ஞாயிறு, 1 நவம்பர், 2015

நீங்கள் தேவனுடைய ஊழியத்தை செய்பவரா? தயவு செய்து கொஞ்சம் படியுங்கள் ...

நீங்கள் தேவனுடைய ஊழியத்தை செய்பவரா? தயவு செய்து கொஞ்சம் படியுங்கள் ...

*உங்கள் சபையில் ஆராதனை தொடங்கும் முன்பே உங்கள் வருகை இருக்கும் படியாக பாருங்கள்

*செய்தி வேளையில் மட்டுமே வருவது போல உங்கள் வருகை இருக்க வேண்டாம் ...

*கல்யாண பந்தியில் விருந்தாளிகள் வருவதற்கு முன்னே வேலைக்காரர்கள் வந்து ஆயத்தமாக இருப்பார்கள் ...அவர்களை கவனிக்க

*மணவாளனாகிய இயேசுவை பார்க்க மணவாட்டி யாகிய திருச்சபை க்கு வாஞ்சை யோடு அநேக ஜனங்கள் வருவார்கள் ..அவர்களை வரவேற்க கவனிக்க ஊழியர்களாகிய நீங்கள் முதன்மையாக இருக்க பாருங்கள்! !!ஏனெனில் நீங்கள் பரலோக எஜமானுடைய வேலைக்காரர்கள்! !!!

*வேதத்தை ஆள் வைத்து சுமக்காதீர்கள் ... நீங்கள் தான் இந்த உலகத்தில் சிறந்த ஊழியர் என்ற நிலை வந்தாலும் உங்கள் வேதத்தை நீங்களே சுமந்து செல்லுங்கள் ...அந்த வேதம் நீங்கள் சுமக்க கூடியதான எடை உள்ளது தான் ....

*மிக முக்கியமான காரியம் இது ;_உங்கள் சபையில் ஐசுவரியமுள்ள ஒருவனை ஒரு கனமாக எண்ணுவதும் எளிய ஏழை ஒருவனை அற்பமாக அல்லது அவன் மேல் அக்கறை இல்லாதவன் போல நடக்காதீர்கள் ...

*அவன் மனம் வருந்தி என்னை புறக்கணித்து விட்டார்களே என எண்ணி உங்களை குறித்து வருந்தினால் அது தேவனுடைய பார்வையில் பாவமாகும் ..

*நீங்கள் எந்த அளவுக்கு ஐசுவரியவானை கவனித்து அக்கறை எடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் சபையில் இருக்கும் ஏழை ஒருவனின் காரியத்தில் அக்கறை எடுக்க பாருங்கள் ..மாய்மாலம் நமக்கு வேண்டாமே! !!

*அதுபோல உங்கள் சபையின் ஐசுவரிவானுடைய வீட்டு நிகழ்ச்சி களுக்கு போகிற நீங் கள் உங்கள் சபையின் ஏழையின் வீட்டு நிகழ்ச்சி களுக்கு போக மறவாதீர்கள்.

*அநேக விசுவாசிகள் தங்கள் சபையை விட்டு விலக. இது ஒரு காரணமாக இருக்கிறது ...எங்கள் சபையின் போதகர்
எங்கள் இல்ல நிகழ்ச்சி க்கு வரவில்லை ..பெரிய பணக்காரர் வீட்டுக்கு எல்லாம் போகிறார் எங்கள் வீட்டுக்கு வரவில்லை என சபையை விட்டு விலகின அநேகரை பார்க்கிறோம் ...

*உங்கள் சபையின் விசுவாசி உங்களை இவர் எங்கள் சபையின் போதகர் என்று சொல்வதை விட. .இவர் தேவனோடு உறவாடுகிற பரிசுத்தவான் என சொல்லும்படியாக உங்கள் சாட்சி இருக்கும் படியாக பாருங்கள் ...அதுவே உங்கள் ஊழியத்தின் வெற்றி ...

*உங்கள் பிரசங்கத்தினால் மட்டுமல்ல ....உங்கள் வாழ்க்கைமுறை உங்கள் சபையின் விசுவாசியின் வாழ்க்கைக்கு பிரயோஜனம் ஆகும் படி பாருங்கள்! !!!

*உங்கள் ஜெப வாழ்க்கை, ஆவிக்குரிய ஜீவியம், உங்கள் வேதஞானம், ஆகியவைகளை பார்த்து உங்களை தேவனோடு சஞ்சரிக்க தேவ மனிதர் எனது போதகர் என உங்கள் சபை விசுவாசி மற்றவர்களுக்கு சாட்சி சொல்லும் படியாக உங்கள் வாழ்க்கை இருக்க பாருங்கள்! !!

*எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் பிரசங்கங்களில் உங்கள் சபை விசுவாசி உங்களை அல்ல இயேசுவை காணவேண்டும் ....சில விசுவாசிகள் ஊழியரை இயேசுகிறிஸ்துவின் அளவுக்கு இணையாக வைத்து செயல்படுவார்கள் ...அம்மாதிரி அறியா குழந்தை விசுவாசிகள் மத்தியில் என்னால் எதுவும் இயலாது ...நீங்கள் நம்புகிற இயேசு வே உங்களுக்கு அற்புதம் செய்ய முடியும் என கூறுங்கள் ...

*அநேக விசுவாசிகள் இயேசு வை காட்டிலும் ஊழியரையே நம்புகிறார்கள் ...தெளிவான சத்தியத்தை சொல்லி உங்கள் சபையின் விசுவாசிகள் இயேசுவை மட்டுமே சார்ந்திருக்க பாருங்கள் ...அல்லேலூயா !!!

* தேவ ஊழியத்தை செய்கிற உங்களுக்கு ஆலோசனை சொல்ற அளவுக்கு நான் அவ்வளவு சிறந்தவன் இல்லை ...

*. யாரோ ஒருவருக்கு பிரயோஜனம் ஆகும் என்ற எண்ணத்துடன் இந்த பதிவு ...போட்டுள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோபம்

_*வேதத்தில் உள்ள கோபங்கள்*_          ------------- *1) கொஞ்சம் கோபம் - சகரியா 1:15* *2) மிகுந்த கோபம் - மத் 2:16* *3) மிஞ்சுங் கோபம் - சங் 7...