தாவீதின் வரலாறு கூறும்
🌹2 சாமுவேல் 🌹
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் 10-வது புத்தகமாக வருகிறது.
☀ சரித்திர ஆராய்ச்சியாளர்களும், வேதபண்டிதர்களும், 2 நாளா 29:29,30-ன்படி இதனுடைய ஆசிரியர்கள் நாத்தானும், காத்தும் ஆக இருக்க வேண்டும் என கருதுகின்றனர் 2 சாமு 1:18-ன்படி யாசேர் என்பவர் கொடுத்து எழுதி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
☀ இந்த புத்தகத்துனுடைய மையக்கருத்து தாவீதின் இராஜ்யத்தை குறித்ததாகும்.
☀ தாவீது என்கிற வார்த்தை மட்டும் 280 முறை வருகிறது.
☀ இந்த நூலில் 2 உவமை கதைகளை காணலாம் (12:1-4; 14:1-20).
☀ இந்த புத்தகத்தில் மொத்தம் 24 அதிகாரங்களும் 695 வசனங்களும் உள்ளன.
☀ 22-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும் 4-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ முக்கியமான கதாபாத்திரங்கள் தாவீது, உரியா, பத்சேபாள், சாலொமோன் மற்றும் நாத்தான்.
☀ முக்கியமான இடங்கள் எப்ரோன், எருசலேம், காத், மோவாப், ஏதோம் மற்றும் எப்ராயீம் மலை.
☀ இந்த நூலில் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேற நாம் பொறுமையுடன் காத்து இருக்க வேண்டும் என்பதையும், நம்முடைய இரகசிய பாவங்களை தேவன் வெளியே கொண்டுவருவார் என்றும் ஆவிக்குரிய காரியங்களை கற்றுக்கொள்ளலாம்.
☀ 22-ம் அதிகாரத்தில் தாவீது பாடும் பாடலே சங்கீதம் 18 என்று வேதபண்டிதர்கள் கருதுக்கின்றனர்.
☀ இந்த நூலினை மூன்றாக பிரிக்கலாம் : A.தாவீதின் வெற்றியுள்ள வாழ்க்கை (1-10 அதி). B.தாவீதின் உபத்திரவ காலம் (12-24 அதி). C.தாவீதின் மீறுதல்கள் (11அதி).
☀ இந்த புத்தகத்தை சாதாரணமாக 2 மணி நேரத்தில் வாசித்து முடிக்கலாம்.
☀ இந்த நூலில் தாவீதை சிறந்த ராஜாவாகவும், நாத்தானை தைரியமான தீர்க்கதரிசியாகவும் சாதோக்கை உத்தமமான ஆசாரியராகவும் காணலாம்.
☀ இந்த புத்தகத்தில் 125 கேள்விகளும், 70 கட்டளைகளும் உள்ளன.
☀ மொத்தமுள்ள 695 வசனங்களில் 679 வசனங்கள் சரித்திர சம்பவங்களை சொல்லுகின்றன.
☀ 9 வசனங்கள் நிறைவேறின தீர்க்கதரிசனங்களையும் 7 வசனங்கள் இனி நிறைவேறவேண்டிய தீர்க்கதரிசனங்களையும் கொண்டுள்ளது.
☀ இப்புத்தகத்தில் மொத்தம் 25 எதிர்காலத்தை குறித்த காரியங்கள் முன்னறிவிக்கப்பட்டுள்ளது
☀ இந்நூலில் மொத்தம் 13 வாக்குத்தத்தங்கள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக