தளர்ந்தவர்களை ஊக்கப்படுத்திய
🌹 1 பேதுரு 🌹
☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole Petrou A” (First Letter [Epistle] of Peter) என்று அழைக்கப்படுகிறது.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 60-வது புத்தகமாக வருகிறது.
☀ பேதுருவே இதன் எழுத்தாளர் என்பது அதன் தொடக்க வார்த்தைகளில் தெளிவாய் தெரிகிறது.
☀ கிறிஸ்தவர்கள் புறமதத்தினரிடமிருந்து அல்லது மதம் மாறாத யூதரிடமிருந்து துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
☀ நீரோ கி.பி. 64-ல் தான் துன்புறுத்துதலை தூண்டினார். அதற்கு சற்று முன்பே, பெரும்பாலும் கி.பி. 62-க்கும் 64-க்கும் இடைப்பட்ட காலத்தில் பேதுரு இந்த நிருபத்தை எழுதியிருக்கலாம்.
☀ பேதுருவுடன் அப்போது மாற்கு இருந்தது உறுதியாய் இந்த முடிவுக்கு வர செய்கிறது. ரோமில் பவுலின் முதல் சிறையிருப்பு காலத்தின்போது (கி.பி. 59-61) மாற்கு பவுலுடன் இருந்தார், ஆனால் ஆசியாவுக்கு பயணப்படும் தறுவாயில் இருந்தார்.
☀ பவுலின் இரண்டாவது சிறையிருப்பின்போது (கி.பி 65), மாற்கு மறுபடியுமாக ரோமில் பவுலுடன் சேர்ந்துகொள்ள இருந்தார். (1 பே. 5:13; கொலோ. 4:10; 2 தீ. 4:11) இந்த இடைப்பட்ட காலத்தில் பாபிலோனில் பேதுருவுடன் தங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கும்.
☀ பேதுரு நிருபத்தின்படி, பாபிலோனில் இருக்கையில் அவர் தன் முதல் நிருபத்தை எழுதினார். (1 பே. 5:13)
☀ ஆனால் சிலர், “பாபிலோன்” என்பது மறைமுகமாக ரோமுக்கு பயன்படுத்தப்பட்ட பெயரென்று சொல்கின்றனர். எனவே, அவர் ரோமிலிருக்கையில் இதை எழுதியதாக வாதாடுகின்றனர். எனினும், அத்தாட்சி அத்தகைய கருத்தை ஆதரிக்கிறதில்லை.
☀ பாபிலோன் ரோமைக் குறிப்பதாய் வேதாகமத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. சொல்லர்த்தமான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகியவற்றில் இருந்தவர்களுக்குப் பேதுரு தன் நிருபத்தை எழுதினார். அதனால், பாபிலோன் என அவர் குறிப்பிட்டதும் சொல்லர்த்தமான பாபிலோனையே குறித்தது. (1:1)
☀ பேதுரு பாபிலோனில் இருந்தார் என்பதற்கு தகுந்த காரணங்கள் இருந்தன. ‘விருத்தசேதனம் செய்தவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படியான’ பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது; பாபிலோனில் பெருவாரியான யூதர்கள் இருந்தனர். (கலா. 2:7-9)
☀ பாபிலோனிய தால்மூட்டின் படைப்பை குறித்து பேசுகையில், யூதேய மதம் சார்ந்த “பாபிலோனிய பெரும் கல்வி சாலைகள்” இருந்ததாக என்ஸைக்ளோப்பீடியா ஜுடேய்க்கா குறிப்பிடுகிறது.
☀ பேதுரு எழுதிய இரண்டு நிருபங்கள் உட்பட, வேதாகமமே அவர் ரோமுக்குச் சென்றதாக குறிப்பிடுவதே இல்லை.
☀ தான் ரோமில் இருந்ததைப்பற்றி பவுல் சொல்கிறார், ஆனால் பேதுரு அங்கிருந்ததாக ஒருபோதும் குறிப்பிடுகிறதில்லை.
☀ ரோமருக்கு எழுதிய தன் நிருபத்தில் பவுல் 35 பெயர்களைக் குறிப்பிட்டு, 26 பேருக்குத் தனிப்பட வாழ்த்துக்களை அனுப்புகிறார். என்றபோதிலும், பேதுருவைப் பற்றி ஏன் அவர் குறிப்பிடுவதில்லை? ஏனெனில் அச்சமயத்தில் பேதுரு அங்கே இல்லையே! (ரோ. 16:3-15)
☀ பேதுரு தன் முதல் நிருபத்தை எழுதிய அந்தப் “பாபிலோன்” மெசொப்பொத்தாமியாவில் ஐப்பிராத் நதியின் கரைகளில் அமைந்திருந்த சொல்லர்த்தமான பாபிலோனே என்பது தெளிவாயிருக்கிறது.
☀ பேதுருவின் முதலாம் நிருபத்தில் மேய்ப்பர்களுக்கு சிறந்த அறிவுரை உள்ளது.
☀ யோவான் 21:15-17-ல் இயேசுதாமே கொடுத்த அறிவுரையையும் அப்போஸ்தலர் 20:25-35-லுள்ள பவுலின் அறிவுரையையும் பின்பற்றி பேதுரு, மேய்ப்பனின் சேவையைப் பற்றி குறிப்பிடுகிறார்; அது மேய்க்கும் வேலை என்றும், தன்னலமற்ற விதத்திலும் மனப்பூர்வமாகவும் ஆர்வத்தோடும் செய்யப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டுகிறார்.
☀ மேய்ப்பன், துணை மேய்ப்பராயிருக்கிறார்; ‘பிரதான மேய்ப்பராகிய’ இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டு சேவிக்கிறார். இயேசுவினுடைய மந்தைக்காக அவருக்கு கணக்கொப்புவிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். மந்தைக்கு முன்மாதிரியாகவும் சகல விதத்திலும் மனத்தாழ்மையோடும் இருந்து மந்தையின் தேவைகளை அவர் கவனிக்க வேண்டும். (5:2-4).
☀ மொத்தம் 5 அதிகாரங்களும், 105 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ முதலாவது மற்றும் இரண்டாவது அதிகாரங்கள் பெரிய அதிகாரங்களாகவும், 5-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ கிறிஸ்தவ வாழ்வின் கடமைகள், உண்மையான வாழ்வு, சகோதர அன்பு ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன (1 பேது 1:1-2:10).
☀ கிறிஸ்தவர்கள் பிற இனத்தாருக்கும் அரசு அதிகாரிகளுக்கும், அடிமைகள் தலைவர்களுக்கும், கணவர் மனைவியருக்கும், மனைவியர் கணவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நினைவூட்டுகிறார் (1 பேது 2:11-4:6).
☀ கிறிஸ்துவின் இறுதி வருகை பற்றிப் பேசி, விழிப்புணர்வு தேவை என வலியுறுத்துகிறார் (1 பேது 4:7-5:11).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக