🌹யோவான் 🌹
☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Kata Iōannēn Euangelion” (The Gospel according to John) என்று அழைக்கப்படுகிறது.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 43-வது புத்தகமாக வருகிறது.
☀ இப்புத்தகத்தை இயேசுவின் பண்ணிரெண்டு சீஷர்களுள் ஒருவரான வயதான யோவான் எழுதியதாகும்.
☀ இயேசுவுடன் இருந்த நெருக்கமான கூட்டுறவால் அவர் வெகுவாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்.
☀ யோவான் ஸ்நானகன், தேவ ஆட்டுக்குட்டியை தன் சீஷர்களுக்கு முதலில் அறிமுகப்படுத்துகையில் இந்த யோவானும் அங்கிருந்தார்.
☀ முழுமையாக ஊழியத்தில் ஈடுபட தம்மோடு வரும்படி கர்த்தர் முதன்முதல் அழைத்த நால்வரில் இவரும் ஒருவர் எனவும் கருதப்படுகிறது. (யோவா. 1:35-39; மாற். 1:16-20)
☀ இவர் இயேசுவின் ஊழியகாலம் முழுவதிலும் அவருடன் நெருங்கிய கூட்டுறவு வைத்திருந்தார். மேலும், கடைசி பஸ்காவின்போது இயேசுவின் மார்பில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தவரும், “இயேசு அன்புகூர்ந்த” சீஷரும் இவரே. (யோவா. 13:23; மத். 17:1; மாற். 5:37; 14:33)
☀ இயேசு சிலுவையில் அறையப்பட்ட கடுந்துயரமான அச்சம்பவத்தின்போது அவர் அங்கிருந்தார். அங்கே இயேசு தம்மைப் பெற்றெடுத்த தாயைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை இவரிடமே ஒப்படைத்தார்.
☀ இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் உண்மையை அறிய பேதுருவையும் முந்திக்கொண்டு கல்லறைக்கு ஓடியவரும் இவரே. (யோவா. 19:26, 27; 20:2-4).
☀ அப்போஸ்தலன் யோவானின் பெயர் இதில் எங்கும் குறிப்பிடப்படவில்லை; ஆனால், முடிவான வசனங்களில், இந்த எழுத்தாளர் “இயேசு அன்புகூர்ந்த” சீஷன் என குறிப்பிடப்படுகிறார். இதுவும் இதைப்போன்ற சொற்றொடர்களும் இந்தப் பதிவில் பல தடவை பயன்படுத்தப்படுகின்றன.
☀ யோவானைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னதாய் குறிப்பிடுகிறார்: “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன”? (யோவா. 21:20, 22) இந்த சீஷன் பேதுருவுக்கும் மற்ற அப்போஸ்தலருக்கும் பின் நெடுங்காலம் வாழ்வாரென இது குறிப்பாய் சுட்டிக்காட்டுகிறது. இதெல்லாம் அப்போஸ்தலன் யோவானுக்குப் பொருந்துகிறது.
☀ இந்த எழுத்தாளர் ஒரு யூதர்; யூதரின் பழக்கவழக்கங்களைப் பற்றியும் அவர்களுடைய தேசத்தைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். (2:6; 4:5; 5:2; 10:22, 23) இயேசுவுடன் அன்னியோன்னியமாக இருந்த சந்தர்ப்பங்களை இப்பதிவு விவரிக்கிறது.
☀ கலிலேயாக் கடல், அதன் ரோமப் பெயரான திபேரியாக்கடல் என குறிப்பிடப்படுகிறது. (6:1; 21:1)
☀ யூதரல்லாதோருக்கு யூத பண்டிகைகளைப் பற்றி குறிப்பிடுகையில் உதவியளிக்கும் விளக்கங்களை யோவான் கொடுக்கிறார். (6:4; 7:2; 11:55)
☀ யோவான் நாடுகடத்தப்பட்ட இடமாகிய பத்மு, எபேசுவுக்கு அருகில் இருந்தது. எபேசு சபையுடனும் ஆசியா மைனரிலிருந்த மற்ற சபைகளுடனும் அவர் பழக்கப்பட்டிருந்தது வெளிப்படுத்துதல் 2-ம் 3-ம் அதிகாரங்களில் குறிப்பிடப்படுகிறது.
☀ யோவான் சுவிசேஷத்தின் தொடக்கம் தனிச்சிறப்பு மிக்கது. ‘வார்த்தை’ யாரென்பதை அது வெளிப்படுத்துகிறது. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.” (1:1,2)
☀ அன்பை குறிக்கும் சொற்களை மற்ற மூன்று சுவிசேஷங்களும் சேர்த்து பயன்படுத்துவதைப் பார்க்கிலும் அடிக்கடி யோவான் பயன்படுத்துகிறார்.
☀ இயேசு, “தேவ ஆட்டுக்குட்டி,” “ஜீவ அப்பம்,” “உலகத்திற்கு ஒளி,” “நல்ல மேய்ப்பன்,” ‘உயிர்த்தெழுதலும் ஜீவனும்,’ ‘வழியும் சத்தியமும் ஜீவனும்,’ “மெய்யான திராட்சச்செடி” என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறார். (1:29; 6:35; 8:12; 10:11; 11:25; 14:6; 15:1)
☀ இயேசு செய்த ஏழு அற்புதங்கள் இப்புத்தகத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளன:
1) கானாவில் திருமணம் (2:1-11);
2) அரச அலுவலர் மகன் குணமாதல (4:46-54);
3) உடல் நலமற்றவர் ஓய்வுநாளில் நலமடைதல் (5:1-9);
4) ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு அப்பமும் மீனும் பகிர்ந்தளித்தல் (6:1-15);
5) இயேசு கடலைக் கடந்து செல்லுதல் (6:16-21);
6) பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல் (9:1-12);
7) மரித்த லாசர் உயிர்பெறுதல் (11:1-44).
☀ இந்த 20-வது நூற்றாண்டில் முக்கிய கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன; இவை யோவான் சுவிசேஷத்தின் நம்பகத் தன்மைக்கு சான்றளிக்கின்றன.
☀ அவற்றில் ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட யோவான் சுவிசேஷத்தின் ஒரு பாகம். இது இப்போது பப்பைரஸ் ரைலண்ட்ஸ் 457 (P52) என்றறியப்படுகிறது. இதில் யோவான் 18:31-33, 37, 38-ன் பகுதி அடங்கியுள்ளது; இது இங்கிலாந்து, மான்செஸ்டரிலுள்ள ஜான் ரைலண்ட்ஸ் நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
☀ மொத்தம் 21 அதிகாரங்களும், 879 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ 6-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 2-வது மற்றும் 21-வது அதிகாரங்கள் சிரிய அதிகாரங்களாகவும் உள்ளது.
☀ நான்காம் நற்செய்தியாகிய யோவான் நற்செய்தி முந்தைய மூன்று நற்செய்தி புத்தகங்களாகிய ஒத்தமை நற்செய்திகளிலிருந்து மாறுபட்டது.
✍ யோவான் இயேசுவின் பொதுப் பணிகாலத்தை மூன்று ஆண்டுக் கால வரையறைக்குள் எடுத்துரைக்கிறார். ஆனால், ஒத்தமை நற்செய்திகளோ இயேசு ஓர் ஆண்டுக் காலமே பொதுப்பணி செய்ததாகக் காட்டுவதுபோலத் தெரிகிறது.
✍ யோவான் காட்டும் இயேசு பல தடவை எருசலேமுக்குப் பயணமாகச் செல்கிறார். ஆனால் ஒத்தமை நற்செய்திகளோ, இயேசு ஒரே முறை எருசலேம் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறுகின்றன.
✍ யோவான் நற்செய்தியில் மற்ற மூன்று நற்செய்திகளிலும் வராத கதாபாத்திரங்கள் வருகின்றனர். எடுத்துக்காட்டாக, நிக்கதேம், சமாரியப் பெண், பிறவியிலேயே பார்வையற்ற ஒருவர், இலாசர், மற்றும் இயேசுவின் அன்புச் சீஷர் ஆகியோரைக் கூறலாம்.
☀ “யோவான் எழுதின” சுவிசேஷம் கூடுதலான தகவல் அளிக்கிறது; மற்ற மூன்று சுவிசேஷங்களில் குறிப்பிடப்படாத 92 சதவீத புதிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
☀ இருப்பினும், யோவான் இவ்வார்த்தைகளுடன் தன் புத்தகத்தை முடிக்கிறார்: “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.” (21:25).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக