🌹லூக்கா🌹
☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Kata Loukan Euangelion” (The Gospel according to Luke) என்று அழைக்கப்படுகிறது.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 42-வது புத்தகமாக வருகிறது.
☀ லூக்கா புத்தகம் கி.பி. 60-65ற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம்.
☀ லூக்கா ஒரு வைத்தியன் (கொலோ.4.14)
☀ கிரேக்க வம்சத்தில் வந்த புற ஜாதியானான கிறிஸ்தவன்.
☀ வேதாகமத்தின் புத்தகங்களை எழுதியவர்களுள் இவர் ஒருவரே புற ஜாதியானவர்.
☀ இவர் பவுலுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தார்.
✍ கொலோசெயருக்கு எழுதிய கடிதத்தில் பவுல் அன்பார்ந்த மருத்துவர் லூக்கா... உங்களை வாழ்த்துகின்றார் எனக் குறிப்பிடுகிறார். (கொலோ 4:14).
✍ பவுல் பிலேமோனுக்கு எழுதிய கடிதத்தில் லூக்காவைக் குறிப்பிடுகிறார்.
✍ 2 தீமொத்தேயு 4:11 இலும் பவுல், என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.
☀ பிறப்பினால் இவர் ஒரு கிரேக்கன். கிரேக்க கலாச்சாரத்தை நன்கு கற்றறிந்தவர்.
☀ பவுலின் இரண்டாவது சுவிசேஷப் பயணத்திலிருந்து பவுல் ரோமாபுரியில் சிறையிலடைக்கப்படும் வரை பவுலுடன் பிரயாணம் செய்தார். மற்றவர்கள் பவுலை விட்டுப் பிரிந்து போன போதிலும், இவர் உண்மையான நண்பனாகப் பவுலுடன் கூடவே இருந்தார். (2தீமோ.4.11).
☀ லூக்கா, லூக்கா சுவிசேஷத்தையும் அப்போஸ்தலர் நடபடிகளையும் எழுதியவர்.
☀ லூக்கா தன் சுவிசேஷத்தில் மூன்றிலொரு பாகத்தை நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைப்பதற்கும் மூன்றில் இரண்டு பாகங்களை சொற்பொழிவுக்கும் ஒதுக்கிவைக்கிறார்.
☀ மத்தேயுவைப்போல் இயேசுவின் வம்சாவளி பட்டியலை ஆபிரகாமோடு நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, “ஆதாம், கடவுளின் குமாரன்” என்பது வரை கொண்டுசெல்லுகிறார்.
☀ குறைந்தது ஆறு பிரத்தியேக அற்புதங்களை விவரிக்கப்பட்டுள்ளது. மற்ற சுவிசேஷங்களில் குறிப்பிடப்படாத, 12-க்கும் அதிகமான உவமைகளையும் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
☀ லூக்கா 9.51-18.35 வரை மிகுதியான பகுதிகள் மற்ற எந்த சுவிசேஷத்திலும் காணப்படவில்லை.
☀ இந்த சுவிசேஷத்தில் ஜெபம் அதிகமாக காணப்படுகிறது.
✍ முதலாவது இயேசுவின் ஜெபத்தைக் கவனிப்போம்...
i. அவருடைய ஞானஸ்நானத்தின் போது (லூக்.3.21).
ii. குஷ்டரோகியை குணமாக்கின பின்பு (5.16).
iii. 12 சீஷர்களைத் தெரிந்தெடுக்கு முன் (6.12).
iv. அவர் மறுரூபமடைந்த மலையில் (9.28).
v. கெத்செமெனே தோட்டத்தில் (22.42).
vi. சிலுவையில் தம்மைத் துன்புறுத்தியவர்களுக்காக (23.34).
vii. சிலுவையில் தமது ஜீவனை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து (23.46).
✍ இரண்டாவதாக ஜெபத்தைக் குறித்து இயேசு செய்த போதனையைக் கவனிப்போம்...
i. கர்த்தருடைய ஜெபம் (11.2-4).
ii. நள்ளிரவில் வந்த நண்பன் பற்றிய உவமை (11.5-13).
iii. விதவையும் நியாயாதிபதியும் (18.1-8).
iv. பரிசேயனும் ஆயக்காரனும் (18.10-14).
☀ சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட சில மக்களுக்காக தேவன் அக்கறை காண்பிக்கிறார். அதாவது குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டவர்கள்...
✍ (உ+ம்) இயேசுவின் காலத்தில் பெண்களும் சிறுவர்களும் குறைவான மதிப்புயைடவர்களாகக் கருதப்பட்டனர். எளியவர்கள், பாவம் செய்தவர்கள், வரி வசூலிப்பவர்கள், யூதாஸ் பகைக்கப்பட்ட சமாரியர்கள் போன்றவர்களை இயேசு மன உருக்கத்துடன கவனித்தார்.
☀ லூக்கா 300-க்கும் மேற்பட்ட மருத்துவ பதங்களை பயன்படுத்துகிறார். இவற்றிற்கு அவர் மருத்துவ விளக்கத்தையும் அளிக்கிறார்.வேதாகமத்தின் மற்ற எழுத்தாளர்கள் (ஒருவேளை மருத்துவ பதங்களை உபயோகித்திருந்தாலும்) கொடுக்காத மருத்துவ விளக்கத்தை அவர் கொடுக்கிறார்.
✍ குஷ்டரோகத்தைப் பற்றி அவர் குறிப்பிடுவதை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுவோம். லூக்கா மற்றவர்களைப் போல ஒரே பதத்தை எப்பொழுதும் பயன்படுத்துகிறதில்லை. அவர்களைப் பொருத்தவரை குஷ்டரோகம் குஷ்டரோகம்தான்; ஆனால் மருத்துவருக்கோ, குஷ்டரோகத்துக்குரிய படிப்படியான ஒவ்வொரு நிலையும் தெரியும். உதாரணம்: “குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன்” என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
✍ லாசரு, “பருக்கள் நிறைந்தவனாய்” இருந்தான் என்கிறார்.
✍ பேதுருவின் மாமியார் ‘கடும் ஜுரமாய்க்’ கிடந்தாள் என்று சுவிசேஷ எழுத்தாளர்களில் வேறு எவரும் சொல்கிறதில்லை. (5:12; 16:20; 4:38).
✍ பேதுரு பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டிவிட்டதாக மாத்திரமே மற்ற மூவரும் நமக்குச் சொல்கின்றனர். ஆனால், லூக்காவோ அப்படி வெட்டப்பட்டவனுடைய காதை இயேசு சுகப்படுத்தியதையும் குறிப்பிடுகிறார். (22:51).
✍ “பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள்; அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்” என்று சொல்வது மருத்துவருக்கே உரிய நடையாய் உள்ளது.
✍ “அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி” என்று, ஒருவனுக்குச் சமாரியன் செய்த முதலுதவியை குறித்து சொல்லப்படுகிறது; இந்தளவு நுட்பவிவரத்தை, “பிரியமான வைத்தியனாகிய லூக்கா”வைத் தவிர வேறு யார் பதிவுசெய்திருக்க முடியும்?
☀ மொத்தம் 24 அதிகாரங்களும், 1151 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ 1-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 16-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி பழைய ஏற்பாடு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட ஆறு குறிப்புகளை லூக்கா இரண்டே வசனங்களில் சொல்லிவிடுகிறார். (லூக். 18:32, 33; சங். 22:7; ஏசா. 50:6; 53:5-7; யோனா 1:17).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக