🌹வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள் 🌹
(Gen. 1:28–30; 2:16, 17) உடன்படிக்கை என்பது பல வாக்குறுதிகளை உள்ளடக்கிய இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கையாகும். இருபகுதினரும் இந்த உடன்படிக்கையைக் காத்துக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டு , உடன்படிக்கை முறிவடையாமல் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இருவரில் ஒருவரின் செயற்பாட்டால் உடன்படிக்கை முறிவடையும் போது இருபகுதியினரும் பாதிக்கப்படுவார்கள்.
💥வேதாகமத்தில் பல உடன்படிக்கைகள் காலத்திற்குக் காலம் ஏற்படுத்தப்பட்டதையும் அதனை மேற்கொண்டு நடந்திருந்தால் ஏற்பட்டிருக்கும் நன்மைகளையும் அவை முறிவடைந்ததால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் அவதானம் செலுத்துவோமாக.
💥1.ஏதேன் தோட்டதில் ஆதாமுடன்செய்யப்பட்ட உடன்படிக்கை.
ஆண்டவர் முதல் மனிதனை உருவாக்கினார். Ge. 1:27அவனை பல்கிப் பூமியை நிரப்பும்படி கட்டளையிட்டார் Ge.1;28அவனுக்கு சகல மீருகங்கள் மீதும் ஆளுகையைக் கொடுத்தார் Ge.1:28தோட்டத்பை பராமரித்து அதில் கிடைக்கும் பலனை அனுபவிக்க் கூறினார். Ge.1;29நன்மை தீமை அறியும் மரத்தின் பழத்தை மட்டும் சாப்பிடவேண்டாம் என்று கூறினார்.. அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்..(Gen 2:16
ஏதேன்தோட்டத்து உடன்படிக்கை மிகவும் முக்கியமானதாகவுள்ளது. இங்கு எல்லாக்கனிகளையும் நீங்கள்புசிக்கலாம், ஆனால் நன்மை தீமை அறிந்து கொள்ளும் விருட்சத்தின் கனிகளை மட்டும் புசிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக சொன்னார். அது மட்டுமன்றி அதைச் சாப்பிட்டால் கண்டிப்பாகச் சாகவே சாவாய் என்று கூறினார். இங்கு இந்த உடன்படிக்கையை மீறும் பொழுது மரணம் நிச்சயம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இங்கு ஆண்டவர் சொல்லாமல் கூறியுள்ள விடயம் ஒன்று மறைந்து காணப்படுகின்றது, அதாவது அந்தக்கனியை மட்டும் நீ சாப்பிடாமல் எனது உடன்படிக்கையைக் காத்து நடந்தால் உனக்கு மரணமே இல்லை என்பதாகும்..ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச்செய்யவேண்டும் என்று அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும்வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும்,வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். Gen 3: 22-24)
இங்கு நாம் உற்றுநோக்கும் போது மிகவும் துக்கமான சம்பவத்தை காணமுடிகிறது. அதாவதுஜீவ்விருட்சத்தின் கனியை புசிப்பதற்குப்பதிலாக தடைசெய்யப்பட்ட பழத்தை உண்டு தனக்குத்தானே மரணத்தை வருவித்த்து மட்டுமல்லாமல் பரம்பரைக்கே மரணத்தைவருவித்துக் கொண்டார்கள். அதாவது முதலில் அவர்களுக்கு ஏற்பட்டது ஆவிக்குரிய மரணமாகும். அதன் விளைவு கர்த்தருடைய ஆவிக்கும் இவர்களுடைய ஆவிக்குமிடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. இன்னும் விளக்கமாக கூறுவதானால் மனிதனுக்கு ஆண்டவரால்கொடுக்கப்பட்ட ஜீவ ஆத்துமாவின் ஒருபகுதியாகிய ஆவியின் செயற்பாடு அணைந்து போயிற்று .பாவம் ஆவியின் செயற்பாட்டை செயலிழக்கச் செய்யும். அதுமட்டுமல்லாமல் அசுத்த ஆவியின் செயற்பாட்டை உள்வாங்க சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆகவே உடன்படிக்கைகளை மீறாமல் வாழ முயற்சி செய்வோம்.
💥உடன்படிக்கை
மேற்கொள்ளப்பட்டிருந்தால் கிடைத்திருக்கும் நன்மை:
1.மரணம் ஏற்பட்டிருக்காது.. நித்திய ஜீவன் ஏற்பட்டிருக்கும்
2.ஏதேன் தோட்டத்திலிருந்துவெளியேற்றப்பட்டிருக்கமாட்டார்கள்.
3.பாவம் அற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்திருப்போம்.4.அனுதினமும் தேவனுடன் பேசிக் கொண்டிருந்திருப்போம்.
💥உடன்படிக்கை முறிவடைந்த்தால் ஏற்பட்ட தீமை .
1.பாவம் ஏற்பட்டது
2.ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டமை.
3.தேவனுக்கும் மனிதனுக்குமிடையில் தொடர்பற்ற நிலை.
4.பிசாசுடன் மனிதனுக்கு தொடர்புகள் ஏற்பட்டமை.
💥ஆதாமுடனான உடன்படிக்கை.மீறப்பட்டதனால் ஏற்பட்ட விளைவு.(Gen. 3:14–19)
ஆதாம் உடன்படிக்கையை ஏதேன் தோட்டத்தில் மீறியதனால்
*சாபம் கொட்கப்பட்டது*
வீழ்ச்சிக்குப்பிற்பாடு கர்த்தர் பழையபாம்பை சபித்தார்,அத்துடன் பாம்பிற்கும் ஏவாளுக்குமிடையில் பகையை உண்டாக்கினார்.அத்துடன் பாம்பிற்கும் கிறிஸ்துவிற்குமிடையில் பகையை உண்டாக்கினார். ( ஸ்திரியின் வித்து கிறிஸ்துவாகும்)சாத்தான் கிறிஸ்துவை காயப்படுத்துவான் என்றும் கிறிஸ்து பாம்பை அழித்துப் போடுவார் என்றும் சாபம் வந்தது.பெண்கள் கணவனின் ஆளுகைக்குள் வருவார்கள் என்றும் பிள்ளை பெறும் போது வேதனையை அனுபவிப்பார்கள் என்றும் சாபமிடப்பட்டது.பூமியான சபிக்கப்பட்டது பயிரிடும் காலங்களில் களைகளின் தொல்லையை அனுபவிப்பான் என்றும் கட்டளையிடப்பட்டது.அவன் மரணமடையும்வரை நெற்றிவியர்வை சிந்தி வாழ்வான் என்றும் கட்டளையிடப்பட்டது.
மேற்கூறிய அத்தனை சாபஉடன்படிக்கைகளும் ஆதாம் உடன்படிக்கையை மீறியதனால் ஏற்பட்ட சாப உடன்படிக்கையாகும். அதாவது ஒவ்வொரு உடன்படிக்கைகளைமீறுதல்களுக்குப் பின்னால் அவை சாபத்தைக் கொண்டுவரும் என்பதை எம்மால் நன்கு உணரக்கூடியதாகவேயுள்ளது. மிகுந்த அவதானத்துடன் உடன்படிக்கைகளைக் காத்துக் கொள்வோம்.
🌹நோவாவுன் செய்த உடன்படிக்கை 🌹
தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக