புதன், 9 டிசம்பர், 2015

மாற்கு புத்தகம்

🌹 மாற்கு 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் Kata Markon Euangelion (The Gospel according to Mark) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 41-வது புத்தகமாக வருகிறது.

☀ மாற்கு சுவிசேஷமே முதலாவது எழுதப்பட்ட சுவிசேஷம்.

☀ சுவிசேஷங்களில் மிகச் சிறியதான இப்புத்தகத்தை எழுதியவர் மாற்கு என சொல்லப்படுகிறது.

☀ இவர் இயேசுவின் அப்போஸ்தலருடைய உடன் ஊழியர், நற்செய்தியின் சேவையில் தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்.

☀ ஆனால் இவர் 12 அப்போஸ்தலரில் ஒருவரல்ல, இயேசுவின் மிக நெருங்கிய தோழர்களில் ஒருவரும் அல்ல.

☀ அப்படியென்றால், இயேசுவின் ஊழியத்தை தொடக்கத்திலிருந்து முடிவு வரை உயிரோட்டத்தோடு நுட்பமாக விவரிக்க இவரால் எப்படி முடிந்தது? அவற்றை பேதுருவிடமிருந்தே அவர் பெற்றிருக்க வேண்டும்; ஏனெனில் பேதுரு அவருடைய நெருங்கிய கூட்டாளி.

☀ சொல்லப்போனால், பேதுரு அவரை ‘என் குமாரன்’ என்றுகூட அழைத்தார்! (1 பே. 5:13)

☀ மாற்கு பதிவுசெய்த கிட்டத்தட்ட எல்லா விவரங்களுக்கும் பேதுருவே கண்கண்ட சாட்சி. ஆகவே மற்ற சுவிசேஷங்களில் இல்லாத பல விளக்கக் குறிப்புகள் பேதுருவினிடமிருந்து அவருக்குத் தெரிய வந்திருக்கலாம். உதாரணத்திற்கு,

✍ செபெதேயுவுக்காக வேலைசெய்த ‘கூலியாட்கள்’

✍ குஷ்டரோகி “முழங்கால்படியிட்டு” இயேசுவைக் கெஞ்சிக் கேட்டது

✍ பிசாசுபிடித்த மனிதன் ‘கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டது’

✍ இயேசு “தேவாலயத்துக்கு எதிராக” ஒலிவ மலையின்மீது உட்கார்ந்திருக்கையில் “மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப்” பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தது போன்றவற்றை குறிப்பிடலாம். (மாற். 1:20,40; 5:5; 13:3,26).

☀ பேதுருவைப் பொருத்தவரை அவர் ஆழ்ந்த உணர்ச்சியுள்ளவர். ஆகவே இயேசுவின் உணர்ச்சிகளை அப்படியே மாற்குவுக்கு விவரித்திருந்தார்.

☀ அதன் காரணமாகவே மக்களுக்காக இயேசு பரிதாபப்பட்டு செயல்பட்ட விதத்தை மாற்கு அடிக்கடி தன் பதிவில் குறிப்பிடுகிறார். உதாரணமாக,

✍ அவர் ஆழ்ந்த துக்கமடைந்து...

✍ அவர் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார்...

✍ “மிகவும் மனம்புழுங்கினார்” என்றெல்லாம் அவர் பதிவுசெய்கிறார். (3:5; 7:34; 8:12)

☀ பணம்படைத்த இளம் அதிபதியை அவர் அன்புகூர்ந்தார் என்று சொல்வதன் மூலம் அவன்மீது இயேசுவுக்கிருந்த கனிவான உணர்ச்சியைப் பற்றி மாற்கு மட்டுமே நமக்குச் சொல்கிறார். (10:21)

☀ மேலும் இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தம் சீஷர்களின் நடுவில் நிறுத்தினார் என்று குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், “அதை அரவணைத்து” என்றும், மற்றொரு சந்தர்ப்பத்தில் “பிள்ளைகளை அன்பாக அணைத்து” என்றும் கூறும் விவரத்தில் எத்தகைய அன்புணர்ச்சியை நாம் காண்கிறோம். (9:36; 10:13-16)

☀ இயேசு கெத்செமனேயில் கைது செய்யப்படுகிறார். சீஷர்கள் அனைவரும் அவரைவிட்டு ஓடிவிடுகின்றனர். அப்போது, ‘ஒரு வாலிபர் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு’ அவர் பின் செல்கிறார். கூட்டம் அவரையும் பிடிக்க முயலுகிறது. உடனே ‘அவர் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போகிறார்.’ மாற்குவே இந்த வாலிபராக இருக்கலாம் என பொதுவாய் நம்பப்படுகிறது.

☀ இவர் அப்போஸ்தலருடைய நடபடிகளில் ‘மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான்’ என குறிப்பிடப்படுகிறார்.

☀ அப்.12.12ல் குறிப்பிடப்பட்டுள்ள மாற்குவின் வீட்டிற்கு (மாற்குவின் தகப்பனார் காலத்தில்) இயேசு நமது சீஷர்களுடன் கடைசியாகப் பஸ்காவைப் புசித்தார்.

☀ மாற்கு 14.14 - கெத்செமெனே தோட்டம் அந்த வீட்டுடன் சேர்ந்தது.

☀ 14,13ல் தண்ணீர் குடம் கொண்டு வந்த அந்த மனிதன் மாற்கு என்றும் எண்ணப் படுகிறது.

☀ மாற்கு பர்னபாவிற்கு இனத்தான் (கொலோ.4.10). எருசலேமில் வசித்த மரியாளின் மகன் (அப்.12.12)

☀ பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவுக்குச் சென்ற போது மாற்குவும் அவர்களுடன் சென்று அவர்களின் சுவிசேஷப் பயணத்தில் சேர்ந்து கொண்டார். ஆனால் இடையில் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டார் (அப்.13.1,13).

☀ மாற்கு தன்னை விட்டு விலகிப் போனதாகப் பவுல் நினைத்தார். எனவே, இரண்டாவது சுவிசேஷப் பயணத்தில் மாற்குவைத் தங்களுடன் அழைத்துச் செல்ல பர்னபா விரும்பிய போது பவுல் இதற்கு மறுத்து விட்டார் (அப்.15.38).

☀ எனவே, மாற்குவைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு பர்னபா சீப்புரு தீவுக்குச் சென்றார். பவுல் சீலாவைக் கூட்டிக் கொண்டு போனார்.

☀ சில காலத்திற்குப் பின் பவுல் மாற்குவை மன்னித்துத் தனக்கு உதவியாளராக ஏற்றுக் கொண்டார்.

☀ இயேசு கிறிஸ்துவின் பிரசங்கங்கள், போதகங்கள் ஆகியவற்றின் மீது அல்ல, மாறாக அவருடைய செயல்கள் மீதே மாற்கு கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்.

☀ இயேசுவின் உவமைகளில் சிலவற்றையும், அவருடைய நீண்ட போதனைகளில் ஒன்றையும் மட்டுமே மாற்கு குறிப்பிடுகிறார்.

☀ மலைப்பிரசங்கத்தைப் பற்றிய குறிப்பு இல்லை. மாற்குவின் சுவிசேஷம் சிறியதாக இருப்பதற்கு இதுவே காரணம்.

☀ ஆனால் மற்ற சுவிசேஷங்களைப் போலவே இயேசு செய்த செயல்களைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் இதில் இருக்கின்றன.

☀ குறைந்தபட்சம் 19 அற்புதங்களாவது திட்டவட்டமாய் குறிப்பிடப்பட்டுள்ளன.

☀ இயேசுவின் வம்சாவளி சம்பந்தப்பட்ட விவரத்தை விட்டுவிடுகிறார்.

☀ கிறிஸ்துவின் சுவிசேஷம் உலகளாவிய முக்கியத்துவம் பெற்றது என்பதை காண்பிக்கின்றது.

☀ யூதரல்லாதோருக்கு பரிச்சயமில்லாத யூத பழக்கவழக்கங்கள், போதகங்கள் பற்றி விளக்கக் குறிப்புகளைத் தருகிறது. (2:18; 7:3,4; 14:12; 15:42)

☀ அரமிய சொற்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. (3:17; 5:41; 7:11, 34; 14:36; 15:22,34)

☀ பலஸ்தீனா பகுதியை சார்ந்த பெயர்களுக்கும் தாவரங்களுக்கும் விளக்கம் தருகிறது. (1:5,13; 11:13; 13:3)

☀ யூத நாணயங்களின் மதிப்பை ரோம பணத்தில் குறிப்பிடுகிறது. (12:42)

☀ சுவிசேஷ எழுத்தாளர்களில் மற்றவர்களைப் பார்க்கிலும் மாற்கு அதிக லத்தீன் சொற்களைப் பயன்படுத்துகிறார். உதாரணங்கள்:

✍ ஸ்பெக்குலேட்டர் (சேவகன்)

✍ பிரிட்டோரியம் (அதிபதியின் மாளிகை)

✍ சென்டுரியோ (நூற்றுக்கதிபதி). [6:27; 15:16, 39].

☀ மாற்குவின் சுவிசேஷம் மற்ற சுவிசேஷங்களுடன் மாத்திரமல்ல, ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல் வரையான முழு பரிசுத்த வேதாகம பதிவுடனும் ஒத்திருக்கிறது.

☀ மொத்தம் 16 அதிகாரங்களும், 678 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 14-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 16-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ ‘தேவனுடைய ராஜ்யம்’ என்ற சொற்றொடர் 14 தடவைகள் வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD