கர்த்தரைப் போன்றவர் யார்?
🌹 மீகா 🌹
💥மூல மொழியாகிய எபிரேயத்தில் “Mikha” என்று அழைக்கப்படுகிறது.
💥மீகா என்ற பெயர் மிகாவேல் அல்லது மிகாயா என்பதன் சுருக்கமாகும்.
💥மீகா என்றால் “கடவுளைப் போன்றவர் யார்? (who is like God?)” என்று அர்த்தம்.
💥நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 33-வது புத்தகமாக வருகிறது.
💥மீகா எருசலேமுக்கு தென்மேற்கே 20 மைல்கள் தூரத்தில் காத் அருகில் உள்ள மொரேசா ஊரில் பிறந்தவர்.
💥இவர் யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோரின் ஆட்சிகாலத்தில் (கி.மு. 777-717) ஒரு தீர்க்கதரிசியாக சேவித்தார்.
💥இவ்வாறு அவர் தீர்க்கதரிசிகளாகிய ஏசாயாவும் ஓசியாவும் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவராவார். (ஏசா.1:1; ஓசி.1:1).
💥அவர் குறிப்பாக எத்தனை வருடங்கள் தீர்க்கதரிசியாக சேவித்தார் என்பதை திட்டவட்டமாக சொல்ல முடியாது, என்றாலும் குறைந்தது 60 ஆண்டுகளாவது இருக்கும்.
💥வட இராஜ்யமான இஸ்ரவேல், தென் இராஜ்யமான யூதா இரண்டின் அழிவைப்பற்றி முன் தரிசனம். இது ஜனங்களின் மேல் ஏற்படுத்தின கர்த்தரின் ஒழுங்கு, உண்மையாக அவர்களுக்காக எவ்வளவு அதிகமாகக் கவலைப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது.
💥கர்த்தர் அவருடைய ஜனத்தின் மீது கொண்டுவரப் போகும் அழிவைப்பற்றி கண்டிப்பாய் எச்சரிக்க மீகாவை அவர்களிடம் அனுப்பினார்.
💥இஸ்ரவேல் வம்சத்தாருடைய வெறுக்கத்தக்க பாவங்கள், வஞ்சனை (2:2), திருடு (2:8), பேராசை (2:9), விபசாரம் (2:11), கொடுமை (3:3), கபடம் (3:5), அநியாயம் (3:9), கொள்ளை, பொய் சொல்லுதல் (6:12), கொலை செய்தல் (7:2) இன்னும் மற்ற சட்ட விரோதமானக் குற்றங்களைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்.
💥மொத்தம் 7 அதிகாரங்களும், 105 வசனங்களையும் கொண்டுள்ளது.
💥7-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 3-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
💥ஏழு அதிகாரங்களிலும் மீகா பாவத்தை வெறுத்து, பாவிகளிடம் அன்பு செலுத்தும் சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனின் தன்மையை அறிமுகப்படுத்துகிறார்.
💥மீகா, யூதேய நாட்டுப்புறத்தைச் சேர்ந்தவர். என்றாலும் எழுத்தாற்றலில் அவர் குறைவுபட்டவர் அல்ல. கடவுளுடைய வார்த்தையிலுள்ள மிகச்சிறந்த சொற்றொடர்களில் சில அவருடைய புத்தகத்தில்தான் காணப்படுகின்றன.
💥6-ம் அதிகாரம் கருத்தைக்கவரும் உரையாடல் முறையில் எழுதப்பட்டுள்ளது. அவர் சபிக்கிறார், திடீரென்று ஆசீர்வதிக்கிறார், பிறகு மறுபடியும் சபிக்கிறார். இவ்வாறு மீகா ஒரு குறிப்பிலிருந்து மற்றொன்றிற்கு திடீர் திடீரென்று மாறுவதால் அவை கவனத்தைக் கவருகின்றன. (மீ.2:10, 12; 3:1,12; 4:1)
💥இப்புத்தகத்தில் உவமையணி தாராளமாக உபயோகிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கர்த்தர் நடந்து செல்கையில், “மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறது போலவும், மலைகளிலிருந்து பாயுந்தண்ணீர் தரையைப் பிளக்கிறது போலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்து போகும்” என்று வாசிக்கிறோம். (மீகா 1:4; 7:17).
💥இந்தப் புத்தகத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். ஒவ்வொரு பகுதியும் “கேளுங்கள்” என்று ஆரம்பித்து, அதில் கண்டனங்களும், தண்டனை பற்றிய எச்சரிக்கைகளும், ஆசீர்வாதங்கள் பற்றிய வாக்குறுதிகளும் அடங்கியுள்ளன.
💥மீகா கூறிய வார்த்தைகளையே எரேமியா 26:18,19 மேற்கோள் காட்டுகிறது: “சீயோன் வயல் வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண் மேடுகளாய்ப்போம்.” (மீ.3:12).
💥கி.மு. 607-ல் பாபிலோனின் அரசன் ‘பாழ்க்கடிப்பை உண்டாக்கும்படி’ எருசலேமை தரைமட்டமாக்கிய போது இந்தத் தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறியது. (2 நா.36:19)
💥அதைப்போலவே, சமாரியா “வெளியான மண்மேடு” ஆகும் என்ற தீர்க்கதரிசனமும் முற்றிலுமாக நிறைவேறியது. (மீ.1:6,7)
💥கி.மு. 740-ல் அசீரியர்கள் இஸ்ரவேலின் வடராஜ்யத்தை சிறைபிடித்த போது சமாரியாவைப் பாழாக்கினர். (2 இரா.17:5, 6)
💥பிறகு கி.மு. நான்காம் நூற்றாண்டில் மகா அலெக்ஸாந்தர் அதைக்கைப்பற்றினார். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் முதலாம் ஜான்ஹிர் கனஸின் தலைமையில் யூதர்களால் இது பாழாக்கப்பட்டது.
💥மேசியாவின் பிறப்பிடத்தை முன்னறிவிக்கும் மீகா 5:2-ல் உள்ள தலைசிறந்த தீர்க்கதரிசனம். (மத். 2:4-6)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக