சாத்தான் எதையும் தோற்றுவிக்கமாட்டான். ஆனால், ஏற்கெனவே இருக்கிற ஏதாவது ஒன்றைப்போல போலியாக நடிப்பான்.
☀ தேவனுக்கு அவருடைய ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்து இருப்பது போல சாத்தானுக்கு "கேட்டின் மகன்" (2 தெச 2 :3) இருக்கிறான்.
☀ ஒரு பரிசுத்த திரித்துவம் இருப்பது போல சாத்தானுக்கு ஒரு பாவத் திரித்துவமும் உள்ளது (பிசாசானவன், மிருகம், கள்ளத்தீர்க்கத்தரிசி) (வெளி 20 :10)
☀ தேவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்படுபவர்கள் இருப்பது போல "பொல்லாங்கனுடைய புத்திரர்" (மத் 13 :38) என்று விவரிக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்.
☀ தேவன் தம்முடைய பிள்ளைகளில் செயலாற்றி தம்முடைய சித்தத்தின்படி செய்வதற்கு அவர்களுக்கு விருப்பத்தையும், வாஞ்சையையும் தருவது போல (பிலி 2 :13) சாத்தான் "கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில்" (எபே 2 :2) கிரியை செய்கின்றான்.
☀ "தேவ பக்தியின் இரகசியம்" (1 தீமோ 3 :16) என்று நாம் வாசிப்பது போல "அக்கிரமத்தின் இரகசியம்" (2 தெச 2 :7) என்றும் நாம் வாசிக்கின்றோம்.
☀ தேவன் தம்முடைய தூதரைக் கொண்டு தம் விசுவாசிகளின் நெற்றிகளில் முத்திரையிடுவதைப் போல (வெளி 7 :3) சாத்தானும் தனக்கு அடிமைப்பட்டவர்களின் நெற்றிகளில் தன் பணியாட்களைக் கொண்டு அடையாளம் போடுகிறான்.(வெளி 13 :16)
☀ ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார் (1 கொரி 2 :10) என்று சொல்லப்பட்டிருப்பது போல சாத்தானுடைய ஆழங்கள் (வெளி 2 :24) என்றும் எழுதப்பட்டிருக்கின்றது.
☀ இரட்சகர் இயேசு அற்புதம் செய்தது போல, சாத்தானும் அற்புதங்கள் செய்கின்றான் (2 தெச 2 :9) அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள் (வெளி 16 :14) என்று நாம் காண்கின்றோம்.
☀ கிறிஸ்துவுக்குச் சிங்காசனம் இருப்பது போல, சாத்தானுக்கும் ஒரு சிங்காசனம் இருக்கிறது. (வெளி 2 :13)
☀ கிறிஸ்துவுக்கு அவருடைய சபையிருப்பது போல சாத்தானுக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. (வெளி 2 :9)
☀ கிறிஸ்து உலகத்துக்கு ஒளியாயிருக்கிறார் (யோவான் 8 :12) சாத்தானும் கூட ஒளியின் தூதனைப்போல நடிக்கிறான் (2 கொரி 11 :14)
☀ கிறிஸ்து அப்போஸ்தலர்களை நியமித்தார் (லூக்கா 6 : 13) சாத்தானுக்கும் ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள். (2 கொரி 11 :15)
எனவே, ஆண்டவர் இயேசுவின் மெய்யான கிரியைகளையும், சாத்தானின் போலிகளையும் வேறுப்பிரித்து அறிந்துக்கொள்வது பரிசுத்த வாழ்கைக்கு மிகவும் முக்கியமானதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக