சனி, 26 டிசம்பர், 2015

2 யோவான் - ஒருவரிலொருவர் அன்புகூருங்கள

ஒருவரிலொருவர் அன்புகூருங்கள

🌹2 யோவான் 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole Ioannou B” (Second Letter [Epistle] of John) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 63-வது புத்தகமாக வருகிறது.

☀ இப்புத்தகத்தின் எழுத்தாளர் தன்னை ‘மூப்பர்’ என குறிப்பிடுகிறார். இது நிச்சயமாகவே யோவானுக்குப் பொருந்துகிறது; ஏனெனில் அவர் முதிர்வயதானவர் மட்டுமல்ல, ‘தூண்களில்’ (கலா. 2:9) ஒருவராகவும் விளங்கினார்.

☀ உயிரோடிருக்கும் அப்போஸ்தலர்களில் கடைசியானவர், கிறிஸ்தவ சபையில் உண்மையான ஒரு ‘மூப்பர்.’ அவர் வெகு பிரபலமானவராக இருந்தார்; எனவே தேவ விசுவாசிகளுக்கு அவரைப் பற்றிய மேலுமான விளக்கம் தேவையில்லை.

☀ முதல் நிருபத்தோடும் யோவானின் சுவிசேஷத்தோடும் எழுத்துநடையில் ஒத்திருப்பதிலிருந்து அவரே எழுத்தாளர் என்பது தெரிகிறது.

☀ முதல் நிருபத்தைப்போல், இந்த இரண்டாம் நிருபமும் எபேசுவில் அல்லது அதன் சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலும் கி.பி. 98-ல் எழுதப்பட்டதாக தோன்றுகிறது.

☀ யோவானின் இரண்டாம் நிருபம் சுருக்கமானது. ஒருவேளை இது ஒரே ஒரு நாணற்புல் தாளில் எழுதப்பட்டிருக்கலாம்; ஆனால் அர்த்தம் நிறைந்த ஒன்று.

☀ இப்புத்தகம், “தெரிந்தெடுக்கப்பட்ட அம்மாளுக்கும் அவர் பிள்ளைகளுக்கும்” எழுதப்பட்டிருக்கிறது.

☀ “கைரியா” (“அம்மாள்” என்பதற்குக் கிரேக்கப் பதம்) என்ற பெயர், அந்தக் காலத்தில் தனிப்பட்ட நபர்களுக்கு வைக்கப்பட்டது. அதனால், அந்தப் பெயருடைய ஒரு நபருக்கே அது எழுதப்பட்டதாக வேதப்பண்டிதர்கள் சிலர் நினைக்கின்றனர்.

☀ மறுபட்சத்தில், கிறிஸ்தவ சபையையே ‘தெரிந்தெடுக்கப்பட்ட அம்மாள்’ என குறிப்பிட்டு யோவான் எழுதினார் என்பது சிலருடைய கருத்து.

☀ கடைசி வசனத்தில் வாழ்த்துதல்கள் சொல்வதாக குறிப்பிடப்பட்ட “சகோதரி” மற்றொரு சபையின் உறுப்பினர்களாக இருக்கலாம். எனவே, இந்த இரண்டாம் நிருபம், முதலாம் நிருபத்தைப் போல் பொதுவாக எழுதப்படவில்லை. ஏனெனில் இது தனி நபருக்கோ, தனிப்பட்ட சபைக்கோ எழுதப்பட்டதாக தெரிகிறது. (1:1)

☀ யோவான் எழுதிய இரண்டாம் நிருபம் 13 வசனங்களை மட்டுமே கொண்ட மிகச் சிறிய நிருபமாகும்.

☀ யோவானின் நிருபங்கள் மியூராடோரியன் சுருள்களின் பாகத்தில் காணப்படுகின்றன.

☀ யோவானின் முதலாம் நிருபத்தைப் போலவே கிறிஸ்தவ விசுவாசத்துக்கு எதிரான கள்ளப் போதகர்களின் கடுந்தாக்குதலே இந்த நிருபமும் எழுதப்பட காரணமாய் அமைந்தது.

☀ அப்படிப்பட்ட கள்ளப் போதகர்களை குறித்து தேவ விசுவாசிகளுக்கு எச்சரிக்க யோவான் விரும்புகிறார்.

☀ அப்போதுதான் அவர்கள் இன்னார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவர்களை விட்டு முற்றிலும் விலகியிருக்க முடியும். பரஸ்பர அன்புள்ளவர்களாய் சத்தியத்தில் தொடர்ந்து நடக்க இது உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD