நாடுகடத்தப்பட்டு திரும்பி வந்திருந்த இஸ்ரவேலரை உற்சாகப்படுத்திய –
🌹1 நாளாகமம்🌹
☀ 1 நாளாகமம், 2 நாளாகமம் ஆகிய புத்தகங்கள் எபிரேய வேதாகமத்தில் ஒரே புத்தகமாகவே உள்ளன.
☀ “1,2 நாளாகமம்” என்னும் நூல்கள் மூல மொழியாகிய எபிரேயத்தில் “Divrei Hayyamim” (நாள் நிகழ்வுகள்) எனப்படுகின்றன.
☀ அதாவது, யூதா-இஸ்ரேல் நாடுகளை ஆண்ட அரசர்களின் “காலத்தில்” (நாள்களில்) நிகழ்ந்தவை அங்கே குறிக்கப்பட்டுள்ளன.
☀ கிரேக்க மொழியில் “நாளாகமம்” Paralipomenon (Παραλειπομένων) என்னும் பெயரால், அதாவது “விடுபட்டவை” அல்லது “பிற”, அல்லது “வேறு” என்னும் பொருள்படும் வகையில் அழைக்கப்பட்டன.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 13-வது புத்தகமாக வருகிறது.
☀ இப்புத்தகம் நாடுகடத்தப்பட்டு திரும்பி வந்திருந்த இஸ்ரவேலரை உற்சாகப்படுத்துவதற்கும், தைரியப்படுத்துவதற்கும் எஸ்றாவினால் எழுதப்பட்டது.
☀ இங்கு ஆதாமிலிருந்து தொடங்கிய மேன்மையான பூர்வீக வரலாற்றிலிருந்து, பாபிலோனியரால் இஸ்ரவேலர் நாடுகடத்தப்படும் வரையுள்ள வரலாற்றை எஸ்றா மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.
☀ 1 நாளாகமத்தில் மிக சிறிய அதிகாரம் 20, பெரிய அதிகாரம் 6.
☀ மொத்தம் 29 அதிகாரங்களும், 942 வசனங்களும் உள்ளன.
☀ 1 நாளாகமம் 16:31-ல் வரும் தாவீதின் இந்த பாடல், புதிய பாடல்களுக்கு அடிப்படையாக அமைகிறது. சங்கீதம் 96 இவற்றில் ஒன்றாகும். மற்றொன்று சங்கீதம் 105-ன் முதல் 15 வசனங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
☀ யோவாப், அமாசா, அபிசாய் ஆகியோர் தாவீதின் உடன்பிறந்தார் மகன்கள் என்பதை நாளாகமத்தின் மூலமாக மாத்திரமே நாம் அறிகிறோம்.
☀ 1 நாளாகமத்தில் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் யூதா மக்களின் வரலாறு பற்றி கூறப்பட்டுள்ளது.
☀ அதன்பின் அரசன் தாவீதின் ஆட்சி, உடன்படிக்கைப்பெட்டகம் ஜெருசலேமுக்குக் கொண்டுவரப்படல், ஆலயத்தைக் கட்டுவதற்கும் அங்கு வழிபடுவதற்குமாக தாவீதினால் மேற்கொள்ளப்பட்ட ஆயத்தங்கள் ஆகியனபற்றி கூறப்படுகிறது.
☀ தாவீதின் மரணத்துடன் இப்புத்தகம் முடிவடைகிறது.
☀ எஸ்றா பதிவு செய்துள்ள வம்சாவளி பட்டியலுக்கும் வேதாகமத்தின் மற்ற பகுதிகளுக்கும் முரண்பாடுகள் இருப்பதாக தோன்றலாம். எனினும், சிலருக்கு வேறுபெயர்களும் இருந்தன; மொழிமாறுகிறது; காலம் கடந்து செல்லும் போது சிலருடைய பெயர்களின் உச்சரிப்பு மாறலாம் என்பதையும் மனதில் வைக்கவேண்டும். கவனமான ஆராய்ச்சி இந்த பெரும்பாலான சிக்கல்களை நீக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக