. பெக்கா (10 கேரா) - 1/5 அவுன்ஸ் - 5.5 கிராம்

6. கேரா - 1/50 அவுன்ஸ் - 0.6 கிராம்


☀ நீட்டல் அளவை:

[ஏறக்குறைய சமமான அமெரிக்க அளவை - சமமான மெட்ரிக் அளவை]

1. முழம் - 18 அங்குலம் - 0.5 மீட்டர்

2. சாண் - 9 அங்குலம் - 23 செ.மீ

3. கையளவு - 3 அங்குலம் - 8 செ.மீ


☀ முகத்தல் அளவை | உலர்ந்த தானிய அளவை:

[ஏறக்குறைய சமமான அமெரிக்க அளவை - சமமான மெட்ரிக் அளவை]

1. கோர் (ஓமர்) (10 எப்பா) - 6 மரக்கால் - 220 லிட்டர்

2. லெதேக் (5 எப்பா) - 3 மரக்கால் - 110 லிட்டர்

3. எப்பா (10 ஓமர்) - மரக்கால் - 22 லிட்டர்

4. சேயா ( 1/3 எப்பா) - 7 குவார்ட்ஸ் - 7.3 லிட்டர்

5. ஓமர் (1/10 எப்பா) - 2 குவார்ட்ஸ் - 2 லிட்டர்

6. கேப் (1/18 எப்பா) - 1 குவார்ட்ஸ் - 1 லிட்டர்

☀ திரவ அளவை:

1. பாத் (1 எப்பா) - 6 காலன் - 22 லிட்டர்

2. இன் (1/6 பாத்) - 4 குவார்ட்ஸ் - 4 லிட்டர்

3. லாக் (1/72 பாத்) - 1/3 குவார்ட்ஸ் - 0.3 லிட்டர்

இந்த அட்டவணையிலுள்ள எண்கள் எல்லாம் 11.5 கிராமுக்குச் சமமான ”சேக்கல்” , 18 அங்குலத்தக்குச் சமமான முழம், 22 லிட்டருக்குச் சமமான எப்பா ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன.

குவார்ட் என்பது உலர்ந்த பொருட்களை அளக்கக்கூடிய குவார்ட் (ஒரு லிட்டரைக் காட்டிலும் சிறிது அதிகமானது) அல்லது திரவங்களை அளக்கக்கூடிய குவார்ட் (ஒரு லிட்டரைக் காட்டிலும் சிறிது குறைவானது) ஆக இருக்கலாம். அளக்கப்படும் பொருளை வைத்து அதை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த அட்டவணை கிடைக்கக் கூடிய சிறந்த தகவல்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. ஆனால், கணித முறைப்படி முழு அளவில் திருத்தமாக இல்லாமல் இருக்கலாம். பண்டைய உலகில் எடைகளும், அளவைகளும், பல்வேறு இடங்களிலும், சமயங்களிலும் மாறுபட்டன.


”எப்பா” , ”பாத்” போன்ற அளவுகள் குறித்த சந்தேகம் இன்றும் நிலவுகிறது. இவற்றைக் குறித்து புதிய ஆராய்ச்சிகளின் கண்டு பிடிப்புகள் தெளிவான விவரங்களைத் தரலாம்.


☀ நாள், மணி நேரக் கணக்கு

ஒரு யூத நாள் என்பது சூரிய அஸ்தமனம் முதல் சூரிய அஸ்தமனம் முடிய 8 சம பகுதிகளாகப் பிரிக்கப்படும்.

1. முதலாம் ஜாமம் - சூரிய அஸ்தமனம் முதல் இரவு 9 மணி வரை.

2. இரண்டாம் ஜாமம் - இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை

3. மூன்றாம் ஜாமம் - நள்ளிரவு முதல் அதிகாலை 3 மணி வரை

4. நான்காம் ஜாமம் - அதிகாலை 3 மணி முதல் சூரிய உதயம் வரை.

5. முதலாம் ஜாமம் - சூரிய உதயம் முதல் காலை 9 மணி வரை

6. இரண்டாம் ஜாமம் - காலை 9 மணி முதல் நண்பகல் வரை

7. மூன்றாம் ஜாமம் - நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை

8. நான்காம் ஜாமம் - பிற்பகல் 3 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரை.


எபிரேய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் உடையன. நமது ஆண்டை போன்று சூரியனின் இடப்பெயர்ச்சியை கொண்டு கணக்கிடாமல் 12 முறை அமாவாசை வந்ததும் ஒரு ஆண்டு என்று கணக்கிடப்பட்டது.

எனவே ஒரு ஆண்டிற்கு ஏறத்தாழ 354 நாட்கள் மட்டும் இருந்தன. இதை சரி செய்வதற்காக மூன்றாண்டுகளுக்கு ஒரு தடவை (19 ஆண்டுகளில் 7 தடவை) வீதார் (Veedhar) என்ற 29 அல்லது 30 நாட்கள் கொண்ட மாதம் ஆதார் மாதத்திற்கும் நிசான் மாதத்திற்கும் இடையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

✡ நிசான் (ஆபிப்) ⇨ மார்ச் - ஏப்ரல் [30 நாட்கள்; இந்த மாதப் பௌர்ணமி தான் பஸ்சல் பௌர்ணமி]

✡ அய்யார் (சீப்) ⇨ ஏப்ரல் - மே [29 நாட்கள்]

✡ சீவான் ⇨ மே - ஜூன் [30 நாட்கள்]

✡ தம்மூஸ் ⇨ ஜூன் - ஜூலை [29 நாட்கள்]

✡ ஆப் ⇨ ஜூலை - ஆகஸ்ட் [30 நாட்கள்]

✡ எலூல் ⇨ ஆகஸ்ட் - செப்டம்பர் [29 நாட்கள்]

✡ திஷ்ரி (ஏத்தானீம்) ⇨ செப்டம்பர் - அக்டோபர் [30 நாட்கள்]

✡ எஷ்வன் (பூல்) ⇨ அக்டோபர் - நவம்பர் [29/30 நாட்கள்]

✡ கிஸ்லேயு ⇨ நவம்பர் - டிசம்பர் [29/30 நாட்கள்]

✡ தேபேத் ⇨ டிசம்பர் - ஜனவரி [29 நாட்கள்]

✡ சேபாத் ⇨ ஜனவரி - பிப்ரவரி [30 நாட்கள்]

✡ ஆதார் ⇨ பிப்ரவரி - மார்ச் [29 நாட்கள்; லீப் வருடங்களில் இது அதார்-1 (30 நாட்கள்), ஆதார்-2 (29 நாட்கள்) என்று இரண்டு மாதங்களாகக் கணிக்கப்படும்]

✡ வியாதார் ⇨ மார்ச் [புகுத்தப்பட்ட மாதம்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஸ்தோத்திர பலிகள் 1000

அன்பான சகோதர சகோதரிகளே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் நம் தேவாதி தேவனை நீங்களும் துதித்து ஆசீர்வாதங்களை பெற்றுகொள்ளுங்களேன். 1. அப்பா பி...