வியாழன், 26 நவம்பர், 2015

நாகூம் - இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ

இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ

         🌹 நாகூம் 🌹

💥 மூல மொழியாகிய எபிரேயத்தில்‏ ‏‎“நேகம் (Nachum)”‎‏‎ என்று அழைக்கப்படுகிறது.

💥 நாகூம் என்றால் “ஆறுதலளிப்பவன்.” (consolation)” என்று அர்த்தம்.

💥 தன் பெயரின் அர்த்தத்திற்கு இசைவாக நாகூம், கடவுளுடைய ராஜ்யத்துடன் வரும் சமாதானத்தையும் இரட்சிப்பையும் தேடுவோர் யாவருக்கும் மிகுந்த ஆறுதலை அளிக்கிறார்.

💥 நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 34-வது புத்தகமாக வருகிறது.

💥 யோனாவைப் போலவே நாகூம் அசீரிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான நினிவேக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தான். கி.மு.663-612 வரை தீர்கதரிசன ஊழியம் செய்தான்.

💥 ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நினிவே மனந் திரும்பியதை யோனா பார்த்திரான். ஆனால் அந்தப் பட்டணம் மறுபடியும் துன்மார்க்கத்தில் விழுந்து விட்டது.

💥 “நினிவேக்கு எதிரான கண்டன அறிவிப்பு.” (நாகூ.1:1) அச்சந்தரும் இந்த வார்த்தைகளோடு நாகூம் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பிக்கிறார். ‘இரத்தப்பழிகளின் நகரம்’ என்ற இரண்டே வார்த்தைகளில் அதன் சரித்திரத்தை நாகூம் கூறுகிறார். (3:1)

💥 வட ஈராக்கில் உள்ள தற்கால நகரமாகிய மோசுலுக்கு எதிரே, டைகிரீஸ் நதியின் கிழக்குகரையில் அமைந்த இரண்டு மண் மேடுகளே பூர்வ நினிவே இருந்த இடத்தைக் குறிக்கின்றன. அதில் மதில்களும் அகழிகளும் நிறைந்திருந்ததால் பலத்த பாதுகாப்புமிக்க பட்டணமாக இருந்தது.

💥 பிற்காலத்தில் அசீரிய பேரரசின் தலை நகரமாகவும் சேவித்தது. எனினும், இந்த நகரம் நிம்ரோதின் நாட்களில் உருவானது. அவன், “கர்த்தருக்கு விரோதமான பலத்த வேட்டைக்காரன்… இவன் அசீரியாவிற்குள் சென்று நினிவேயைக் கட்டினான்.” (ஆதி.10:9-11)

💥 இவ்வாறு நினிவேயின் ஆரம்பமே மோசமானதாக இருந்தது. சர்கோன், சனகெரிப், எசரத்தோன் மேலும் அசீரிய பேரரசின் முடிவு காலத்தில் ஆண்ட அஷுர்பானிப்பால் ஆகியோரின் ஆட்சி காலத்தில் இது அதிக புகழ்பெற்றது.

💥 போர்கள், நாடுகளைக் கைப்பற்றுதல் ஆகியவை மூலம் கிடைத்த கொள்ளைப் பொருட்களால் அது செல்வ செழிப்பு உள்ள நாடானது. மேலும் சிறைபிடித்த ஏராளமான கைதிகளை கொடூரமாக, மனிதத் தன்மையற்ற விதத்தில் நடத்தியதற்கு அதன் அரசர்கள் பேர் பெற்றிருந்தனர்.

💥 நினிவே இரத்தப் பழிகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது (3:1).

💥 கொடூரம் நிறைந்த நகரம் (3:19). அசீரியர்கள் தங்கள் பொல்லாத நினைவுகள் (1:11) ,விக்கிரகாராதனை (1:14), கொலை, பொய்கள், நம்பிக்கைத் துரோகம் சமூக அநீதிகள் (3:1-19), ஆகியவற்றுக்காக நியாயந் தீர்க்கப் பட்டனர்.

💥 ஒரே பொருளைப் பற்றி பேசுவதால் நாகூமின் எழுத்துநடை இன்னும் சிறப்படைகிறது. இஸ்ரவேலின் நம்பிக்கை துரோக எதிரியை அவர் அறவே வெறுக்கிறார். நினிவேயின் அழிவுதான் அவர் கண்முன் நின்றது.

💥 மொத்தம் 3 அதிகாரங்களும், 47 வசனங்களையும் கொண்டுள்ளது.

💥 3-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 1-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

💥 முதல் அதிகாரத்தின் பெரும் பகுதி அகரவரிசை செய்யுள் (acrostic poem) நடையில் இருப்பதாக தோன்றுகிறது. (1:8)

💥 நாகூம் தீர்க்கதரிசனம் துல்லியமாக நிறைவேறியதே அதன் நம்பகத் தன்மையை நிரூபிக்கிறது.

💥 நாகூமின் நாளில், அசீரிய உலக வல்லரசின் அகந்தை வாய்ந்த தலைநகர் ‘ஆறுகளின் மதகுகளில்’ திறக்கப்பட்டு அதன் அரண்மனை கரைந்து போய், அது ‘வெறுமையும், வெட்டவெளியும், பாழுமாகும்’ என்று கர்த்தருடைய தீர்க்கதரிசியை தவிர வேறு யாரால் அவ்வளவு தைரியத்துடன் முன்னறிவித்திருக்க முடியும்? (2:6-10)

💥 இதைப் பின்தொடர்ந்த சம்பவங்கள், இந்தத் தீர்க்கதரிசனம் நிச்சயமாகவே கர்த்தரால் கொடுக்கப்பட்டது என்று காட்டின. மேதியரும் பாபிலோனியரும் நினிவேயைக் கைப்பற்றியதைப் பாபிலோனிய அரசன் நெபோபொலேசாரின் பதிவேடுகள் பின்வருமாறு விவரிக்கின்றன:

💥 “(அவர்கள்) நகரத்தை பாழாக்கப்பட்ட குன்றுகளாகவும் (குப்பைக் கூளங்களாகவும் ஆக்கினார்கள்…).” நினிவே அவ்வளவு முழுமையாக அழிக்கப்பட்டதால் பல நூற்றாண்டுகளாக அது இருந்த இடம்கூட தெரியாமல் இருந்தது.

💥 இதை வைத்துக் கொண்டு குறைகாண்போர் சிலர், நினிவே ஒருபோதும் இருந்திருக்க முடியாதென்று சொல்லி வேதாகமத்தை ஏளனம் செய்தனர்.

💥 எனினும், நினிவே இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு 19-ம் நூற்றாண்டில் அங்கே ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. இதுவும் நாகூமின் நம்பகத்தன்மைக்கு கூடுதலான அத்தாட்சியைக் கொடுக்கிறது.

💥 அதை முழுமையாக தோண்டியெடுக்க வேண்டுமென்றால் பல லட்சக்கணக்கான டன் மண்ணை நீக்க வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டது.

💥 நினிவேயில் என்ன தோண்டியெடுக்கப்பட்டது?நாகூம் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை ஆதரிக்கும் அநேக காரியங்கள் கிடைத்தன! உதாரணமாக, அங்கு கிடைத்த நினைவுச் சின்னங்களும் கல்வெட்டுகளும் அதன் கொடூரத்திற்கு சாட்சி பகருகின்றன.

💥 சிறகுகளுள்ள காளைகள் மற்றும் சிங்கங்களின் பெரும் சிலைகளின் பகுதிகளும் உள்ளன. நாகூம் அதைச் “சிங்கங்களின் வாசஸ்தலம்” என்று கூறியதில் ஆச்சரியம் எதுவும் உண்டோ? (2:11).

💥 தற்காலத்துப் போக்குவரத்தைப் பற்றி 2700 ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிவிக்கப்பட்டது இப்புத்தகத்தின் மூலமே. (நாகூம் 2:4).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD