ஆலயத்தைக் கட்டுங்கள்
🌹 ஆகாய் 🌹
☀ மூல மொழியாகிய எபிரேயத்தில் “சாகாய் (Chaggai)” என்று அழைக்கப்படுகிறது.
☀ ஆகாய் என்றால் “பண்டிகை [நாளில் பிறந்தவர்]” என அர்த்தப்படுகிறது. அவர் ஒரு பண்டிகை நாளில் பிறந்திருக்கலாம் என இது காட்டுகிறது.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 37-வது புத்தகமாக வருகிறது.
☀ சிறிய தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்படுபவர்களில் ஆகாய் பத்தாவது நபர்.
☀ யூத பாரம்பரியம் கூறுகிறபடி, ஆகாய் பாபிலோனில் பிறந்து செருபாபேலுடனும் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவுடனும் எருசலேமுக்கு திரும்பி வந்தார் என்ற முடிவுக்கு வருவது நியாயமானதே.
☀ பெர்சிய அரசனாகிய தரியு ஹிஸ்டாஸ்பிஸ் ஆட்சிசெய்த இரண்டாம் வருடத்தில், அதாவது கி.மு. 520-ல் ஆகாய் தீர்க்கதரிசனம் உரைக்க தொடங்கினார்.
☀ ஆகாய் சகரியாவோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் உரைத்தார். ஆலய கட்டுமான வேலையைத் திரும்ப துவக்கும்படி சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களை இவர்கள் இருவருமாய் சேர்ந்து உற்சாகப்படுத்துவதை எஸ்றா 5:1-லும் 6:14-லும் வாசிக்கிறோம்.
☀ ஆகாய் தீர்க்கதரிசி, மனதைத் தூண்டுகிற நான்கு செய்திகளை 112 நாட்களுக்குள் அறிவிக்கிறார்.
❶ முதல் செய்தி: “உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்... நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டு வந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின் பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (ஆகாய் 1:7, 8) அதற்கு மக்கள் கீழ்ப்படிகிறார்கள்.
❷ இரண்டாம் செய்தி ஒரு வாக்குறுதியாகும்: கர்த்தராகிய நான் “இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன்.” (ஆகாய் 2:7).
❸ ஆலயத்தைத் திரும்பக் கட்டும் பணியை அலட்சியம் செய்ததால், ‘ஜனங்கள்’ கர்த்தருக்கு முன்பாக அசுத்தமாகி விட்டதோடு, ‘அவர்களுடைய கைகளின் எல்லாக் கிரியைகளும்’ கர்த்தருக்கு முன்பாக அசுத்தமாகி விட்டன. என்றாலும், பழுதுபார்க்கும் வேலை ஆரம்பமாகிற நாள்முதல் கர்த்தர் அவர்களை ‘ஆசீர்வதிப்பார்’ என்பதே அவருடைய மூன்றாம் செய்தி.
❹ ஆகாய் சொல்கிற நான்காம் செய்தியில் குறிப்பிட்டுள்ளபடி, கர்த்தர் “ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து” ஆளுநரான செருபாபேலை “முத்திரை மோதிரமாக” வைப்பார். (ஆகாய் 2:14, 19, 22, 23).
☀ மொத்தம் 2 அதிகாரங்களும், 38 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ 2-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 1-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ 38 வசனங்கள் அடங்கிய ஆகாய் புத்தகத்தில் 35 தடவை கர்த்தருடைய பெயரைக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 14 தடவை “சேனைகளுடைய கர்த்தர்” என்ற தொடர் வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக