வியாழன், 7 ஜனவரி, 2016

ஆவியில்  நடத்தப்படுதல்

🌹ஆவியில்  நடத்தப்படுதல்🌹

புதிய ஏற்பாட்டு காலத்தை பொறுத்தவரை"ஆவியில்  நடத்தப்படுதல்"  என்பது மிகவும்  அவசியமான ஓன்று.  ஏனெனில் புதியஉடன்படிக்கை  கீழிருக்கும் நாம் நியாயபிரமாணத்தை கைகொள்ள கவலைப்படுவது இல்லை. ஆனால்  ஆவியில் நடத்தபடுகிரவர்கள் மட்டுமே நியாயபிரமாணத்துக்கு கீழ்பட்டவர்அல்ல என்று வசனம் சொல்கிறது

கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.

எனவே ஆவியில் நடத்தபடாத எவரும் நியாயபிரமாணத்துக்கு கீழ்பட்டவவரே!  மேலும்

ரோமர் 8:1  கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை

ஆவியில் நடப்பவர்களுக்குதான்  ஆக்கினை தீர்ப்பு இல்லை என்றுவசனம் சொல்கிறது. எனவே இந்த ஆவியில் நடத்தபடுதல் என்றால் என்ன  என்பது  பற்றி  பார்ப்போம்.

முதலில் நாம் பரிசுத்தத் ஆவியின் வரத்தை பெற்றிருக்கிறோமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

💥பரிசுத்தாவியைபெற வேதாகமம் காட்டும் வழிகள்!

வெறும் அந்நியபாஷை பேசுவதை வைத்தோ,  அல்லது ஆராதனை நேரத்தில் ஆடுவதை வைத்தோ ஆவியானவர் வந்திருக்கிறார் என்று உறுதிபடுத்த முடியாது. 
இதுபோன்ற காரியங்களை பிசாசும் சாதாரணமாக செய்துவிட முடியும். ஆவியின் கனிகளை  வெளிப்படுத்தாத  ஆவியானவர் உண்மையான தேவஆவியானவர் அல்ல   பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளை நமது உள்ளத்தில் கேட்கமுடியும் அவரின் வழி நடத்துதலை நம்மால்  அறியமுடியும். அவர் துக்கப்படுவதை நாம் உணரமுடியும். ஆதி  அப்போஸ்த்தலர்களை எப்படி போதித்து /தடுத்து உணர்த்தி/ கண்டித்து நடத்தினான்ரோ அதுபோல் இன்றும் அவரால் நடத்த முடியும்.    

"ஆவியில் நடத்தப்படுதல்"என்பதை  மூன்று வகையாக பிரிக்கலாம்.

1. முழுவதும் தேவ ஆவியால் ஆட்கொண்டு நடத்தபடுதல் 
2. ஆவியானவரின்  கட்டளைபெற்று  அதன்படி நாம் நடத்தல்

3. ஆவியானவரின் நடத்துதல் மற்றும் சுயமாக நடத்தல் இரண்டும் கலந்த நிலை.

💥1. முழுவதும் ஆவியானவரால் ஆட்கொண்டு நடத்தப்படுதல்.

நமது அறிவு, ஆற்றல், விருப்பம், வெறுப்பு எல்லாவற்றையும் ஒரு ஓரத்தில் விட்டு விட்டு ஆண்டவரின் கரத்தில் நம்மை முழுவதுமாக ஒப்புகொடுத்து அவர் என்ன சொன்னாலும் கேட்டு,  ஏன்?  என்று கேள்வி கேட்காமல் எதையும் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே  இந்நிலை நமக்கு  கிடைக்கும். இந்த நிலையை தருவது முழுக்க முழுக்க தேவனின் கரத்தில் இருக்கிறது நாமாக என்ன முயன்றாலும் பெறமுடியாது. தகுதி வாய்ந்தவருக்கு தேவன் கொடுக்கும் ஈவுதான் இந்நிலை. அதாவது நமது அறிவுசார்ந்த நிலையை தள்ளி ஆண்டவரின் கரத்தில் நம்மை முழுவதும் விட்டுவிடுவது.  

இந்நிலையில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆண்டவரே நம்மேல் வந்து தங்கி நம்மை ஆட்கொண்டு நடத்துவார். அவர் நடத்துதலை மீறி நம்மால் ஓன்று செய்ய முடியாது.  நாம் கஷ்டப்பட்டாலும் நஷ்டப்பட்டாலும் அவர் சொல்வதை செய்தே ஆகவேண்டிய ஒரு நிலையில் ஆண்டவரின் கரம் நம்மேல் பலமாக இருக்கும்.

எசேக்கியேல் 3:14  நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும்கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.

நாம் நினைத்ததை செய்யமுடியாது அவர் நினைத்ததே நிறைவேறும்.

அப்போஸ்தலர் 16:7 மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
 

இந்நிலையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும்  தேவனே பொறுப்பு. இந்நிலை பொதுவாக பழையஏற்பாட்டு தீர்க்கத்ரிசிகளாகிய எரேமியா, எசேக்கியேல், ஏசாயா போன்றவர்களின் நிலைக்கு ஒத்தது. புதியஏற்பாட்டுக் காலத்தில் பவுல் மற்றும் பிலிப்பு ஸ்தேவான் போன்றவர்களையும் இதற்க்கு ஒப்பிடலாம். 

 ஏசாயாவுக்கு வஸ்த்திரம் இல்லாமல் நடக்க  சொன்னதுபோல் சில இடங்களில் ஓடுவோம் சில இடங்களில் நடப்போம் சில இடங்களில் படுப்போம் அவர் தூங்கு என்று சொன்னால் தானாக தூங்குவோம். சில இடங்களில் செருப்பை கழற்றி கையில் தூக்கி செல்வோம். (பிறர் பார்த்தால் நம்மை நிச்சயம் பயித்தியம் என்று நினைப்பார்கள் ஆனால் நமக்கு அதைப்பற்றி சிறிதும் கவலை இருக்காது)  

இங்கு ஆண்டவர் அவரது திட்டத்தை நிறைவேற்ற  நம்மை எங்கு கொண்டு செல்ல வேண்டுமோ அங்கு அவரே  கொண்டுசெல்லுவார். அவரது  என்ன திட்டம் நிறைவேறியது என்பதுகூட நமக்கு சரியாக தெரியாது. சில நேரங்களில் அது நமக்கு சொல்லப்படும் சில நேரங்களில் ஒன்றும் சொல்லப்படமாட்டாது.  நமது கீழ்படிதல் மூலம் தேவனின் ஏதோ ஒரு ஆவிக்குரிய திட்டம் அங்கு நிறைவேறும் அவ்வளவுதான்.

இதுவே முழுவதும் ஆவியில்  ஆட்கொண்டு நடத்தப்படுதல். இந்நிலையில் நாம் தேவனின்  கட்டளையை  கைகொண்டு  நடக்க  கவலைப்பட வேண்டிய  அவசியம் இல்லை. அவ்வாறு அராய்ந்து கொண்டிருக்கும் ஒரு  மனபக்குவத்திலும் நாம் இருப்பதில்லை! இது முற்றிலும் தேவ ஆலோசனையின்படி நடத்தப்படுதல். 

சங்கீதம் 73:24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னைநடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

புதிய ஏற்பாட்டு காலத்தில் ஆவியில் நடத்தப்படுதல் என்பது மிக மிக அவசியம் என்று பார்த்தோம். இவ்வாறு ஆவியில் நடத்தப்படுகிறவர்களுக்கு மட்டுமே ஆக்கினை தீர்ப்பு இல்லை என்பதையும்  வசனத்த்தின் அடிப்படையில் பார்த்தோம். மேலும் ஆவியில் நடத்தப்படுதலில் முதல் நிலையில் முற்றிலும் தேவனால் ஆட்கொள்ளப்பட்டு ஒரு எரேமியாபோல ஒரு ஏசாயா/ எசேக்கியேல்போல தேவனின் கரத்தில் நம்மை ஒப்புகொடுத்து அவரால் நடத்தப்படுதல் என்றும் ஆவ்வாறு நடத்தப்படும்போது நாம் தேவனின் கற்பனையை யோசித்து கைகொள்வதற்கு கவலைப்பட தேவையில்லை என்றும் பார்த்தோம். இப்பொழுது ஆவியில் நடத்தப்படுதலின் இரண்டாம் நிலையை பற்றி பார்க்கலாம்.

(இதை  எழுதுவதற்கு 
முக்கிய  காரணம் என்னவென்றால்  பவுல்  அவர்கள் திருமணம் கூட செய்யாமல் மிக பரிசுத்தமாக வாழ்ந்து தேவனுக்காக எதையும் இழக்க துணிந்து ஆவியானவரால் அநேகதரம் முழுமையாக ஆட்கொண்டு நடத்தப்பட்டவர். எனவே அவர் அவருடய பரிசுத்த நிலைக்கு தகுந்தாற்ப்போல் ஆவியானவரின்  வார்த்தைகளை எழுதியிருக்கிறார். இன்று அநேகர் அவருடைய பரிசுத்தத நிலையில் ஒரு துளி கூட இல்லாமல், ஆவியால் நடத்தபடுதல் என்றால் என்னவென்று தெரியாமலேயே, ஆவியால் நடத்தப்படுகிறோம் என்று சொல்லிக் கொண்டு துணிந்து பாவம் செய்து வாழ்கின்றனர். இந்நிலையில் ஆவியால் நடத்தப்படுதல் என்றால் என்னவென்பதை அறிதல் அவசியம் ஆகிறது)

💥  ஆவியில்   நடத்தப்படுதல்   நிலை - II

இந்நிலையில் தேவன் நம்மை  முற்றிலும்  ஆட்கொண்டு நடத்துவது இல்லை. மாறாக அவர் நம்முள் இருந்து நமக்கு கட்டளையிடுவார்  அதன்படி நடப்பதும் நடக்காததும் நமது விருப்பத்தின் அடிப்படையில் இருக்கும் :

உதாரணமாக ஒரு 

1.ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஆண்டவரைப்பற்றி சொல்வது பற்றியோ
2.ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு  காணிக்கை கொடுக்க சொல்வதோ 
3.நமது  உணவை உடையை பிறருக்கு  கொடுகசொல்வதோ 4.ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு நம்மை போகவேண்டாம் என்று தடை செய்வதோ 5.ஒரு குறிப்பிட்ட காரியத்தில் உத்தமத்தை கடைபிடிக்க சொல்வதொவாக கூட இருக்கலாம் 

இதுபோல் வேறு  அனேக காரியங்களில் தேவனின் வழிகாட்டி நடத்தும் செய்கையை நாம் அறியமுடியும். இவ்வாறு ஒருவர் ஆவியானவரால் கட்டளையிட்டு நடத்தப்படும் நேரத்தில் அவர் கற்பனையை கைகொள்வது பற்றி கவலை ப்பட தேவையில்லை. ஆவியானவர் சொல்லும் காரியத்தை மட்டும் சரியாக செய்தால் போதும். ஆனால் ஆவியானவரின் வார்த்தைக்கு கீழ்படியா விட்டால் அவருக்கு தண்டனை நிச்சயம் உண்டு.
அப்போஸ்தலர் 11:12 நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். 

இங்கு ஆவியானவர் பேதுருக்கு கட்டளையிடுகிறார் அதை செய்வதோ அல்லது செய்யாததோ அவரின் சொந்த விருப்பம். பலர் இதுபோல் சூழ்நிலையில் ஆவியானவரின் குரலை அமுக்கிவிட்டு தங்கள் சுயசித்தத்தின்படி நடப்பார்கள் அதற்க்கு தகுந்த காரணமும்   சொல்லிகொள்வார்கள்.  இவ்வாறு ஆவியானவரின் குரலை அசட்டை பண்ணும் நீங்கள் நியாயபிரமாணத்தின்படி  நடந்தாகவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.     

அப்போஸ்தலர் 8:29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;

இங்கு மந்திரிக்கு சுவிசேஷம் சொல்ல  பிலிப்புவுக்கு ஆவியானவரின் கட்டளை கிடைக்கிறது அதை நிறைவேற்றுவதும் நிறைவேற்றாமல் எதாவது சாக்கு சொல்லி சொல்லி தப்பித்து சொல்வதும் பிலிப்புவின் கையில் இருக்கிறது. ஆனால் அவரோ ஓடிப்போய் அவருக்கு சுவிசேஷம் சொல்ல முற்பட்டார்.

சுருக்கமாக சொன்னால்  ஆவியானவர் நம்முள் இருந்து நடத்தி தேவையான நேரங்களில்  கட்டளையிட, நாம் நமது சுய சித்தத்தால் அதன்படி நடப்பதுவே இந்த இரண்டாம் நிலை. இந்நிலையிலும்  நாம்நியாயபிரமாணத்துக்கு கீழ்பட்டவர் அல்ல ஆனால் ஆவியானவரின் வார்த்தையை மீறும்போது நிச்சயம் தண்டனை அனுபவிக்க நேரிடும்.

  *தொடர்ந்து.....வரும் பதிவில்,......*

*ஆவியில்  நடத்தப்படுதல்  மூன்றாம் நிலை!*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...