திங்கள், 4 ஜனவரி, 2016

2 வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்

🌹வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள் 🌹

💥நோவாவுன் செய்த உடன்படிக்கை (Gen. 8:20–9:27)

ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிற்பாடு ஜனங்கள் பாவம்செய்தபடியால் கர்த்தர் மனுஷனை உண்டாக்கியதற்காக மனஸ்தாப்ப்பட்டார். அதன்பயனாக நோவா என்கிறவரின் குடும்பத்தைத்தவிர மிகுதியானவர்களை உலகத்திலிருந்து அழித்துவிட முடிவு செய்து உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழித்தார்.

பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.

இனி மாம்சமானவைகளெல்லாம்ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவ தில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப் பிரளயம் உண்டாவதில்லை யென்றும், உங்களோடே என் உடன் படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவ ஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடை யாளமாக: நான் என்வானவில்லை மேகத்தில் வைத்தேன்;அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வானவில் மேகத்தில் தோன்றும். அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.

அந்த வானவில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.

இங்கு ஜலப்பிரளயத்தினால் மக்களை அழித்த்தைக்குறித்து அவர் மனதில் சஞ்சலம் கொள்வது போல ஒருதேற்றத்தை நம்மால் அவதானிக்க முடிகிறது. மனிதனின் பாவச் செயல்களை ஏற்றுக் கொள்ளமுடியாமலே அவர்கோபங் கொண்டு மனிதவர்க்கம் அனைத்தையும் அழித்தார்.

நோவாவின் குடும்பத்திற்கூடாகவரும் சந்ததியாவது தன்னை ஆராதிக்கும் என்றும் தன்னோடு தொடர்பில் இருக்கும் என்றும் நம்பினார். அதுமட்டுமல்ல இந்தக்குடும்த்தினூடாகவே *பிந்தின ஆதாமாகிய இயேசுவும்* வரவேண்டியிருந்தபடியால் அவர் நோவா குடும்பத்தைக் காப்பாற்றினார்.

நோவாவிற்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள்.

அதில் காம் என்பவனின் தவறாநடத்தைன காரணமாகச் சபிக்கப்பட்டான். அவன் சேம், யாபெத் என்பவர்களுக்கு அடிமையாகவே ஜீவித்தான்.

சேமுடைய சந்ததியில்
* மேசியா *
பிறப்பதற்கான கிருபையைக் கொடுத்தார்.

யாபேத் விருத்தியாகி சேமுடைய கூடாரங்களில் வாழ்ந்து வந்தான்.

இங்கும் தன்னை ஆராதிக்க மறந்த மக்களையேதேவன் பார்க்கிறார்.

தன்னை ஆராதிக்கும் படி எதிர்பார்த்தவர்கள் ஒருவரையும்  காணவில்லை.

சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும்,
நெருப்பையும் வணங்கும் மக்களையே அவரால் காணமுடிந்த்து.

உருவாக்கிய தேவனை மறந்து அவரால் உருவாக்கப்பட்டவற்றை வணங்குபவர்களையே அவரால் காணமுடிந்தது.

-------- தொடரும் -------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD