திங்கள், 4 ஜனவரி, 2016

3 வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்

🌹 வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள் 🌹
-----------------------------------

🌹ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை.🌹
(Gen. 12:1–3; 13:14–17; 15:1–8; 17:1–8)

ஆபிரகாம் தன்னை வணங்கவேண்டும் எனபதற்காகவும் அவர்மூலமாக தன்னை ஆராதிக்கும் ஜாதியொன்றை உருவாக்கவேண்டும் என்பதற்காகவும், அந்த ஜாதியின்மூலம் உலகத்திலுள்ள மற்ற ஜாதிகளெல்லாம் தானே மெய்யானதேவன் என்பதை அறிந்து தன்னை ஆராதிக்க வேண்டும் என்பதற்காகவுமே ஆபிரகாமை ஆண்டவர் தன் விருப்பத்தின்படி தெரிவு செய்தார்.

ஆபிராம்  ஊர் என்னும் தேசத்தில் வாழ்நத போது அவனது தனப்பன் சந்திரவணக்கம் (moon god)செய்பவராக இருந்.தார். அப்படியிருந்தும் ஆண்டவர் அந்தக்குடும்பத்தைத் தன்னை ஆராதிக்கும்படி ஆண்டவர் தெரிவு செய்தார். உன்னையும் அப்படியே ஆண்டவர் தெரிவு செய்துள்ளார் என்பதை  மறந்து போகாதே , அவருக்கு உண்மையாயிருந்து  ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வாயாக. ​ ​ ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை  நிபந்தனையற்றது.ஏனெனில் உடன்படிக்கைக்கா பலியிடப்பட்டபோது கர்த்தர் தாமே தனிமையாக  அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோனார். அங்கு ஆபிரகாம் பங்குபற்றவில்லை. அதனாலே இந்த உடன் படிக்கை நிபந்தனைகள் ஏதும் அற்றது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த உடன்படிக்கை கீழே காணப்படும் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது.

1.       நீ ஆசீர்வாதமாகவிருப்பாய் 12
2உன்பேரைப் பெருமைப் படுத்துவேன் 12:2நீ மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவிருப்பாய்(12:2); எல்லாதேசத்தா ருக்கும் ஆசீர்வாதமாயிருப்பாய்(12:3);உன்னை ஆசீர்வதிப்பவர்களை ஆசீர்வதிப்பேன், சபிக்கிறவர்களைச் சபிப்பேன். 12:3);

கானான் தேசத்தை உனக்குத் தருவேன்( கானான்—பின்பு இஸ்ரவேல் பின்னபு—பாலஸ்தீனம்) 13:14, 15, 17);

6.      உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; 13:16; நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். (17:4 )  உன் சந்ததி வானத்து நட்சத்திரங்களைப்போல் அதிகமாக  இருக்கும் என்றார். 15:5 உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணுவேன் 17:6  உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன் 17:6உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.  17:67.      உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பேன். 17:7

நீயும் ஆண்டவரால் அழைக்கப்பட்டு அவருக்கு உண்மையாய் வாழ்ந்துவந்தால் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத் தத்தங்கள் யாவும் உனக்குரியதாக ஆக்கிக் கொள்ள முடியும்.

ஆபிராம் என்பதன் பொருள் தகப்பன் என்பதாகும் ஆபிரகாம் என்று தேவன் அவரது பெயரை மாற்றினார். அபிரகாம் என்பதன் பொருள் பல ஜாதிகளுக்குத் தகப்பன் என்பதாகும். கிறிஸ்துவை எற்றுக் கொண்டபின்பும் உன்னுடையபெரும் இவ்வாறு மாற்றப்படல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD