பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளின் பாலமாம்
👉👉👉 மல்கியா 👈👈
💎 மூல மொழியாகிய எபிரேயத்தில் “மலாக்கி (Malakhi)” என்று அழைக்கப்படுகிறது.
💎 மல்கியா என்றால் “என்னுடைய தூதன்” அல்லது “கர்த்தருடைய தூதன்” என்று பொருள்படும்.
💎 நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 39-வது புத்தகமாக வருகிறது.
💎 எபிரேய வேதாகமம், கிரேக்க வேதாகமம் மற்றும் அனைத்து மொழி பெயர்ப்புகளுமே மல்கியா புத்தகத்தை சிறிய தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்படுகிற 12 புத்தகங்களில் கடைசியாக வைக்கின்றன.
💎 மல்கியா யார்? அவருடைய வம்சாவளி அல்லது அவரைப் பற்றிய தனிப்பட்ட எந்த விவரமும் வேதத்தில் பதிவு செய்யப்பட்டில்லை.
💎 மல்கியா தீர்க்கதரிசி ஆகாய், சகரியா தீர்க்கதரிசிகளுக்கு பிறகும் நெகேமியாவின் காலத்திலும் வாழ்ந்தவர்.
💎 மல்கியா தீர்க்கதரிசி புத்தகம் பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கம் ஒரு பாலமாக அமைகிறது.
💎 எருசலேமிலுள்ள ஆலயம் திரும்பக் கட்டி முடிக்கப்பட்டு 70-க்கும் அதிகமான ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
💎 பாபிலோனில் நாடு கடத்தப்பட்டவர்களாயிருந்து, திரும்பவும் தங்கள் நாட்டில் வந்து குடியமர்ந்த யூதர்கள் காலம் செல்லச் செல்ல அவர்களிடையே ஆவிக்குரிய காரியங்களைப் பற்றிய ஆர்வம் மிகவும் குறைந்து காணப்பட்டது.
💎 அவர்களுடைய உண்மை நிலையை உணர்த்தி, கடவுளிடம் நெருங்கி வருவதற்கு யார் அவர்களுக்கு உதவுவார்? மல்கியா தீர்க்கதரிசிக்கு அந்தப் பொறுப்பை கர்த்தர் கொடுக்கிறார்.
💎 மல்கியாவின் எழுத்துநடை நேரடியாகவும் சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது. அவர் தான் கூற விரும்பும் கருத்தை முதலில் கூறுகிறார், பின்பு தனக்கு செவிகொடுப்போரின் எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கிறார்.
💎 கடைசியாக, தான் ஆரம்பத்தில் கூறிய கருத்தையே மீண்டும் வலியுறுத்தி கூறுகிறார். இதனால் அவருடைய விவாதம் உறுதியையும் தெளிவையும் பெறுகிறது. அதிக நாவன்மையுடன் பேசுவதற்கு பதிலாக அவர் நேரடியான, சக்திவாய்ந்த விவாத நடையை உபயோகிக்கிறார்.
💎 மொத்தம் 4 அதிகாரங்களும், 55 வசனங்களையும் கொண்டுள்ளது.
💎 3-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 4-வது அதிகாரம் சிறிய அதிகாரமாகவும் உள்ளது.
💎 மல்கியா தீர்க்கதரிசனத்தின் நான்கு அதிகாரங்களில் கர்த்தருடைய பெயர் 48 தடவை குறிப்பிடப்பட்டுள்ளது.
💎 அர்தசஷ்டாவின் 32-ம் ஆண்டாகிய கி.மு. 443-ல் அவர் நெகேமியாவை பாபிலோனுக்கு திரும்ப அழைத்தார். அதற்கு பிறகு நெகேமியா இரண்டாவது முறையாக எருசலேமிற்கு வந்தபோது அங்கிருந்த நிலைமை மல்கியாவின் விவரிப்பிற்கு நன்றாக பொருந்துகிறது.
👉 மல் 2:1;
👉 நெகே 13:6.
💎 இந்தத் தீர்க்கதரிசனம் இந்தக் காலத்திற்கு பொருந்துகிறது என மல்கியாவிலும் நெகேமியாவிலும் காணப்படும் ஒரே மாதிரியான விவரங்கள் நிரூபிக்கின்றன.
👉 மல் 2:4-8,11,12 —
நெகே 13:11,15,23-26;
👉 மல் 3: 8-10 — நெகே 13:10-12.
💎 இப்புத்தகத்தின் முடிவில் மேசியாவின் வருகையையும், யோவான் ஸ்நானகனின் வருகையையும் முன்னறிவிக்கின்றது.
💎 மல்கியா புத்தகத்திலிருந்து புதிய ஏற்பாடு புத்தகங்கள் சிலவற்றிலுள்ள எடுத்துக்காட்டுகள்:-
👉 மல் 1:2,3 —ரோம 9:13.
👉 மல் 3:1 — மத் 11:10 ம்;
லூக் 1:76 ம்; லூக் 7:27.
👉 மல் 4:5, 6— மத் 11:14-ம்;
மத் 17:10-13; மாற் 9:11-13;
லூக் 1:17-ம். கர்த்தருக்கே மகிமையும், கனமும் உண்டாவதாக ஆமென்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக