வியாழன், 24 டிசம்பர், 2015

2 பேதுரு - கள்ளப் போதகர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்

கள்ளப் போதகர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்

        🌹2 பேதுரு 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole Petrou B” (Second Letter [Epistle] of Peter) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 61-வது புத்தகமாக வருகிறது.

☀ பேதுரு தன் இரண்டாம் நிருபத்தை எழுதி முடித்தபோது, சீக்கிரத்தில் தான் மரணத்தை எதிர்ப்படவிருந்ததை உணர்ந்தார்.

☀ ஊழியத்தில் உறுதியாய் நிலைத்திருக்க திருத்தமான அறிவு உதவும்; எனவே அதன் முக்கியத்துவத்தைக் குறித்து தன் உடன் கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்ட அவர் பெரிதும் விரும்பினார்.

☀ எழுத்தாளர் குறித்து எழும் எந்தச் சந்தேகங்களையும் இந்தக் கடிதமே நீக்கிவிடுகிறது. எழுத்தாளர் தன்னை “இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு” என சொல்கிறார். (2 பே. 1:1)

☀ மேலும் பேதுரு “இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்” என அவர் குறிப்பிடுகிறார். (3:1)

☀ இயேசு கிறிஸ்துவின் மறுரூபக் காட்சிக்குக் கண்கண்ட சாட்சி என தன்னையே குறிப்பிடுகிறார்; யாக்கோபுடனும் யோவானுடனும் அதைக் காண பாக்கியம் பெற்ற பேதுரு, கண்கண்ட சாட்சிக்கே உரிய பாணியில் உணர்ச்சி ததும்ப இதை எழுதுகிறார். (1:16-21)

☀ தன்னுடைய மரணத்தை இயேசு முன்னறிவித்ததையும் குறிப்பிடுகிறார். (2 பே. 1:14; யோவா. 21:18,19).

☀ முதல் நிருபம் முடித்தப் பின் வெகு சீக்கிரத்திலேயே இது எழுதப்பட்டிருக்கலாம்; பாபிலோனில் அல்லது அதற்கு அருகில் சுமார் கி.பி. 64-ல் பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கலாம்.

☀ இப்புத்தகம் எழுதப்பட்ட இடத்தைக் குறிப்பிடும் நேரடியான ஆதாரம் எதுவும் இல்லை.

☀ இப்புத்தகம் எழுதப்பட்ட சமயத்தில், பெரும்பாலான பவுலின் நிருபங்கள் சபைகளில் வாசிக்கப்பட்டு வந்தன; அது பேதுருவுக்கும் தெரியும். அவர் அவற்றைக் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலுக்குட்பட்டது என்று ஏற்று, “மற்ற வேதவசனங்களோடு வகைப்படுத்தினார்.

☀ பேதுருவின் இரண்டாம் நிருபம் “எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு” என ஆரம்பிக்கிறது.

☀ முதல் நிருபம் யாருக்காக எழுதப்பட்டதோ அவர்களுக்காகவும் பேதுரு பிரசங்கித்திருந்த மற்றவர்களுக்காகவும் இது எழுதப்பட்டதாக தெரிகிறது.

☀ முதல் நிருபம் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டது. அதைப்போல், இரண்டாம் நிருபமும் பல இடங்களுக்கு அனுப்பப்படுவதற்கு ஏற்ப பொதுவான பொருளைக் கொண்டிருந்தது. (2 பே. 3:15, 16; 1:1; 3:1; 1 பே. 1:1).

☀ பேதுரு தன் நிருபத்தின் 2-ம் அதிகாரத்தில் விவரிப்போரைப் போன்று கள்ளப் போதகர்களின் கண்ணிக்குள் விழாதப்படிக்கு எச்சரிக்கையாயிருக்கும்படி அறிவுறுத்துகிறார்.

☀ முதலாம் அதிகாரம், 5-லிருந்து 7 வரையான வசனங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்தவ பண்புகளை வளர்க்க ஊக்கமாய் முயலும்படி பேதுரு சிபாரிசு செய்கிறார்.

☀ பின்பு 8-ம் வசனத்தில், அவர் இவ்வாறு மேலும் சொல்கிறார்: ‘இந்தக் காரியங்கள் உங்களில் இருந்து பெருகினால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவைக் குறித்ததில் செயலற்றவர்களாகவோ கனியற்றவர்களாகவோ இருப்பதிலிருந்து இவை உங்களைத் தடுத்துவைக்கும்.’ இந்தக் கொடிய நாட்களில் கடவுளுடைய ஊழியர்களாக செயல்படுவதற்கு இது நிச்சயமாகவே மிகச் சிறந்த ஊக்கமூட்டுதல்! (1:2)

☀ மொத்தம் 3 அதிகாரங்களும், 61 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 2-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 3-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ மறுரூப தரிசனத்திற்குக் கண்கண்ட சாட்சியாயிருந்த பேதுரு இயேசுவின் மகத்தான ராஜ்ய மகிமையிடம் கவனத்தைத் திருப்புகிறார்.

☀ “தீர்க்கதரிசன வசனம் இதினால் நமக்கு அதிக உறுதியானது” என்று மேலும் கூறுகிறார். கர்த்தருடைய மகத்தான இந்த ராஜ்யத்தைக் குறித்த எல்லா தீர்க்கதரிசனமும் நிறைவேறுவது உறுதி.

☀ இவ்வாறு, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட பேதுருவின் வார்த்தைகளைத் திடநம்பிக்கையுடன் நாம் எதிரொலிக்கிறோம்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பே. 1:4,10,11,19; 3:13; ஏசா. 65:17,18).கள்ளப் போதகர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள் - 2 பேதுரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD